பொது செய்தி

இந்தியா

3-வது டெஸ்ட் : இந்தியா வெற்றி

Updated : பிப் 25, 2021 | Added : பிப் 25, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
ஆமதாபாத்: இங்கிலாந்திற்கு எதிரான 3-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில்இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி ஆமதாபாத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் 2வது இன்னிங்சில் 49 ரன்கள் மட்டுமே இந்தியா எடுக்க வேண்டியிருந்தது. இதனையடுத்து விக்கெட் இழப்பின்றி 49 ரன்கள் எடுத்து 10 விக்கெட்வித்தியாசத்தில் இந்தியா வெற்றிபெற்றுள்ளது. இதனையடுத்து

ஆமதாபாத்: இங்கிலாந்திற்கு எதிரான 3-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில்இந்தியா வெற்றி பெற்றுள்ளது.



latest tamil news



இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி ஆமதாபாத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் 2வது இன்னிங்சில் 49 ரன்கள் மட்டுமே இந்தியா எடுக்க வேண்டியிருந்தது. இதனையடுத்து விக்கெட் இழப்பின்றி 49 ரன்கள் எடுத்து 10 விக்கெட்வித்தியாசத்தில் இந்தியா வெற்றிபெற்றுள்ளது. இதனையடுத்து இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட்போட்டியில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.


தொடரில் முன்னிலை



சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்திய 3 வது டெஸ்ட்போட்டி இரண்டே நாளில் முடிவுக்கு வந்தது. இதனையடுத்து இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா 2 1 என முன்னிலை வகிக்கிறது. ஆமதாபாத் டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் அக்சர்படேல் அபாரமாக பந்து வீசி 11விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி உள்ளார்.


ரசிகர்கள் ஏமாற்றம்



டெஸ்ட்போட்டி இரண்டே நாளில் முடிவுக்கு வந்துள்ளதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.


இங்கிலாந்து அதிருப்தி



அகமதாபாத் ஆடுகளம் குறித்து இங்கிலாந்து அணியினர் அதிருப்தி அடைந்துள்ளனர். முதல்நாள் போட்டியில் 13 விக்கெட்டுகளும் இரண்டாவது நாள் போட்டியில் 17 விக்கெட்டுகளும் விழுந்ததால் ஆடுகளம் மீது இங்கிலாந்து அணியினர் அதிருப்தி தெரிவித்து உள்ளனர்.


latest tamil news



1950 ம் ஆண்டிற்கு பின்னர் குறைந்தநாளில் முடிந்த போட்டிகளில் ஏழாவது போட்டிஇதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sivaram - Chennai,இந்தியா
26-பிப்-202105:54:08 IST Report Abuse
Sivaram மைதானம் பொதுவானது. இங்கிலாந்திற்கு திறமை இல்லை. இந்திய வீரர்களுக்கு உள்ளம் கனிந்த வாழ்த்துகள்
Rate this:
Cancel
s t rajan - chennai,இந்தியா
25-பிப்-202122:31:16 IST Report Abuse
s t rajan ICC இந்த மாதிரி போட்டி முடிவுகளை கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது. Root எல்லாம் 5 wicket எடுக்கிறார் என்றால், விளையாடுகளம் எவ்வளவு தரம் தாழ்ந்தது ? இன்று நடந்தது கிரிக்கெட் கொலை என்று தான் சொல்ல வேண்டும்.
Rate this:
Cancel
25-பிப்-202122:13:00 IST Report Abuse
theruvasagan ரெண்டே நாள்ள ஆட்டம் ஓவர். அஞ்சு நாளும் டெஸ்ட் மேட்ச் நடக்கணும்னு ஆசைப்பட்டவங்க வாயில மண்ணு. மேட்ச் ஃபிக்ஸிங் பழைய சமாசாரம். இப்பல்லாம் பிட்ச் ஃபிக்ஸிங்கில இறங்கிட்டாங்க போல. தரமான களம். தரமான விளையாட்டு. ஆரோக்கியமான போட்டி. இதல்லாம் இப்ப குறுக்குவழியில சம்பாதிக்க நினைக்கும் காசுக்கும் பேருக்கும் புகழுக்கும் பலிகடாவாகிவிட்டன.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X