பொது செய்தி

இந்தியா

சமூக ஊடகங்கள், ஓ.டி.டி., தளங்களுக்கு கட்டுப்பாடு

Updated : பிப் 27, 2021 | Added : பிப் 25, 2021 | கருத்துகள் (7+ 12)
Share
Advertisement
புதுடில்லி : 'டுவிட்டர், பேஸ்புக், வாட்ஸ் ஆப்' போன்ற சமூக ஊடகங்கள், 'நெட்ப்ளிக்ஸ், அமேசான் பிரைம்' போன்ற, ஓ.டி.டி., தளங்கள் மற்றும் செய்தி இணையதளங்களை கட்டுப்படுத்த, அதிரடியான ஒழுங்கு விதிமுறைகளை மத்திய அரசு வகுத்துள்ளது.டுவிட்டர், பேஸ்புக், வாட்ஸ் ஆப் போன்ற சமூக ஊடகங்களில், நாட்டின் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் எதிரான தகவல்கள் பரப்பப்படுவதோடு, வெறுப்புணர்வை
சமூக ஊடகங்கள், ஓடிடி தளங்கள், கட்டுப்பாடு, ஒழுங்குமுறை

புதுடில்லி : 'டுவிட்டர், பேஸ்புக், வாட்ஸ் ஆப்' போன்ற சமூக ஊடகங்கள், 'நெட்ப்ளிக்ஸ், அமேசான் பிரைம்' போன்ற, ஓ.டி.டி., தளங்கள் மற்றும் செய்தி இணையதளங்களை கட்டுப்படுத்த, அதிரடியான ஒழுங்கு விதிமுறைகளை மத்திய அரசு வகுத்துள்ளது.

டுவிட்டர், பேஸ்புக், வாட்ஸ் ஆப் போன்ற சமூக ஊடகங்களில், நாட்டின் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் எதிரான தகவல்கள் பரப்பப்படுவதோடு, வெறுப்புணர்வை துாண்டும் பொய்யான பிரசாரங்களால் கலவரம் துாண்டப்படுவதாக, புகார் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

கடந்த மாதம், குடியரசு தினத்தன்று டில்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியின் போது, கலவரம் வெடித்தது. 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில் பரப்பப்பட்ட சில தவறான தகவல்களால், கலவரம் துாண்டப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து, தவறான தகவல்களை பரப்பிய, 1,500 டுவிட்டர் கணக்குகளை முடக்கும்படி, அந்நிறுவனத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை செயல்படுத்த, டுவிட்டர் நிறுவனம் மறுத்தது. இதையடுத்து, 'கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, மத்திய அரசு எச்சரித்த பின், அந்த கணக்குகள் முடக்கப்பட்டன.




மிகப் பெரிய சந்தை


இந்த சம்பவத்தை அடுத்து, சமூக வலைதளங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க, மத்திய அரசு தீவிரமாக ஆலோசிக்கத் துவங்கியது.

இந்நிலையில், டுவிட்டர், பேஸ்புக், வாட்ஸ் ஆப் போன்ற சமூக ஊடகங்களுக்கு மத்திய சட்ட அமைச்சகம், ஒழுங்குமுறை விதிகளை வகுத்து உள்ளது. ஓ.டி.டி., எனப்படும், 'ஆன்லைன்' வாயிலாக பொழுது போக்கு நிகழ்ச்சிகளை தயாரித்து, ஒளிபரப்பி வரும், நெட்ப்ளிக்ஸ், அமேசான் பிரைம் போன்ற தளங்களுக்கு, மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சம், விதிகளை வகுத்துள்ளது.

இது குறித்து, மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: 'ஸ்மார்ட் போன்'களின் விலை கடுமையாக சரியத் துவங்கியதை அடுத்து, சமூக ஊடகங்களின் மிகப் பெரிய சந்தையாக இந்தியா உருவெடுத்துள்ளது. சமூக ஊடக நிறுவனங்கள், எங்கள் நாட்டில் வியாபாரம் நடத்தி, இந்தியர்களை மேம்படுத்துவதை வரவேற்கிறோம்.சமூக ஊடகங்கள் வாயிலாக வெளிப்படும் விமர்சனங்களையும், கருத்து வேறுபாடுகளையும், நாங்கள் எதிர்க்கவில்லை. அதே நேரம், அதில் பகிரப்படும் தகவல்கள் தொடர்பாக அளிக்கப்படும் புகார்களை, வரையறைக்கு உட்பட்ட நேரத்திற்குள் தீர்த்து வைக்க, அமைப்பை ஏற்படுத்துவதும் அந்நிறுவனங்களின் கடமையாகும்.

எனவே, சமூக ஊடக சேவைகளை வழங்கும் நிறுவனங்களான இடைத்தொடர்பாளர்களை, சமூக ஊடக இடைத் தொடர்பாளர்கள் மற்றும் குறிப்பிடத்தக்க சமூக ஊடக இடைத் தொடர்பாளர்கள் என, இரண்டு வகையாக பிரித்து உள்ளோம்.இதன் இரண்டுக்குமான வேறுபாடு, அந்த குறிப்பிட்ட சமூக ஊடகத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையின் அடிப்படையில் வரையறுக்கப்படும். அந்த எண்ணிக்கையின் அளவு குறித்து விரைவில் அறிவிக்கப்படும்.


புகார் விபரங்கள்



அனைத்து சமூக ஊடக நிறுவனங்களும், தலைமை இணக்க அதிகாரி, தொடர்புக்கான தனி அதிகாரி, குறை தீர்க்கும் பிரிவு அதிகாரி ஆகியோரை நியமிக்க வேண்டும். இந்த மூவரும், உள்நாட்டிலேயே நியமிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு மாதமும், கிடைக்கப்பெற்ற புகார் விபரங்கள், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை, நீக்கப்பட்ட பதிவுகள், செய்திகளின் விபரங்கள் குறித்து, விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். முறையான புகார்கள் மீது, 36 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு எதிரான செய்தி பகிரப்பட்டால், அது முதன் முதலில் எங்கிருந்து யாரால் பகிரப்பட்டது என்ற தகவலை அரசுக்கு தெரிவிக்க வேண்டும். ஒருவரது பதிவை, சமூக ஊடக நிறுவனங்கள் தன்னிச்சையாக நீக்க விரும்பினால், அதுகுறித்து பயனாளருக்கு முன்னதாகவே தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும், அந்த பதிவு எதற்காக நீக்கப்படுகிறது என்ற விளக்கத்தையும் அளிக்க வேண்டும். சமூக ஊடக பயனாளர்கள் தங்கள் கணக்குகளை சரிபார்க்க விரும்பினால், அதை அவர்கள் செய்து கொள்வதற்கு தேவையான வழிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


ஓ.டி.டி., விதிமுறை என்ன?


ஓ.டி.டி., தளங்கள் மற்றும் செய்தி இணைய தளங்களுக்கான கட்டுப்பாடு விதிமுறைகள் குறித்து, மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறியதாவது:
ஓ.டி.டி., தளங்களில் வெளியாகும் திரைப்படங்கள், வலைத்தொடர்கள் உள்ளிட்ட உள்ளடக்கங்கள், ஐந்து வகையான வயதினருக்கு ஏற்ப வகைப்படுத்தப்பட வேண்டும். 'யு, யு/ஏ 7+, யு/ஏ 13+, யு/ஏ 16+ மற்றும் ஏ' என, ஐந்து வகையாக பிரிக்க வேண்டும். இதில், 13 வயதுக்கு மேற்பட்டவர்கள் பார்க்கும் உள்ளடக்கங்கள், 'பேரன்டல் கன்ட்ரோல்' எனப்படும், பெற்றோர் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் விதமாக அமைக்க வேண்டும்.

பெரியவர்கள் மட்டும் பார்க்கும், 'ஏ' வகை உள்ளடக்கங்கள், பார்வையாளரின் வயதை உறுதி செய்த பின்னரே ஒளிபரப்பாகும்படி அமைக்க வேண்டும். குறிப்பிட்ட உள்ளடக்கம், எந்த வயதினருக்கானது என்ற அறிவிப்புக்கு, திரையில் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.

செய்தி இணையதளங்களின் உள்ளடக்கங்களில், இந்திய பிரஸ் கவுன்சிலின் செய்தியாளர் நடத்தை விதிமுறைகளும், கேபிள் 'டிவி' ஒழுங்குமுறை சட்டத்தின் நிகழ்ச்சி விதிகளும் பின்பற்றப்பட வேண்டும்.வதந்திகளை பரப்ப, 'டிஜிட்டல்' ஊடகங்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை. நியாயமான கட்டுப்பாடுகளுடனேயே ஊடக சுதந்திரம் என்பது கையாளப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (7+ 12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
26-பிப்-202118:17:02 IST Report Abuse
தமிழ் எல்லாவகையான சமூக ஊடகங்களிலும் பிஜேபி அரசாங்கத்தை சகட்டுமேனிக்கு திட்டுவதால் அதை பொறுத்துக்கொள்ளமுடியாத அரசு தன் தவறை திருத்திக்கொள்ளாத அரசு அவற்றுக்கு கட்டுப்பாடு விதிப்பதில் என்ன நியாயம்.
Rate this:
Cancel
வெற்றி நமதே: தடுப்பூசி போட்டுக் கொள்வோம் - தடுப்பூசியால் எவ்வித ஆபத்தும் இல்லை” ,இஸ்ல் ஆப் மேன்
26-பிப்-202112:32:40 IST Report Abuse
வெற்றி நமதே: தடுப்பூசி போட்டுக் கொள்வோம் தமிழர்களே ஒன்று நினைவு கொள்ளுங்கள் , இங்கு எவ்வளவு நாள் முஸ்லீம் இருக்கிறானோ அப்போ வரை தான் தமிழனுக்கு மதிப்பு , அவன் பாகிஸ்தான் பொய் விட்டால் , அப்புறம் பிராமின் , வைசியன் சத்ரியன் ,இப்படி தாழ்த்தப்பட்டவன் என்று ஹிந்துக்கள் கத்தியை தமிழனுக்கு எதிரே திருப்பிவிடுவார்கள் , ஆகவே தமிழர்கள் ஹிந்துகளிடம் உஷாரா இருக்கனும் , இப்போ கனடாவில் தமிழன் என்று தான் சொல்லுகிறோம் ஹிந்து இல்லை , அமெரிக்காவில் தமிழ் சபை தான் ஹிந்து சபை இல்லை , இந்தியாவில் மட்டும் தான் ஹிந்து என்று சொல்லி தமிழர்களை ஏமாற்றுகிறார்கள் உசார் இதற்ற்கு அவர்களுக்கு மதம் ஜாதி தேவை , விழித்து கொள்ளுங்கள்
Rate this:
Cancel
sahayadhas - chennai,பஹ்ரைன்
26-பிப்-202111:49:13 IST Report Abuse
sahayadhas அரசியல் வாதிகள் தங்களுக்கான பாதுகாப்பில் எப்போதுமே உஷார் .ஜனக்களுக்கு தான் ஒன்றும் புரியாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X