அரசியல் செய்தி

தமிழ்நாடு

விஜயகாந்த் குடும்பமே போட்டி கட்சியினர் விருப்ப மனு

Added : பிப் 25, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
சென்னை:விஜயகாந்த் மற்றும் அவரது குடும்பத்தினர் போட்டியிட வலியுறுத்தி, தே.மு.தி.க.,வினர் விருப்ப மனு அளித்தனர்.சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் தொடர, தே.மு.தி.க., தலைமை முடிவு செய்துள்ளது. ஆனாலும், அதிகாரபூர்வ கூட்டணி பேச்சு துவங்கவில்லை.இந்நிலையில், போட்டியிட விரும்பும், தே.மு.தி.க.,வினரிடம் விருப்ப மனு பெறும் நிகழ்வு, துவங்கியது. கட்சியின் பொருளாளர் பிரேமலதா,
 விஜயகாந்த் குடும்பமே போட்டி கட்சியினர் விருப்ப மனு

சென்னை:விஜயகாந்த் மற்றும் அவரது குடும்பத்தினர் போட்டியிட வலியுறுத்தி, தே.மு.தி.க.,வினர் விருப்ப மனு அளித்தனர்.

சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் தொடர, தே.மு.தி.க., தலைமை முடிவு செய்துள்ளது. ஆனாலும், அதிகாரபூர்வ கூட்டணி பேச்சு துவங்கவில்லை.இந்நிலையில், போட்டியிட விரும்பும், தே.மு.தி.க.,வினரிடம் விருப்ப மனு பெறும் நிகழ்வு, துவங்கியது. கட்சியின் பொருளாளர் பிரேமலதா, மாநில துணை செயலர்கள் சுதீஷ், பார்த்தசாரதி ஆகியோர் துவக்கி வைத்தனர்.

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், சென்னையில் விருகம்பாக்கம் தொகுதி; பிரேமலதா, விருத்தாச்சலம்; மகன் விஜயபிரபாகரன், அம்பத்துார்; சுதீஷ், மதுரவாயல் மற்றும் ஆம்பூர் தொகுதியில் போட்டியிட, கட்சியினர் விருப்ப மனு அளித்தனர்.கூட்டணி இன்னும் முடிவாகாததால், விருப்ப மனு அளிப்பதற்கு, தே.மு.தி.க., நிர்வாகிகள் பலரும் ஆர்வம் காட்டவில்லை. இதனால், முதல் நாளில், எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
27-பிப்-202111:44:28 IST Report Abuse
Malick Raja மேகமாவா இருக்குது . கூட்டமா வாரங்களே .. என்ன இது சத்தமா கேட்க்கூது ... அப்பூடியா சங்கதி .. என்ற நகைசுவை .. வடிவேல் காமெடி சரியாக மேட்ச் ஆகலாம் ..
Rate this:
Cancel
ponssasi - chennai,இந்தியா
27-பிப்-202111:05:53 IST Report Abuse
ponssasi இப்போதெல்லாம் தொண்டர்கள் உஷாராகிவிட்டனர், யாரும் அவர் அவர்கள் போட்டியிட மனு அளிக்கவில்லை, முதல்ல தலைவர் குடும்பத்துக்கு ஆப்பு.
Rate this:
Cancel
ANANDAKANNAN K - TIRUPPUR,இந்தியா
26-பிப்-202116:35:04 IST Report Abuse
ANANDAKANNAN K விஜயகாந்த் என்று பேசாமல் இருந்தாரோ அன்று முதல் தேமுதிக கட்சி அழிவு பாதையில் செல்கிறது, அதிமுக இவர்களை கூட்டணிக்கு கடைசியாக வர சொல்லும், அப்போ இவர்களுக்கு சிங்கள் டிஜிட்டல் சீட் தான், இவர்கள் கட்சியை நம்பி தேர்தலில் நின்றாள் சங்கு தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X