பொது செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம்: வாய்மையே வெல்ல வேண்டும்!

Updated : பிப் 26, 2021 | Added : பிப் 26, 2021 | கருத்துகள் (41)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :என்.சாண்டில்யன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'என் தந்தையை, வெடிகுண்டு வைத்து படுமோசமாக கொன்ற சண்டாளர்களை, நான் கனத்த இதயத்துடன் மன்னித்து விட்டேன்' என, திருவாய் மலர்ந்து இருக்கிறார், முன்னாள் பிரதமர் ராஜிவின் மகன் ராகுல். இதிலே கவனிக்க வேண்டிய விஷயம் என்ன
Rajiv, Rajiv Gandhi, ராஜிவ், ராஜிவ் காந்தி


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :


என்.சாண்டில்யன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'என் தந்தையை, வெடிகுண்டு வைத்து படுமோசமாக கொன்ற சண்டாளர்களை, நான் கனத்த இதயத்துடன் மன்னித்து விட்டேன்' என, திருவாய் மலர்ந்து இருக்கிறார், முன்னாள் பிரதமர் ராஜிவின் மகன் ராகுல். இதிலே கவனிக்க வேண்டிய விஷயம் என்ன தெரியுமா... அந்த படுபாவிகளை, தி.மு.க., தலைவர் கருணாநிதி மன்னிக்கவில்லை; கவர்னராக இருந்த, பாத்திமா பீவி, கொலையாளிகளின் கருணை மனுவை நிராகரித்தார்; மத்திய அரசு மன்னிக்கவில்லை; ஜனாதிபதி மன்னிக்கவில்லை.

ஆனால், கொலையான ராஜிவின் தர்ம பத்தினி சோனியா, அந்தப் பாவிகளை பெருந்தன்மையுடன் மன்னித்தார். அதனால் தான், அவர்களுக்கு விதிக்கப்பட்ட துாக்குத் தண்டனையை, ஆயுள் தண்டனையாக குறைத்தது, உச்ச நீதிமன்றம். தன் கணவன் கோவலனைக் கொன்ற பாண்டிய மன்னனை, கண்ணகி மன்னிக்கவில்லை; அதனால், மதுரையை எரித்தாள். தமிழ் மண்ணில், கண்ணகி தெய்வமாக போற்றப்படுகிறாள். சோனியா, வெளிநாட்டு பெண் என்பதால், நம் கலாசாரம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதனால் தான், கணவனை கொன்றோரை மன்னிப்பதாக சொல்லி விட்டார்.


latest tamil news



ஹிந்து மதத்தில், பாவிகளுக்கு மன்னிப்பே இல்லை. கிறிஸ்துவ மதத்தில், பாதிரியார்கள் நினைத்தால், பாவிகளை மன்னித்து விடுவர். 'உப்பு தின்றவன், தண்ணீர் குடித்தாக வேண்டும்; தப்பு செய்தவன், தண்டனை அனுபவித்தாக வேண்டும்' என்பது தான், நம் நீதி. ராஜிவ் கொலையாளிகளுக்கு தீர்ப்பு விதிக்கப்பட்ட உடனே, துாக்குத் தண்டனையை நிறைவேற்றியிருந்தால், அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற குரல் எழுந்திருக்காது; ராஜிவின் ஆன்மாவும் சாந்தி அடைந்திருக்கும். கொலைகாரப் பாவிகளை தண்டிக்கும் விஷயத்தில், முன்னாள் முதல்வர் கருணாநிதி, கவர்னர் பாத்திமா பீவி, மத்திய அரசு, ஜனாதிபதி வரை, அனைவரும் தங்களது கடமையை செவ்வனே செய்திருக்கின்றனர்.

தன் தந்தை ராஜிவை கொன்றோரை, ராகுல் மன்னிக்கலாம். ராஜிவுடன் சேர்ந்து அநியாயமாக இறந்த போலீசாரின் குடும்பம் படும் துயரத்தை, இந்த அரசியல் வியாபாரிகள் எண்ணிப் பார்க்க தவறி விட்டனர். இந்நிலையில், 'ராஜிவ் கொலையாளிகள் ஏழு பேர் விடுதலை தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம், ஜனாதிபதிக்கே உள்ளது' என, கவர்னர் தரப்பு தெரிவித்துள்ளது. இது, பாராட்டத்தக்கது. வாய்மையே வெல்லும்; வெல்ல வேண்டும்!

Advertisement




வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mrsethuraman - Bangalore,இந்தியா
26-பிப்-202120:58:36 IST Report Abuse
mrsethuraman  வாய்மை வென்றதெல்லாம் அந்த காலம் . தற்போது வாய்(பேச்சு) + மை(ஓட்டு) தான் வெல்கிறது.
Rate this:
Cancel
S.kausalya - Chennai,இந்தியா
26-பிப்-202120:07:51 IST Report Abuse
S.kausalya ராஜிவ் வுடன் இறந்தவர்களின் குடும்பத்தினர் மன்னிக்கட்டும். பிறகு பார்க்கலாம். ராஜிவ் தானாக அந்த முடிவை எடுத்து இருக்க மாட்டார். சட்ட ஆலோசகர்கள் , வெளி உறவு ஆலோசகர்கள், எல்லோரையும் கேட்டு தான் முடிவு எடுத்து இருப்பார். அவர் ஒன்றும் இந்திய இராணுவத்தினரை, அங்கு போய் தமிழர்களை கஷ்டபடுத்திங்கள் என கூறி இருக்க மாட்டார். நடந்து முடிந்த பிறகு அது கை மீறிய விஷயமாகி விட்டது. அப்படியே அவர் தான் இதற்கு காரணம் என்றாலும் அவரை மட்டும்,( இந்திரா காந்தி அம்மையாரை தண்டித்தது போல்) போட்டு தள்ளி இருக்கலாம். அதை விடுத்து பொது மக்களையும், கூட்டத்தை பாது காக்க.வந்த காவல் துறையினரும் எதற்காக கொல்ல வேண்டும்? கொலை யாளிகள் இவர்கள் இல்லை எனில் யார் உண்மை குற்றவாளிகள் என கண்டறிந்து நீதி முன் நிறுத்த வேண்டியது, யார் இவர்கள் கொலையாளிகள் இல்லை எனகுருபவர்கள் தான். பொது மன்னிப்பு தருவதற்கு ராகுல் அதிகாரம் படைத்தவர் இல்லை. நீதி துறை, ஜனாதிபதி, ஆளுநர் இவர்கள் தான்.
Rate this:
Cancel
vns - Delhi,யூ.எஸ்.ஏ
26-பிப்-202119:28:07 IST Report Abuse
vns ஒவ்வொரு திரவிஷமும் ஊழலின் உறைவிடம், அதிகார துஷ்ப்ரயோகம் செய்யும் துஷ்டர்கள், குற்றவாளிகளின் முழு உருவம். அவர்கள் மற்ற குற்றவாளிகளிடம் ஆதரவைக் காட்டுவது நியதி. ஆனால் கொலையாளிகளை மன்னிக்கக்கோரும் குற்றவாளிகளுக்கு வாக்களிக்கும் மக்களும் குற்றவாளிகளே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X