தமிழ்நாடு

பெண் எஸ்.பி.,யிடம் காதல் பாட்டு கேட்டு சபலம்: ராஜேஷ்தாசின் குட்டு அம்பலம்

Updated : பிப் 26, 2021 | Added : பிப் 26, 2021 | கருத்துகள் (113)
Share
Advertisement
சென்னை: பாலியல் புகாரால், காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட, முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., ராஜேஷ் தாஸ், பெண் எஸ்.பி.,யிடம், ஹிந்தியில் காதல் பாட்டு பாடச் சொல்லி, சபலத்தில் தள்ளாடியது அம்பலமாகி உள்ளது.காவல் துறையில், சிறப்பு டி.ஜி.பி.,யாக பணிபுரிந்தவர் ராஜேஷ்தாஸ், 58. இவர், பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சிக்கினார். அதனால், நேற்று முன்தினம்
பெண் எஸ்.பி., காதல் பாட்டு, சபலம், செக்ஸ் டார்ச்சர், ராஜேஷ்தாஸ்,

சென்னை: பாலியல் புகாரால், காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட, முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., ராஜேஷ் தாஸ், பெண் எஸ்.பி.,யிடம், ஹிந்தியில் காதல் பாட்டு பாடச் சொல்லி, சபலத்தில் தள்ளாடியது அம்பலமாகி உள்ளது.

காவல் துறையில், சிறப்பு டி.ஜி.பி.,யாக பணிபுரிந்தவர் ராஜேஷ்தாஸ், 58. இவர், பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சிக்கினார். அதனால், நேற்று முன்தினம் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.பெண் போலீஸ் அதிகாரிகளுக்கு, ராஜேஷ் தாஸ் பாலியல் தொல்லை கொடுப்பது புதில்ல. இதற்கு முன்னும், ஒரு பெண் ஐ.பி.எஸ்., அதிகாரி மற்றும் டி.எஸ்.பி., அந்தஸ்திலான இரு பெண் அதிகாரிகளுக்கும் தொல்லை கொடுத்துள்ளார்.

இரு தினங்களுக்கு முன், திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில், முதல்வர் இ.பி.எஸ்., சுற்றுப்பயணம் செய்தார். அவரது பாதுகாப்பு பணிக்கு சென்ற ராஜேஷ்தாஸ், சென்னை திரும்பும் போது, சம்பந்தப்பட்ட பெண் ஐ.பி.எஸ்., அதிகாரியை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். 'உங்களிடம் முக்கியமான விஷயம் பேச வேண்டும்' என, கரூருக்கு வரவழைத்துள்ளார். அங்கிருந்து, கள்ளக்குறிச்சி வரை, அந்த பெண் ஐ.பி.எஸ்., அதிகாரியுடன் பயணம் செய்த ராஜேஷ்தாஸ், ஹிந்தியில் காதல் பாட்டு பாடச் சொல்லியுள்ளார்.


latest tamil news




ஆரம்பத்தில், பெண் அதிகாரியின் கைகளை தொட்டு பேசிய அவர், பின்னர், தொடக்கூடாத இடத்தில் தொட முயன்றபோது தான், ராஜேஷ்தாசின் வில்லத்தனம், பெண் ஐ.பி.எஸ்.,சுக்கு தெரியவந்தது. 'உங்களுக்கு திருமண வயதில், இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. உங்கள் மகள் வயதில் இருக்கும் என்னிடம், தவறாக நடந்து கொள்ள எப்படி மனம் வந்தது' என, கடுமையாக திட்டியுள்ளார். அதற்கு ராஜேஷ்தாஸ், 'என் இல்லற வாழ்வு சரியில்லை...' என, செய்த தவறுக்கு காரணம் கற்பிக்க முற்பட்டுள்ளார்.

பெண் ஐ.பி.எஸ்., 'நீங்களெல்லாம் ஒரு உயர் அதிகாரி; உங்களுக்கு எல்லாம் காக்கி உடை ஒரு கேடு' என, கண்டித்து, ராஜேஷ்தாசின் பிடியில் இருந்து தப்பியுள்ளார்.இது, வெளியே தெரியக் கூடாது என்பதற்காக, தன் கார் டிரைவருக்கு, ராஜேஷ் தாஸ், 20 ஆயிரம் ரூபாய் கொடுத்து உள்ளார்.

தனக்கு எதிராக, பெண் ஐ.பி.எஸ்., அதிகாரி புகார் அளிக்கப் போகிறார் என்பதை அறிந்த ராஜேஷ்தாஸ், தனிப்பிரிவு பெண் இன்ஸ்பெக்டர் வாயிலாக, ஆலோசனை கூறுவது போல மிரட்ட வைத்துள்ளார். அத்துடன், அந்த பெண் அதிகாரி, செங்கல்பட்டை தாண்டக்கூடாது என, அம்மாவட்ட எஸ்.பி., கண்ணனுக்கு உத்தரவிட்டுள்ளார்.இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., மற்றும் அதிரடிப்படையுடன் சென்று, பெண் அதிகாரியின் காரை, கண்ணனும் மறித்துள்ளார்.

ஒரு குற்றவாளியை பிடிப்பது போல நடந்து கொண்ட கண்ணன், 'சிறப்பு டி.ஜி.பி.,யிடம் பேசாமல், இந்த இடத்தில் இருந்து நீங்கள் நகர முடியாது' என, கார் சாவியையும் பறித்துள்ளார்.'பெண் ஐ.பி.எஸ்.,சும், சிறப்பு டி.ஜி.பி.,யிடம் பேசிய பிறகே, கண்ணன் அந்த இடத்தை விட்டுச் சென்றுள்ளார்.

ராஜேஷ்தாஸ், கண்ணன், பெண் இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோர், தனக்கு கொடுத்த டார்ச்சர் குறித்தும், டி.ஜி.பி., திரிபாதி, உள்துறை செயலர் பிரபாகரிடம் அளித்துள்ள புகாரில், பெண் ஐ.பி.எஸ்., தெரிவித்துள்ளார்.அதற்கு ஆதாரங்களாக, 'வாட்ஸ் ஆப்' குறுஞ்செய்திகள் மற்றும் கண்ணன் நடந்து கொண்ட விதம் குறித்த வீடியோக்களை சமர்பித்துள்ளார். இதுகுறித்து, ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையிலான குழு விசாரித்து வருகிறது.


சுதந்திரமான விசாரணை தேவை: ஐ.பி.எஸ்., சங்கம்



ஐ.பி.எஸ்., அதிகாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பாதிக்கப்பட்ட பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிக்கு நீதி கிடைக்க வேண்டும். விசாரணை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடக்க வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஐ.பி.எஸ்., அதிகாரிகளின், 'வாட்ஸ் ஆப்' குழுவில், இந்த விவகாரம் குறித்து, கடும் விவாதம் நடத்தப்பட்டுள்ளது. அதில், முதல் குற்றவாளி ராஜேஷ்தாஸ், இரண்டாவது குற்றவாளி கண்ணன். இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். உடனடியாக, 'சஸ்பெண்ட்' செய்ய வேண்டும் என, பல ஐ.பி.எஸ்., அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (113)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
27-பிப்-202112:54:09 IST Report Abuse
Malick Raja திமுக சொல்வதெல்லாம் உண்மை ..திமுக சொல்வதெல்லாம் நடக்கிறது .. திமுக பிடித்துக்காட்டுவதெல்லாம் பிடிபடுகிறது , திமுக ஊழல் பட்டியல் கொடுத்தது மட்டும் கவர்னர் கிடப்பில் போடுகிறார் .. அதாவது திமுக ஆட்சி அமைத்தவுடன் நடவடிக்கை துலுத்துக்கொள்ளட்டும் என்று விட்டு விட்டதாக தகவல் பாஜக மூலம் .. வெளிவந்துள்ளதாம்
Rate this:
Cancel
sridhar - Dar Es Salaam ,தான்சானியா
27-பிப்-202112:42:22 IST Report Abuse
sridhar பெண் ஐ.பி.எஸ் அவர்களையே தொட து நினத்தவனுக்கு முதலில் வேலையே விட்டு தூக்க வேண்டும் சலுகைகள் அனைத்தும் நிறுத்தப்படவேண்டும் பென்ஷன் உள்பட அப்போது தான் புதி வரும் இதெல்லாம் எங்கே நடக்கும்
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
26-பிப்-202118:04:19 IST Report Abuse
J.V. Iyer இவர்களை சட்டம் கடுமையாக தண்டிக்கவேண்டும். இழுக்கக்கூடாது. பெரிய பதவியில் உள்ளவர்களுக்கு ஒழுக்கம் வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X