காஷ்மீரை, நாட்டின் இதர பகுதிகளுடன் இணைக்கும் ரயில்வே திட்டத்தின் ஒரு பகுதியாக, காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில், செனாப் நதியின் குறுக்கே, இரும்பு பாலத்துக்கான, 1,562 அடி நீள அரைவட்ட வளைவு அமைக்கப்படுகிறது.
இந்த வளைவின் மீது தான், இரும்பு பாலம் அமைய உள்ளது. கடந்த, 2017 நவம்பரில், துவங்கப்பட்ட இந்தப் பாலம், 1,250 கோடி ரூபாய் செலவில், 1,172 அடி உயரத்தில் அமைக்கப்படுகிறது. இது, ஐரோப்பிய நாடான பிரான்சின் பாரிஸ் நகரில் உள்ள ஈபிள் கோபுரத்தைவிட உயரமானது.
தற்போது, இறுதிக் கட்டப் பணிகள் நடக்கின்றன. 'உள்கட்டமைப்பின் அற்புதம் உருவாகிறது. முக்கிய மைல்கல்லை, இந்திய ரயில்வே எட்டுகிறது' என, ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல், சமூக வலைதளத்தில், அதன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். உலகின் மிகவும் உயரமான ரயில் பாலமாக இது வரலாறு படைக்க உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE