பொது செய்தி

இந்தியா

விவசாய போராட்டத்தில் திருப்பம்: ராகேஷ் திகாயத் கைதாகிறார்

Updated : பிப் 27, 2021 | Added : பிப் 25, 2021 | கருத்துகள் (16)
Share
Advertisement
டில்லியில் நடக்கும் விவசாய போராட்டங்களின் முக்கிய முகமான ராகேஷ் திகாயத், வெகு விரைவில் கைது செய்யப்படலாம் என்று, தகவல்கள் தெரிவிக்கின்றன.வேளாண் சட்டங்களை எதிர்த்து, டில்லி நகரத்தின் நுழை வாயில்களில், ஏராளமான விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல சுற்றுப் பேச்சு நடந்தும், எந்தவொரு தீர்வும் எட்டப்படவில்லை. நடவடிக்கை கடந்த வாரம், உள்துறை அமைச்சர்
Formers Protest, New Agri Bills, arrest, விவசாய போராட்டம், திருப்பம்

டில்லியில் நடக்கும் விவசாய போராட்டங்களின் முக்கிய முகமான ராகேஷ் திகாயத், வெகு விரைவில் கைது செய்யப்படலாம் என்று, தகவல்கள் தெரிவிக்கின்றன.

வேளாண் சட்டங்களை எதிர்த்து, டில்லி நகரத்தின் நுழை வாயில்களில், ஏராளமான விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல சுற்றுப் பேச்சு நடந்தும், எந்தவொரு தீர்வும் எட்டப்படவில்லை.


நடவடிக்கை


கடந்த வாரம், உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் டில்லி, ஹரியானா, மற்றும் பஞ்சாப் மாநிலங்களின், பா.ஜ., முக்கிய நிர்வாகிகள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடந்தது. 'விவசாயப் போராட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தால் தான், எங்கள் பகுதிகளில் கட்சியின் செல்வாக்கை நிலைநிறுத்த முடியும்' என, அதில் பலரும் வலியுறுத்தினர்.

இதற்கிடையில், விவசாய சங்கத் தலைவர்கள், போராட்டத்தை தீவிரப்படுத்தும் நோக்கில், பல்வேறு மாநிலங்களுக்கும் சென்று, விவசாயிகளின் ஆதரவை திரட்ட முடிவு செய்து, அதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.இவர்களில், முக்கியமானவர் ராகேஷ் திகாயத். இந்த போராட்டத்தின் மிக தீவிர முகமாகவும், மிகுந்த செல்வாக்கும் உடையவருமான இவர் தான், போராட்டம் தொடர்பாக, ஊடகங்களில் பேட்டியளித்தும், பேசியும் வருகிறவர்.

இந்நிலையில் தான், மத்திய பிரதேச மாநிலம் அனுப்பூர் என்ற இடத்தில், 2012ல் நடந்த போராட்டத்தில் பங்கேற்றதற்காக, கொலை முயற்சி, வன்முறை, போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.


'வாரன்ட்'


அந்த வழக்கில், அப்போதே அவர் ஜாமினில் விடுபட்டிருந்தாலும், 2016லிருந்து, அடுத்தடுத்த விசாரணைகளுக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதன் காரணமாக, தற்போது, ம.பி., அரசின் சார்பில், 'பிடி வாரண்ட்' பிறப்பிக்கப்பட்டுள்ளது.எனவே, இதையே சரியான வாய்ப்பாக பயன்படுத்தி, ம.பி.,க்கு வரும்போதோ அல்லது அதற்கு முன்னதாகவோ, ராகேஷ் திகாயத்தை கைது செய்ய, அம்மாநில போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

- நமது டில்லி நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
26-பிப்-202118:41:28 IST Report Abuse
J.V. Iyer சமூக விரோதிகளை, பொதுமக்களுக்கு இடையூறு செய்வபர்களையும் சிறையில் ஆயுளுக்கும் அடைக்க சரியான சட்டம் வேண்டும்.
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
26-பிப்-202117:14:59 IST Report Abuse
Endrum Indian விவசாயி இல்லவே இல்லை இவன் சொத்து மதிப்பு ரூ 300 கோடி இவன் குறு விவசாயி ?????? இவனுக்கு முட்டு கொடுப்பது இந்திய இறையாண்மையை எதிர்ப்பதற்கு சமம் என்று கூட தெரியாத மூர்க்கன்கள் பாவாடைகள் திராவிடங்கள் முஸ்லீம் நேரு காங்கிரஸ் போன்ற கட்சிகள் கொஞ்சம் கூட சுய அறிவே கிடையாதே இவர்களுக்கு. எப்படியாவது மோடிக்கு எதிராக பேசவேண்டும் இவ்வளவு கேவலமா உங்கள் வாழ்க்கை நெறிமுறை. எனக்கு சுதந்தரம் வேண்டும் போராட பேச , செய் அனால் அதே சுதந்திரம் எனக்கும் வேண்டும் தானே???என்னை (அதாவது சாதாரண மக்களுக்கு தொந்தரவாக இருப்பது) தொந்தரவு செய்வது உனது சுதந்திரமா???தனி திடலுக்கு செல் அங்கு உண்ணாவிரதம் இரு போராடு அதுவும் உண்மையாக. நீ விவசாயி இல்லவே இல்லை இந்த சட்டம் இடை தரகர்களுக்கு எதிரான விவசாயிகளுக்கு ஆதரவான சட்டம் இதை எதிர்த்து விவசாயி போராடுவானாம்????என்ன காதிலே பூ சுத்தி விடறீங்க?????இவனை "தவறு கண்டேன் சுட்டேன்" சட்டம் கொண்டு வாருங்கள் அவனவன் நல்ல நேர் வழியில் பயணிக்க ஆரம்பிப்பான்
Rate this:
Cancel
Sriram V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
26-பிப்-202116:27:26 IST Report Abuse
Sriram V He is our enemies agent and working against the people of India. Wake up
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X