பொது செய்தி

தமிழ்நாடு

விதிகளை மீறிய கடைகளுக்கு அபராதம்

Added : பிப் 25, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:பெட்ரோல் பங்க் மற்றும் கடைகளில், விதி மீறல் கண்டறியப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் துறை ஆணையர் வள்ளலார் உத்தரவின்படி, தொழிலாளர் துறை அதிகாரிகள், இம்மாதம், 18, 19ம் தேதிகளில், 1,083 ரேஷன் கடைகள் மற்றும் கிடங்குகளில், ஆய்வு செய்தனர். அப்போது, எடை அளவை குறைத்து, பொருட்களை விற்பனை செய்தது உள்ளிட்ட, விதிமுறை களை மீறி செயல்பட்டதால், 419 கடைகள் மீது, நடவடிக்கை

சென்னை:பெட்ரோல் பங்க் மற்றும் கடைகளில், விதி மீறல் கண்டறியப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் துறை ஆணையர் வள்ளலார் உத்தரவின்படி, தொழிலாளர் துறை அதிகாரிகள், இம்மாதம், 18, 19ம் தேதிகளில், 1,083 ரேஷன் கடைகள் மற்றும் கிடங்குகளில், ஆய்வு செய்தனர்.
அப்போது, எடை அளவை குறைத்து, பொருட்களை விற்பனை செய்தது உள்ளிட்ட, விதிமுறை களை மீறி செயல்பட்டதால், 419 கடைகள் மீது, நடவடிக்கை எடுக்கபட்டது.உப்பு பொட்டலங்கள் முறையாக விற்கப்படுகிறதா என, 722 கடைகளில், ஆய்வு நடத்தப்பட்டு, விதிகளை மீறிய, 40 கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இரண்டு மாதங்களில், எடையளவு சட்ட விதிமுறைகள் மீறல் காரணமாக, 317 முரண்பாடுகள் கண்டறியப்பட்டு, 3.02 லட்சம் ரூபாய்; 21 பெட்ரோல் பங்குகளில், அளவு குறைவு கண்டறியப் பட்டு, 43 ஆயிரம் ரூபாய்; பொட்டல விதிகளை மீறிய வகையில், 121 கடைகளுக்கு, 6.12 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.RAMACHANDRAN - Sundivakkam,இந்தியா
26-பிப்-202110:20:11 IST Report Abuse
R.RAMACHANDRAN ரேஷன் கடைகளுக்கு எடை போடாமல் சப்ளை செய்யும் கிடங்குகள் மீது நடவடிக்கை இல்லை.ஏனெனில் அவர்கள் கொள்ளையில் பங்கு தருவதால்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X