சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காலையில் திருமணம் மாலையில் மணமகன் மரணம்

Updated : பிப் 26, 2021 | Added : பிப் 26, 2021 | கருத்துகள் (21)
Share
Advertisement
சாயல்குடி:சாயல்குடியில் திருமணத்தன்று மதியம் மணமகன் விக்னேஸ்வரன் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியம் இளஞ்செம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் மலைச்சாமி. தற்போது திருச்சி மாவட்டம் சமயபுரம் கோணலையில் வசிக்கின்றனர். இவர்களின் மகன் விக்னேஸ்வரன் 27.இவருக்கும் சாயல்குடி அருகே கடுகு சந்தையைச் சேர்ந்த 22 வயது
காலையில் திருமணம் மாலையில் மணமகன் மரணம்

சாயல்குடி:சாயல்குடியில் திருமணத்தன்று மதியம் மணமகன் விக்னேஸ்வரன் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியம் இளஞ்செம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் மலைச்சாமி. தற்போது திருச்சி மாவட்டம் சமயபுரம் கோணலையில் வசிக்கின்றனர். இவர்களின் மகன் விக்னேஸ்வரன் 27.இவருக்கும் சாயல்குடி அருகே கடுகு சந்தையைச் சேர்ந்த 22 வயது பெண்ணுக்கும் பிப்., 24ல் கடுகுசந்தை முத்துராமலிங்கபுரம் அம்மன் கோயிலில் காலை 10:30 மணிக்கு திருமணம் நடந்தது.

மணமக்கள் கடுகுசந்தை மணமகள் வீட்டிற்கு வந்தனர். மதியம் 3:00 மணிக்கு மணமகன் விக்னேஸ்வரனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி சரிந்தார். சாயல்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.விக்னேஸ்வரனின் இறுதி சடங்கு நேற்று மாலை 4:00 மணிக்கு நடந்தது. காலையில் திருமணம் முடிந்து மாலையில் மணமகனின் இறப்பு இரு வீட்டார், உறவினர்கள், கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா
28-பிப்-202107:21:19 IST Report Abuse
N Annamalai சோகம் .ஆழ்ந்த வருத்தங்கள் .
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
28-பிப்-202100:04:13 IST Report Abuse
தல புராணம் இளவயது மாரடைப்பு தான் புதிய இந்தியாவின் சாதனை.
Rate this:
28-பிப்-202114:33:13 IST Report Abuse
kumzi ( இந்துமத விரோதி சுடலை கான் வேணாம் போடா )பங்காளதேச கள்ளக்குடியேறி மூர்க்க புராணம் நீயும் தப்ப முடியாது...
Rate this:
N.K - Hamburg,ஜெர்மனி
28-பிப்-202117:19:20 IST Report Abuse
N.K உடற்பயிற்சி செய்யச் சொன்னா கிண்டல் பண்ணவேண்டியது அப்புறம் இப்படித்தான்....
Rate this:
Cancel
periasamy - Doha,கத்தார்
27-பிப்-202114:01:28 IST Report Abuse
periasamy கண்ணீர் அஞ்சலி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X