கோவை: கோவை வந்த பிரதமர் மோடியை, 105 வயதான இயற்கை வேளாண் விவசாயி பாப்பம்மாள் சந்தித்தார்.
கோவை, மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டியை சேர்ந்த, 105 வயதான, இயற்கை வேளாண் விவசாயி பாப்பம்மாளுக்கு, சமீபத்தில், பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது.தேர்தல் பிரசாரத்துக்கு நேற்று கோவை வந்த பிரதமர் மோடியை, மரியாதை நிமித்தமாக சந்தித்து, நன்றி கூற, பொதுக்கூட்ட மேடைக்கு, பாப்பம்மாள் பாட்டி, பட்டுச்சேலை அணிந்து, வந்திருந்தார்.
மோடி பேசி முடித்து விட்டு, திரும்பிச் செல்லும்போது, மேடையின் பின்புறம் அமைக்கப்பட்டிருந்த அறையில், பாட்டியை பார்த்ததும், இரு கரம் கூப்பி, தலையை குனிந்து, வணங்கினார். பிரதமரின் இரு கரங்களை பற்றியும், நெற்றியில் கை வைத்தும், ஆசிர்வாதம் செய்தார் பாப்பம்மாள் பாட்டி. இவர், தி.மு.க.,வை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE