சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காலையில் திருமணம் மாலையில் மணமகன் மரணம்

Updated : பிப் 26, 2021 | Added : பிப் 26, 2021 | கருத்துகள் (21)
Share
Advertisement
சாயல்குடி:சாயல்குடியில் திருமணத்தன்று மதியம் மணமகன் விக்னேஸ்வரன் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியம் இளஞ்செம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் மலைச்சாமி. தற்போது திருச்சி மாவட்டம் சமயபுரம் கோணலையில் வசிக்கின்றனர். இவர்களின் மகன் விக்னேஸ்வரன் 27.இவருக்கும் சாயல்குடி அருகே கடுகு சந்தையைச் சேர்ந்த 22 வயது
காலையில் திருமணம் மாலையில் மணமகன் மரணம்

சாயல்குடி:சாயல்குடியில் திருமணத்தன்று மதியம் மணமகன் விக்னேஸ்வரன் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியம் இளஞ்செம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் மலைச்சாமி. தற்போது திருச்சி மாவட்டம் சமயபுரம் கோணலையில் வசிக்கின்றனர். இவர்களின் மகன் விக்னேஸ்வரன் 27.இவருக்கும் சாயல்குடி அருகே கடுகு சந்தையைச் சேர்ந்த 22 வயது பெண்ணுக்கும் பிப்., 24ல் கடுகுசந்தை முத்துராமலிங்கபுரம் அம்மன் கோயிலில் காலை 10:30 மணிக்கு திருமணம் நடந்தது.

மணமக்கள் கடுகுசந்தை மணமகள் வீட்டிற்கு வந்தனர். மதியம் 3:00 மணிக்கு மணமகன் விக்னேஸ்வரனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி சரிந்தார். சாயல்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.விக்னேஸ்வரனின் இறுதி சடங்கு நேற்று மாலை 4:00 மணிக்கு நடந்தது. காலையில் திருமணம் முடிந்து மாலையில் மணமகனின் இறப்பு இரு வீட்டார், உறவினர்கள், கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv ,srinivasankrishnaveni - bangalore,இந்தியா
04-மார்-202111:53:52 IST Report Abuse
skv ,srinivasankrishnaveni பாவமே என்ன கொடுமை மனதுக்கு தாங்கவே இல்லீங்க
Rate this:
Cancel
S. ரெகுநாதன் - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
01-மார்-202111:42:55 IST Report Abuse
S. ரெகுநாதன் ஆழ்ந்த அனுதாபங்கள் ... மிக இளம் வயது நண்பர்கள் உடல்நலத்தை பேணவேண்டும்.. பெண்ணின் நிலையை நினைத்தால் மனக்கஷ்டமாக உள்ளது ... இந்த சமுதாயம் எப்படி நிலைமையை கையாளும் ...இறைவா இது போன்ற செயலை இன்னமும் செய்யாதிருக்க உம்மை பிராத்திக்கிறேன்..ஓம் ஷாந்தி..
Rate this:
Cancel
vijay - coimbatore,இந்தியா
01-மார்-202109:13:04 IST Report Abuse
vijay //...திய இந்தியாவின் சாதனை..// ஏன் இதுக்கு முன்னாடி அப்படி மரணங்கள் நடந்ததே இல்லையா?? டாஸ்மார்க், புகைப்பழக்கம், சகட்டு மேனிக்கு கண்டதையும் தின்பது இருந்தால் இப்படித்தான். மூர்க்க ஆட்களின் ""மோடி வெறுப்பு' தெளிவா தெரியுது. புகை, மது இது எதுவும் இல்லாதவர்கள் கூட மாரடைப்பு மரணம் ஏற்படுகிறது. காரணம் உணவு பழக்கம் உட்பட பல காரணங்கள். உடற்பயிற்சி யோகா செய்ய சொன்னால் கிண்டல் செய்யும் மூடர்கள் இப்படித்தான்
Rate this:
Mohan A Annamalai - Tiruvannamalai,இந்தியா
04-மார்-202110:28:18 IST Report Abuse
Mohan A Annamalaiஇதுல எங்க மோடி வந்தாரு .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X