தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீடு அருகே நின்றிருந்த காரில் வெடிபொருள்

Updated : பிப் 25, 2021 | Added : பிப் 25, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
மும்பை: பிரபல தொழிலதிபர் அம்பானி வீட்டின் அருகே நின்றிருந்த காரில் பயங்கர வெடிபொருள் கண்டறியப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி, இவரது வீடு மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை பீடார் சாலையில் ஆன்டிலியாவில் உள்ளது. இவரது வீட்டின் வெளி வளாகத்தில் பந்தயத்திற்கு பயன்படுத்தப்படும் கார் அனாதையாக நின்றிருந்தது. காரில் வெடிபொருள்
SUV with explosive material caught near Mukesh Ambani's house Antilia in Mumbai

மும்பை: பிரபல தொழிலதிபர் அம்பானி வீட்டின் அருகே நின்றிருந்த காரில் பயங்கர வெடிபொருள் கண்டறியப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி, இவரது வீடு மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை பீடார் சாலையில் ஆன்டிலியாவில் உள்ளது. இவரது வீட்டின் வெளி வளாகத்தில் பந்தயத்திற்கு பயன்படுத்தப்படும் கார் அனாதையாக நின்றிருந்தது.


latest tamil news


காரில் வெடிபொருள் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, வெடிகுண்டு செயல் இழக்க செய்யும் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, தீவீர சோதனை நடத்தி வருகின்றனர். முன்னதாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கார் அருகே பொதுமக்கள் யாரும் செல்லவிடாமல் பாதுகாப்பு வளையம் அமைத்தனர். தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது.

தகவல் அறிந்த மஹாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், உரிய விசாரணை நடத்தி அறிக்கை தருமாறு மும்பை குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.


Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
26-பிப்-202106:12:20 IST Report Abuse
Mani . V சரி, இப்ப என்ன வருங்கால இந்தியாவின் முதலாளிக்கு எக்ஸ் பிளஸ், ஒய் பிளஸ், இஸட் பிளஸ் பாதுகாப்பு வேண்டும் அவ்வளவுதானே?
Rate this:
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
26-பிப்-202103:09:34 IST Report Abuse
Rajagopal ஐயோ ஐயோ மோடி அரசு ஒழிக இப்ப யாருய்யா அராஜகம் செய்றது?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X