பொது செய்தி

இந்தியா

எல்லையில் போர் நிறுத்தம் இந்தியா - பாக்., உடன்பாடு

Updated : பிப் 26, 2021 | Added : பிப் 26, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி : எல்லை பகுதியில் போர் நிறுத்தம் உட்பட, அனைத்து ஒப்பந்தங்களையும் தவறாமல் கடைப்பிடிக்க, இந்தியா - பாகிஸ்தான் ராணுவம் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.'ஹாட்லைன்'இந்தியா - பாக்., எல்லையில், போர் நிறுத்த ஒப்பந்தங்கள் மீறப்படுவது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து, இரு நாட்டு ராணுவ செயல்பிரிவு இயக்குனர்கள், 'ஹாட்லைன்' வாயிலாக,
எல்லை, போர் நிறுத்தம்,  இந்தியா, பாக்., உடன்பாடு

புதுடில்லி : எல்லை பகுதியில் போர் நிறுத்தம் உட்பட, அனைத்து ஒப்பந்தங்களையும் தவறாமல் கடைப்பிடிக்க, இந்தியா - பாகிஸ்தான் ராணுவம் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


'ஹாட்லைன்'



இந்தியா - பாக்., எல்லையில், போர் நிறுத்த ஒப்பந்தங்கள் மீறப்படுவது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து, இரு நாட்டு ராணுவ செயல்பிரிவு இயக்குனர்கள், 'ஹாட்லைன்' வாயிலாக, பேச்சு நடத்தினர். பேச்சுக்கு பின், இரு தரப்பினரும் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர்.

இது குறித்து, பாக்., ராணுவ ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லை கட்டுப்பாட்டு பகுதி உட்பட, பிற பகுதிகளின் தற்போதைய நிலை குறித்து, இரு தரப்பினரும் வெளிப்படையான, சுதந்திரமான ஆய்வை நடத்தினர்.இதன் முடிவில், எல்லை கட்டுப்பாட்டு பகுதி உட்பட, எல்லையின் பிற பகுதிகளிலும், போர் நிறுத்த ஒப்பந்தங்கள் உள்ளிட்ட பிற புரிந்துணர்வு ஒப்பந்தங்களை தவறாமல் கடைப்பிடிக்க, இரு தரப்பும் சம்மதம் தெரிவித்துள்ளன.ஏதாவது கருத்து வேறுபாடு ஏற்பட்டு, நிலைமை கைமீறிப் போகும் பட்சத்தில், தற்போதுள்ள, ஹாட்லைன் தொடர்பு அல்லது, எல்லை கொடி கூட்டம் நடத்தி, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர இருதரப்பும் சம்மதித்துள்ளன. இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


latest tamil news




இதற்கிடையே, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாக்., அதிகாரிகளுடன், கடந்த சில மாதங்களாக நடத்தி வந்த பேச்சின் வாயிலாகவே, இந்த சுமுக முடிவு எட்டப்பட்டுள்ளதாக, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

'எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவதில்லை' என, இந்தியா - பாக்., ராணுவத்துக்கு இடையே ஏற்பட்டுள்ள உடன்படிக்கைக்கு, ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பாகிஸ்தானுடன், வழக்கமான நல்லுறவை பின்பற்ற, இந்தியா விரும்புகிறது. 'இரு தரப்புக்கும் இடையிலான பிரச்னைகளை, அமைதியான வழியில் பேசித் தீர்க்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது' என, கூறப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
26-பிப்-202113:34:28 IST Report Abuse
kumzi ( இந்துமத விரோதி சுடலை கான் வேணாம் போடா ) ஒரு காலமும் பாக்கிகளையம் சீனாக்காரனையும் நம்ப கூடாது
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
26-பிப்-202108:45:29 IST Report Abuse
RajanRajan தீவிரவாதிகள் ஊடுருவலுக்கு பாக்கிஸ்தான் ராணுவம் பின்புலமாக செயல் படுவது நிறுத்த பட்டதா? அல்லது காஸ்மீர் அமைதிக்காக நாம் தொடர்ந்து தீவிரவாதிகள் ஊடுருவலை தடுத்து கொண்டே இருக்க வேண்டுமா. ?? எப்போது நாம் ஆக்கிரமிப்பு கஸ்மீரை மீட்போம்.??
Rate this:
Cancel
G B Muthukumar - Bangalore,இந்தியா
26-பிப்-202108:40:29 IST Report Abuse
G B Muthukumar There cannot be a war with Pakistan without Chinese involvement which will be big bloodshed which MODI wants to avoid
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X