அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் சட்டவிரோதிகள் தலை தூக்குவர்

Updated : பிப் 27, 2021 | Added : பிப் 25, 2021 | கருத்துகள் (71)
Share
Advertisement
கோவை: ''தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்தால், சட்டவிரோதிகள் தலை துாக்குவர்; பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது,'' என, பிரதமர் மோடி, கோவை பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பேசினார்.கோவை, 'கொடிசியா' அரங்கில், நேற்று நடந்த அரசு விழாவில், 12 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை, பிரதமர் மோடி தொடங்கி வைத்து பேசினார். விழாவில், முதல்வர், இ.பி.எஸ்., துணை முதல்வர் ஓ.பி.எஸ்., மற்றும்
PM Modi, BJP, TN election, DMK,  திமுக, ஆட்சி, சட்டவிரோதிகள், தலை தூக்குவர்,  கோவை பிரசாரம், மோடி, எச்சரிக்கை

கோவை: ''தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்தால், சட்டவிரோதிகள் தலை துாக்குவர்; பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது,'' என, பிரதமர் மோடி, கோவை பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பேசினார்.

கோவை, 'கொடிசியா' அரங்கில், நேற்று நடந்த அரசு விழாவில், 12 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை, பிரதமர் மோடி தொடங்கி வைத்து பேசினார். விழாவில், முதல்வர், இ.பி.எஸ்., துணை முதல்வர் ஓ.பி.எஸ்., மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.

தொடர்ந்து, கோவை, 'கொடிசியா மைதானத்தில் நடந்த, பா.ஜ., பிரசார கூட்டத்தில், பிரதமர் மோடி பேசியதாவது: தமிழக சட்டசபை தேர்தல் வாயிலாக, புதிய அரசைத் தேர்ந்தெடுக்க வேண்டிய பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது.மத்தியில் பா.ஜ., அரசும், தமிழகத்தில் அ.தி.மு.க., அரசும், கூட்டுறவு கூட்டாட்சி என்ற தத்துவத்துக்கு, நல்ல உதாரணமாக செயல்பட்டு வருகின்றன.தமிழக மக்கள் பயன் பெறுவதற்காக, இணைந்து, பணியாற்றி வருகிறோம். இதில், தமிழகத்துக்கு ஏராளமான நன்மைகள் கிடைத்திருக்கின்றன.


முக்கிய பதவி


நம் நாடு, இரு விதமான துருவ அரசியலைப் பார்க்கிறது. ஒன்று, ஊழலும் ஆதிக்கமும் நிறைந்த ஆட்சி. மற்றொன்று, தேசிய ஜனநாயக கூட்டணியால் நிகழ்த்தப்படும் கருணை அரசு.சுயநலம் மட்டுமே அவர்களின் அடையாளம், இலக்கு. தி.மு.க.,வும், காங்கிரசும் இணைந்து நடத்தும் திட்டங்கள், ஊழலுக்கான திட்டங்களாகவே உருவாக்கப்படுகின்றன.

ஊழல் செய்வதைப் பற்றியே, அவர்கள் மூளையை கசக்கி, யோசித்துக் கொண்டிருக்கின்றனர். ஊழல் செய்வதற்கான சிறந்த வழிகளைக் கண்டுபிடிப்பவர்களுக்கு மட்டுமே, அவர்களுடைய கட்சிகளிலும், ஆட்சியிலும் முக்கியப் பதவிகளும், வாய்ப்புகளும் வழங்கப்படுகின்றன.தி.மு.க., ஆட்சிக்கு வரும்போதெல்லாம், அப்போதெல்லாம் வன்முறைக்கு வழியை ஏற்படுத்தித் தருகின்றனர். ஒவ்வொரு மாவட்டத்திலும், அப்பாவி மக்களை ஏமாற்றுவோரையும் கொடுமைப்படுத்துவோரையுமே கட்சியில் வைத்திருக்கின்றனர்.

தி.மு.க.,ஆட்சிக்கு வந்தால் சட்டவிரோதிகள், தாங்களே ஆட்சிக்கு வந்ததாக நினைப்பர். அவர்கள் மீண்டும் தலை துாக்குவர். இத்தகைய சூழ்நிலைகளால், தமிழகப் பெண்கள்தான் அதிகம் பாதிக்கப்படுவர்.முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை இவர்கள் எப்படி நடத்தினர் என்பது எல்லோருக்கும் தெரியும். அதை நான் நினைவுபடுத்த வேண்டியதில்லை. ஜெயலலிதாவுக்கு தொல்லை கொடுத்தவர்களுக்கு, தி.மு.க.,வும், காங்கிரசும் வெகுமதி அளித்து வந்தன.


குடும்ப அரசியல்


தி.மு.க., தமிழர் நலனுக்கான கட்சி என்ற அந்தஸ்தையும், அடையாளத்தையும் எப்போதோ இழந்து விட்டது. அந்தக் கட்சி முழுமையான பெரும்பான்மை பெற்று, கால் நுாற்றாண்டு காலமாகி விட்டது. இப்போது தமிழகம் என்ற, ஒரு மாநிலத்துக்குள் இருக்கிற ஒரு பிராந்தியக் கட்சியாகிவிட்டது. தி.மு.க.,வுக்குள்ளும், காங்கிரசுக்குள்ளும் ஏராளமான உள் முரண்பாடுகள் இருக்கின்றன. இரண்டு கட்சிகளும், குடும்ப அரசியலை வளர்க்கிற கட்சிகள். உள்விவகாரங்களில் சிக்கியுள்ள அந்தக் கட்சிகளால், ஒரு நல்ல ஆட்சியை நிச்சயமாகத் தரமுடியாது. தி.மு.க., ஆட்சியில், தமிழகத்தில் இருந்த, கடுமையான மின் வெட்டை உங்களால் என்றைக்கும் மறக்க முடியாது. இவ்வாறு, அவர் பேசினார்.

தமிழக பா.ஜ., தலைவர் முருகன் வரவேற்றார்; மாநில பொதுச் செயலர் செல்வகுமார் நன்றி கூறினார்.


கோதாவரி - காவிரி இணைக்க வலியுறுத்தல்


கோவை, 'கொடிசியா' அரங்கில் நேற்று, பிரதமர் மோடி பங்கேற்ற, அரசு நலத்திட்ட விழாவில், முதல்வர் இ.பி.எஸ்., பேசியதாவது:தமிழகம், தெலுங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கு, பெரும் பயன் அளிக்கும், கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்தை, தேசிய திட்டமாக அறிவித்து செயல்படுத்த வேண்டும்.கங்கை நதியை போலவே, காவிரி மற்றும் அதன் கிளை நதிகளை புனரமைக்கும் திட்டத்தை செயல்படுத்தும் தமிழக அரசின் திட்டத்துக்கு, மத்திய அரசு நிதியுதவி வழங்க வேண்டும். கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு, மத்திய அரசு, 50 சதவீதம் நிதியுதவி அளிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.


வேளாளர் அறிவிப்பு; பெரும் வரவேற்பு


பிரதமர் மோடி பேசியதாவது:தி.மு.க.,வும், காங்கிரசும் இணைந்து, பல ஆண்டுகளாக மத்தியிலும், மாநிலத்திலும் இணைந்து ஆட்சி செய்தாலும், தேவேந்திர குல வேளாளர் மக்களின் நீண்ட கால கோரிக்கையை, ஏற்கவே இல்லை. இப்போதுள்ள, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ஜ., மற்றும் அ.தி.மு.க., ஆளும் மத்திய, மாநில அரசுகள்தான், இந்தக் கோரிக்கையை ஏற்று, தேவேந்திர குல வேளாளர் என்ற பெயரில் அழைக்க வேண்டுமென்ற கோரிக்கையை நிறைவேற்றியுள்ளன.இவ்வாறு, அவர் பேசினார். அப்போது, கூட்டத்தில் பலத்த கைதட்டல் எழுந்தது.

Advertisement




வாசகர் கருத்து (71)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
27-பிப்-202114:03:51 IST Report Abuse
Malick Raja சாத்தான் வேதம் ஓதுவதை பார்க்கவே இல்லையென்று இனி யாரும் சொல்லவே முடியாது ..சொல்லவும் கூடாது என்பது மட்டும் மாறா உண்மை ..
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
27-பிப்-202102:20:30 IST Report Abuse
தல புராணம் பொள்ளாச்சியில் ஆயிரம் பெண்களை சூறையாடிய அரசு.. தூத்துக்குடியில் ஸ்னைப்பர்களை வைத்து 15 உயிர்களை சுட்டு கொன்ற அரசு, அதே தூத்துகுடியில் அப்பாவி தந்தை மகனை அடித்தே கொன்ற அரசு, தொட்ட இடமெல்லாம் ஊழல், கட்டி பயன்பாட்டுக்கு வரும் முன்பே உடையும் அணைகள், இடிந்து விழும் பாலங்கள், சிறுமழைக்கு கரையும் சாலைகள், பல ஆயிரம் கோடிக்கு கடைசி நிமிட டெண்டர்கள், அழிக்கப்பட்ட காடுகள், கொத்துக் கொத்தாய் மரணமடையும் யானைகள், பெருங்கடனில் தத்தளிக்கும் அரசு, வாயில் வடைசுடும் வல்லுநர்கள், அரசுத்துறை வேலைகளில் 90% வெளிமாநிலத்தவர்கள், ஊழல் குற்றவாளிக்கு நினைவாலயம்,
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
27-பிப்-202102:12:32 IST Report Abuse
தல புராணம் பள்ளிக்கூடத்திலிருந்து பிள்ளைகளை தள்ளிக்கொண்டு இந்த கூட்டத்திற்கு கொண்டு வந்து கொடுமைப்படுத்தியுள்ளார்கள்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X