நாள்பட்ட நோயாளிகளை தொடர்ந்து கவனிக்கவேண்டும்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

Updated : பிப் 25, 2021 | Added : பிப் 25, 2021
Share
Advertisement
கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. தற்போது வைரஸின் வீரியம் குறைந்துள்ள போதிலும் உலக சுகாதார அமைப்பு தொடர்ந்து வைரஸ் குறித்த விழிப்புணர்வை உலக நாட்டு மக்களிடையே ஏற்படுத்திவருகிறது. இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய கிளை ஒர் முக்கியத் தகவலை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு பின்னர் குணமாகிய குடிமக்களின் உடல்

கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. தற்போது வைரஸின் வீரியம் குறைந்துள்ள போதிலும் உலக சுகாதார அமைப்பு தொடர்ந்து வைரஸ் குறித்த விழிப்புணர்வை உலக நாட்டு மக்களிடையே ஏற்படுத்திவருகிறது. இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய கிளை ஒர் முக்கியத் தகவலை தெரிவித்துள்ளது.



latest tamil news



கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு பின்னர் குணமாகிய குடிமக்களின் உடல் ஆரோக்கியத்தை அந்தந்த நாட்டு அரசுகள் கண்காணிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். வைரஸ் தாக்கி வெளியே சென்றதும் பக்க விளைவுகள் ஏதேனும் ஏற்படுகின்றனவா என்று சோதிப்பது அவசியம். மேலும் பத்தில் ஒரு நோயாளிக்கு நோய் தாக்கம் தீவிரமாகிறது.
இது நாள்பட்ட ஒவ்வாமை அல்லது நோய் தாக்கத்தை ஏற்படுத்தும் என மருத்துவ விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்யவேண்டும் என்று கூறியுள்ளனர்.
கொரோனா நோயாளிகளில் சிலருக்கு இருதயக் கோளாறு, நரம்பு கோளாறு, மூளை பாதிப்பு, அசதி, உடல் வலி ஆகியவை ஏற்படுகின்றன. இதுகுறித்து விரிவான ஆராய்ச்சி தேவை என்று கூறியுள்ளது.


latest tamil news



இதுகுறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் உலக சுகாதார அமைப்பு ஐரோப்பா பிரிவு இயக்குனர் பேன்ஸ் கிரெட்ஸ் பேசினார்.
கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஏற்படும் நாள்பட்ட நோய்கள் குறித்த கலந்தாலோசனைக்காக ஐரோப்பிய கண்டத்தில் உள்ள 53 நாடுகளின் பிரதிநிதிகளை ஒன்றுகூட்ட உள்ளதாக அவர் தகவல் அளித்துள்ளார்.
கொரோனா வைரஸ் வீரியம் குறைந்துவிட்டதால் அது பாதிப்பை ஏற்படுத்தாது என்று நினைக்காமல் தொடர்ந்து வைரஸ் உடலுக்குள் ஏற்படுத்தும் தாக்கத்தினை ஆராயவேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X