தேர்தல் களம் 2021

தமிழ்நாடு

54 குடுங்க போதும்! 12 தர்றோம்,போங்க: காங். - தி.மு.க.,பேச்சில் 'காமெடி'

Updated : பிப் 27, 2021 | Added : பிப் 25, 2021 | கருத்துகள் (48)
Share
Advertisement
முதல் சுற்று பேச்சில், தி.மு.க., - காங்கிரஸ் இடையே உடன்பாடு ஏற்படவில்லை. 54 கேட்ட காங்கிரசுக்கு, 12 தான் என்கிறதாம், அறிவாலயம். வேக வேகமாக, சத்தியமூர்த்தி பவனுக்கு திரும்பிய காங்கிரசார், பசி எடுக்கும் வரை பேசினர். 40 க்கு குறைய வேண்டாம் என, முடிவு செய்து, மறுபடியும் பேச்சுக்கு போக காத்திருக்கின்றனர். அறிவாலயத்தில் நடந்த பேச்சில், கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, மேலிட
Congress, DMK, Tamil Nadu Assembly Polls, Alliance

முதல் சுற்று பேச்சில், தி.மு.க., - காங்கிரஸ் இடையே உடன்பாடு ஏற்படவில்லை. 54 கேட்ட காங்கிரசுக்கு, 12 தான் என்கிறதாம், அறிவாலயம். வேக வேகமாக, சத்தியமூர்த்தி பவனுக்கு திரும்பிய காங்கிரசார், பசி எடுக்கும் வரை பேசினர். 40 க்கு குறைய வேண்டாம் என, முடிவு செய்து, மறுபடியும் பேச்சுக்கு போக காத்திருக்கின்றனர்.

அறிவாலயத்தில் நடந்த பேச்சில், கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி, சட்டசபை காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி, காங்., தரப்பில் பங்கேற்றனர்.தி.மு.க., தரப்பில், பொதுச்செயலர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, மகளிர் அணி செயலர் கனிமொழி, முதன்மை செயலர் கே.என்.நேரு, கையில் பட்டியலுடன் இருந்தனர்.

அறிவாலயத்துக்குள் காங்கிரஸ், 'டீம்' நுழைந்ததில் இருந்து, திரும்பி வரும் வரை ஆன நேரம், 40 நிமிடங்கள். அதில், வடை, காபி சாப்பிட, 20 நிமிடம். சாப்பிட்டு கொண்டே பேசினாலும், எவ்வளவு பேரம் நடந்திருக்க முடியும் என, கரும்பலகையில் கணக்கு எழுதி காட்டுகிறது, சத்திய மூர்த்தி பவன் வட்டாரம்.

தி.மு.க. - காங்கிரஸ் இடையே முதல் சுற்று பேச்சில் உடன்பாடு ஏற்படவில்லை. 54 கேட்ட காங்கிரசுக்கு, 12 தான் என்கிறதாம் அறிவாலயம். அறிவாலயத்தில் நடந்த பேச்சில், கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி, சட்டசபை காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி ஆகியோர் காங்கிரஸ் தரப்பில் பங்கேற்றனர். தி.மு.க., தரப்பில், பொதுச்செயலர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, மகளிர் அணி செயலர் கனிமொழி, முதன்மை செயலர் கே.என்.நேரு கையில் பட்டியலுடன் இருந்தனர்.

தோண்டி, துருவி விசாரித்தபோது தெரிந்தது, காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட, ஒன்பது லோக்சபா தொகுதிகள் அடிப்படையில், 9 x 6 கணக்கில், 54 சட்டசபை தொகுதிகள் வேண்டும் என, காங்கிரஸ் கேட்டுள்ளது. அவர்கள் கொடுத்த தொகுதி பட்டியலை, ஒரு 'கிளான்ஸ்' கூட பார்க்காமல், 'வி வில் கிவ் யு 12 சீட்ஸ்' என்றது, அறிவாலய, 'டீம்'. காங்கிரஸ் குழுவில் தமிழ் தெரியாதவர்கள் அதிகம் இல்லையா, அவர்கள் வசதிக்காக இந்த ஆங்கில பரிமாற்றம்.

எல்லாம், பேசி ஒத்திகை பார்த்த வசனங்கள் தான்.நரியை பரியாக்கிய ஈசனே வந்தால் தான், 12ஐ, 54 ஆக்க முடியும் என்பதால், காங்., 'டீம்' புறப்பட்டது. பிளேட்டில் வடையும் கோப்பையில் காபியும் மிச்சம் இருந்தன. எதையும் வீணாக்க கூடாது என்பது, தி.மு.க., கொள்கை என்பதால், 'என்ன கிளம்பிட்டீங்க...' என, துரைமுருகன் கேட்க, 'ராகுலிடம் பேசிட்டு வாரோம்' என, பதில் சொல்லி இருக்கின்றனர். 'நல்லா பேசிட்டு வாங்க' என வாழ்த்தி வழி அனுப்பி இருக்கிறார், துரை.

அவர் சும்மா பேசினாலே, நக்கல் தொனி தான் இருக்கும் என்பதை மற்றவர்களுக்கு சொல்லி புரியவைக்க அழகிரி, பாவம், ரொம்பவே மெனக்கெட்டுள்ளார். வெளியே வந்த தினேஷ் குண்டுராவ், செய்தியாளர்களிடம் முகம் காட்ட விரும்பாமல், 'எங்கே கார்' என, கேட்டபடி வேகமாக போய் விட்டார். சிரித்தபடியே பேச சென்ற, காங்கிரஸ் தலைவர்கள் முகத்தில் ஈயாடவில்லை.இதற்கிடையில், காங்கிரசுடனான பேச்சு ஒரே நாளில் முடிந்ததாக வரலாறே கிடையாது என்பதை அறிந்திருந்த காரணத்தால், திருச்சி நேரு, பாதியிலேயே கிளம்பி விட்டாராம்.

எவ்வளவு அடி விழுந்தாலும் வெளியே காட்டாமல் இருக்க பழகிப் போன காங்கிரஸ் தலைவர் அழகிரி, 'பேச்சு மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவும் இருந்தது. தலைமையுடன் கலந்து பேசி, இரண்டாம் சுற்றுக்கு வருவோம்' என்றார், ஏற்ற இறக்கம் இல்லாமல்.

சத்தியமூர்த்தி பவனுக்கு திரும்பி வந்து ஆலோசனை நடத்திய குழுவிடம் நிர்வாகிகள், '40க்கு குறையாமல் கேப்போம். அதுக்கு உடன்பட்டால், நாங்குநேரியில் பேசறப்போ, ஸ்டாலினை முதல்வராக்க போவதாக, ராகுலை சொல்ல வைப்போம். இல்லேன்னா வேற வழிய பாப்போம்' என, கோஷ்டிகள் சார்பாக சொல்ல, உம்மன் சாண்டியும், குண்டுராவும் தலையசைத்து விட்டு ஓட்டலுக்கு கிளம்பினர்.

Advertisement
வாசகர் கருத்து (48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ponssasi - chennai,இந்தியா
28-பிப்-202111:16:17 IST Report Abuse
ponssasi செல்வாக்குள்ள மாநில தலைவர்களை டெல்லி தலைமை மதிக்காதவறை அந்த கட்சிக்கு விடிவு இல்லை, திரு வாசன் காங்கிரஸில் இருந்திருந்தால் நிச்சயம் அறுபது பெற்றிருப்பார். பிரிவினையால் காங்கிரஸ்க்கும் இழப்பு வாசனுக்கும் இழப்பு. இதில் பெரிய அடி காங்கிரெஸ்கு தான். வாசனுக்கு முதல்வர், இல்லை பிரதமர் கனவு இல்லை கடைசி வரை MP அல்லது வாய்ப்பிருந்தால் அமைச்சர் இது போதும், தற்போது MP. ஆனால் காங்கிரஸ் நிலை அதுவல்ல ஒரு தேசிய கட்சி தோல்வி இந்தியா முழுமையும் அலசி ஆராயப்படும். அதன் தேசிய தலைவர் குற்றம்சாட்டப்படுவார், பிரதமர் பதவி கைவிட்டுப்போகும், எதிர்கட்சி அந்தஸ்த்துக்கே போட்டிபோடவேண்டி வரலாம். மாநில கட்சிகள் மதிக்காது. 1989, சட்டமன்ற தேர்தலில் செல்வி ஜெயலலிதா காங்கிரஸ் உடன் கூட்டணிவைக்க திரு ராஜீவுடன் பேசினார், ராஜிவ் தமிழ்நாட்டில் மூப்பனார் மூத்த தலைவர் அவர் மனம் நோகும்படி என்னால் முடிவெடுக்க முடியாது என்று கூறினார். அன்று மூப்பனார் தனித்து நின்று சுமார் 28. தொகுதிகளில் வென்று காட்டினார். செல்வி ஜெயலலிதா எதிர்க்கட்சி அந்தஸ்த்துக்கே போராடவேண்டிய நிலை ஏற்பட்டது. திரு வாசன் மாநில தலைவராக இருந்தவரை காங்கிரஸ் மரியாதையாக பார்க்கப்பட்டது. கல்வி தந்தை எனும் போர்வையில் அங்கீராரமில்லா கல்லூரியை நடத்தி நீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டவர் ஒரு மாநில தலைவராக இருந்தால், ஆளும் கட்சி மீது குற்றம் சாடுவதை மக்கள் எப்படி ஏற்றுக்கொள்ளுவார்கள். ராகுல் தான் முடிவெடுக்கவேண்டும்.
Rate this:
Cancel
akka - chennai,இந்தியா
27-பிப்-202106:50:55 IST Report Abuse
akka Mr.Rameshkumar, Please understand that we have one India only. There is no South India nor North India, nor do we have West or East India. We only have northern part of India, Southern part of India and so on. Don't try to a wedge between people. Feel that we are Indians. Now coming to the point that "Dravidian movement has brought social Liberalization in Tamil Nadu. If that was not there, the situation will be like North India, where certain communities are oppressed and depressed". What is the situation in Tamil Nadu? The situation is nothing different. In your view, you feel that communities to your liking are being pampered, while certain other communities are suppressed. They are even rebuked in public. That is because they don't have the strength to retaliate. You, feel happy in suppressing certain communities. Please set your house in order, and think about other parts of India. Here in TamilNadu, only a certain party is always rebuking the dalits. They even go to the extent of making the chairperson of a Panchayat Union, sit on the floor, while conducting Panchayat meeting. Consider first your actions and then try to find fault with others. Don't be carried away by false propaganda and fall prey to the continued perpetration of lies. Try to see the facts and realise the truth. Try to come out of the past thinking and enlighten yourself to the dawn of New India.
Rate this:
madhavan rajan - trichy,இந்தியா
27-பிப்-202115:51:29 IST Report Abuse
madhavan rajanIn the first line you state there is no south india or north india and only one india is there. But in the third line you are saying situation will be like north india. After the second line you have realised that there is north India when you disputed it in the first line. Why this confusioin?...
Rate this:
Cancel
Sivaraman - chennai ,இந்தியா
26-பிப்-202121:13:38 IST Report Abuse
Sivaraman காங்கிரஸ் இந்த தேர்தலில் திரு கமலனுடனோ அல்லது வேறு கூட்டணி அமைத்தால் தான் தமிழ்நாட்டில் கழகங்களுக்கு மாற்றாக வர வாய்ப்பு உண்டு . தவறவிட்டால் கட்சி அஸ்தமனம் தான் .
Rate this:
madhavan rajan - trichy,இந்தியா
27-பிப்-202115:52:53 IST Report Abuse
madhavan rajanதொண்டர்கள் இல்லாத கட்சி யாருடன் கூட்டணி வைத்தாலும் கோவிந்தாதான். உதாரணம் மக்கள் நல கூட்டணி....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X