கோவை:''ஜாதியை சொல்லி, பகுத்தறிவை சொல்லி, சமூக நீதியை சொல்லி, தாழ்த்தப்பட்ட மக்களை ஏமாற்றும் முயற்சியில் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் ஈடுபட வேண்டாம்,'' என, முன்னாள் துணை சபாநாயகர் துரைசாமி பேசினார்.
தி.மு.க.,வில் இருந்து, பா.ஜ.,வில் சமீபத்தில் இணைந்த, முன்னாள் துணை சபாநாயகர் துரைசாமி, கோவையில் நடந்த பா.ஜ., பிரசார கூட்டத்தில் பேசியதாவது:சின்னப்பிள்ளை கால்களை, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தொட்டு வணங்கி, தாழ்த்தப்பட்டோருக்கு பெருமை சேர்த்தது பா.ஜ., கட்சி.
மேட்டூர் அருகே மேய்ச்சேரியில், தி.மு.க., கூட்டம் நடந்தது. ஒரு எம்.பி., அக்கட்சியின் துணை பொது செயலாளர், 75 வயதான மனிதரை, இதுபோன்ற மேடையில் உட்கார வைக்காமல், கீழே உட்கார வைத்து, தி.மு.க.,அசிங்கப்படுத்தியுள்ளது.பிரதமர் பேசும் மேடையில், என்னையும், கே.பி.ராமலிங்கத்தையும் உட்கார வைத்து, பா.ஜ., பெருமை தேடித்தந்துள்ளது.
மேய்ச்சேரியில் நடந்ததை கேள்விப்பட்டு, கேட்க ஆளில்லையா என, அருந்ததியினர் வருத்தப் பட்டனர். ஜாதியை சொல்லி, பகுத்தறிவை சொல்லி, சமூக நீதியை சொல்லி, தாழ்த்தப்பட்ட மக்களை ஏமாற்றும் முயற்சியில் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் ஈடுபட வேண்டாம்; முயற்சி செய்ய வேண்டாம். இவ்வாறு, அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE