ஒரே பாலின திருமணம்: மத்திய அரசு அங்கீகரிக்க மறுப்பு

Updated : பிப் 26, 2021 | Added : பிப் 26, 2021 | கருத்துகள் (29)
Share
Advertisement
புதுடில்லி: 'நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள குடும்ப முறையின்படி, கணவராக ஆணும், மனைவியாக பெண்ணும் இருக்க வேண்டும். அதற்கு எதிராக உள்ளதால், ஒரே பாலினத் திருமணத்தை அங்கீகரிக்க முடியாது' என, டில்லி உயர் நீதிமன்றத்தில், மத்திய அரசு கூறியுள்ளது.ஒரே பாலினத் திருமணத்தை அங்கீகரிக்கக் கோரி, டில்லி உயர் நீதிமன்றத்தில் ஏற்கனவே மூன்று வழக்குகள் நிலுவை யில் உள்ளன.
same sex marriage, Delhi HC, No fundamental right, Centre

புதுடில்லி: 'நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள குடும்ப முறையின்படி, கணவராக ஆணும், மனைவியாக பெண்ணும் இருக்க வேண்டும். அதற்கு எதிராக உள்ளதால், ஒரே பாலினத் திருமணத்தை அங்கீகரிக்க முடியாது' என, டில்லி உயர் நீதிமன்றத்தில், மத்திய அரசு கூறியுள்ளது.

ஒரே பாலினத் திருமணத்தை அங்கீகரிக்கக் கோரி, டில்லி உயர் நீதிமன்றத்தில் ஏற்கனவே மூன்று வழக்குகள் நிலுவை யில் உள்ளன. இந்நிலையில், மேலும் நான்கு பேர், டில்லி உயர் நீதிமன்றத்தில் புதிய வழக்கை தொடர்ந்து உள்ளனர். இது குறித்து பதிலளிக்கும்படி, மத்திய அரசுக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கின் விசாரணை, ஏப்., 20ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. முந்தைய வழக்குகளில், டில்லி அரசின் சார்பில், நேற்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

'சிறப்பு திருமண சட்டத்தின்படி, ஒரே பாலினத் திருமணத்தை அங்கீகரிக்க முடியாது. இந்த விஷயத்தில், நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்த தயாராக உள்ளோம்' என, அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்நிலையில், மத்திய அரசின் சார்பில், நேற்று பிற்பகலில், விரிவான பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது: திருமணம் என்பது, இரண்டு தனி நபர்களுக்கு இடையே, அவர்களது வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது தான். ஆனால், அதை தனிநபர் சுதந்திரம் என்ற வரையறைக்குள் கொண்டு வர முடியாது.


latest tamil newsஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் சேர்ந்து வாழ்ந்தாலும், உடல் ரீதியிலான உறவு கொண்டாலும், அதை, இந்திய குடும்ப முறையுடன் ஒப்பிட முடியாது. நம் நாட்டில் உள்ள நடைமுறைகளின் படியும், பல மதங்களின் தனிநபர் சட்டங்களின்படியும், ஆணாகப் பிறந்தவரை கணவராகவும், பெண்ணாகப் பிறந்தவரை மனைவியாகவும், அவர்களுடைய திருமண உறவில் பிறந்தவர்களை குழந்தைகளாகவும் கருதுகிறோம்.

ஒரே பாலினத் திருமணத்தை அங்கீகரிப்பது, ஏற்கனவே உள்ள சட்டங்களை மீறுவதாக அமைந்து விடும். பார்லிமென்டில் விவாதிக்கப்பட்டே, திருமணச் சட்டங்கள் வகுக்கப்பட்டு உள்ளன. அவை, மதங்களின் தனிநபர் சட்டங்களின் அடிப்படையில், மத நம்பிக்கைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவை.

ஒரே பாலினத் திருமணம் என்பதற்கான வாய்ப்பு இல்லை. அதில் யார் கணவர், யார் மனைவி என்பதை எப்படி நிர்ணயிப்பது? ஒரே பாலினத் திருமணத்தை அனுமதித்தால், நாட்டில் மிகப் பெரும் குழப்பம் ஏற்படும். அதனால், ஒரே பாலினத் திருமணத்தை அங்கீகரிக்க முடியாது. அவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sankaran - chennai,இந்தியா
26-பிப்-202121:27:44 IST Report Abuse
Sankaran 2 parabola can never meet each other...what is the use?..
Rate this:
Cancel
Jeyakumar Jeyakumar - Madurai,இந்தியா
26-பிப்-202120:30:51 IST Report Abuse
Jeyakumar Jeyakumar மிருகங்கள் கூடதன எதிர்பாலின விலங்குகளோடுமட்டும்தான் உடலுறவு கொள்கிறது. ஒருசில மனித ( எந்த இனத்திலும் சேராதவன்)கிறுக்குகள், தன காம வேட்கையில் திருப்தி கொள்ளாமல் செய்கின்ற செயல்தான் இந்த தரம்கெட்ட செயல்கள்.
Rate this:
Cancel
Mayavan Mayavan - Chennai,இந்தியா
26-பிப்-202117:51:33 IST Report Abuse
Mayavan Mayavan நாளைக்கு ஆடு மாடு கழுதை குதிரை எல்லாத்தையும் கண்ணாலம் பண்ணுவேன்னு அடம் பிடிப்பா னுவ.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X