க்ரைம் ரவுண்ட் அப்: பெண்ணின் இதயத்தை சமைத்தவர் கைது

Updated : பிப் 26, 2021 | Added : பிப் 26, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
உலக நிகழ்வுகள்:சிறையில் 79 கைதிகள் பலிகுவிட்டோ: ஈக்குவடார் சிறைகளில் இந்த வாரம் ஏற்பட்ட கலவரங்களில் உயிரிழந்த கைதிகளின் எண்ணிக்கை 79 ஆக அதிகரித்துள்ளது.தென் அமெரிக்க நாடான ஈக்குவடாரில் உள்ள சிறைச் சாலைகளில் அதிக அளவிலான கைதிகள் அடைக்கப்பட்டிருப்பதால் அவர்களுக்கு இடையே கலவரம் ஏற்படுவது வழக்கமாக உள்ளது. இந்த சிறை கலவரங்களில் சிக்கி உயிரிழந்த
crime, roundup, murder


உலக நிகழ்வுகள்:சிறையில் 79 கைதிகள் பலி


குவிட்டோ: ஈக்குவடார் சிறைகளில் இந்த வாரம் ஏற்பட்ட கலவரங்களில் உயிரிழந்த கைதிகளின் எண்ணிக்கை 79 ஆக அதிகரித்துள்ளது.தென் அமெரிக்க நாடான ஈக்குவடாரில் உள்ள சிறைச் சாலைகளில் அதிக அளவிலான கைதிகள் அடைக்கப்பட்டிருப்பதால் அவர்களுக்கு இடையே கலவரம் ஏற்படுவது வழக்கமாக உள்ளது. இந்த சிறை கலவரங்களில் சிக்கி உயிரிழந்த கைதிகளின் எண்ணிக்கை 79 ஆக உயர்ந்துள்ளது. சிலரின் நிலைமை மோசமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.


பெண்ணின் இதயத்தை சமைத்தவர் கைது


வாஷிங்டன்:அமெரிக்காவில், மூன்று பேரை கொலை செய்து, ஒருவரின் இதயத்தை சமைத்து சாப்பிட்ட லாரன்ஸ் பால் என்பவரை, போலீசார் கைது செய்துள்ளனர். 'உறவினரின் குடும்பத்தை பிடித்திருந்த, பிசாசை ஓட்டுவதற்காக, அவர்களுக்கு இதய வறுவலை சாப்பிடக் கொடுத்தேன்' என, அவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம், அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்திய நிகழ்வுகள்:அம்பானி வீட்டருகே வெடிகுண்டு கார்


மும்பை: 'ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்' அதிபர் முகேஷ் அம்பானியின் மும்பை வீட்டருகே, கேட்பாரற்று நிறுத்தப்பட்டு இருந்த காரில் இருந்து, சக்திவாய்ந்த வெடிகுண்டு பறிமுதல் செய்யப்பட்டது.


latest tamil news
ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் கொலை


ஆலப்புழா: கேரளாவில், நகம்குலங்கரா பகுதியில், ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்களுக்கும், எஸ்.டி.பி.ஐ., கட்சியினருக்கும் இடையே பேரணி தொடர்பாக கைகலப்பு ஏற்பட்டது. இதில், நண்டு என்ற ஆர்.எஸ்.எஸ்., தொண்டர் கொல்லப்பட்டார். இது தொடர்பாக, எஸ்.டி.பி.ஐ., கட்சியினர் எட்டு பேரை பிடித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.


ஷாந்தனு முலுக்கை கைது செய்ய தடை


புதுடில்லி: டில்லி, விவசாயிகள் போராட்டத்தில் வன்முறையை துாண்டும் வகையில், சமூக வலைதளத்தில், 'டூல்கிட்' என்ற தகவல் தொகுப்பை பகிர்ந்தது தொடர்பாக, சமூக ஆர்வலர் ஷாந்தனு முலுக் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் தொடர்பான விசாரணை முடியவில்லை என, போலீஸ், டில்லி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதையடுத்து, ஷாந்தனு முலுக் தாக்கல் செய்த முன் ஜாமின் மனுவை விசாரித்த நீதிமன்றம், அவரை, மார்ச், 9ம் தேதி வரை கைது செய்ய தடை விதித்துள்ளது.


தமிழக நிகழ்வுகள்:பட்டாசு ஆலை விபத்தில் 5 பேர் பலி


விருதுநகர்: விருதுநகர் அருகே, பட்டாசு ஆலையில் நேற்று மாலை நடந்த கோர வெடி விபத்தில், ஐந்து பேர் உடல் கருகி பலியாயினர். 19 பேர் படுகாயம் அடைந்தனர்.


47 செம்மறி ஆடுகள் பலி


சாயல்குடி அருகே பெரியகுளத்தில் வயல்வெளியில் உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததில் 47 ஆடுகள் மின்சாரம் தாக்கியதில் பலியானது.


கைதிகளை விரட்டி பிடித்த போலீஸ்


வாடிப்பட்டி : மதுரை ஆயுதப்படை எஸ்.எஸ்.ஐ., ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார், வழிப்பறி வழக்குகளில் மத்திய சிறையில் இருந்த 5 கைதிகளை வாடிப்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். விசாரணைக்கு பின் நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்தபோது தப்பி ஓடிய கைதிகள் மதுரை எச்.எம்.எஸ்.காலனி அபுபக்கர் மகன் நசித் முகைதீன் 26, தென்காசி ஆலங்குளம் இசக்கிமுத்துவை 27,போலீசார் விரட்டி பிடித்தனர். தப்பிக்க முயன்றவர்கள் மீது வாடிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


மாஜி தலைவருக்கு ஆயுள்


ராமநாதபுரம்: ஆர்.எஸ். மங்கலம் அருகே கிராம தலைவர் ஜெய்சங்கரை 43, டூவீலரை ஏற்றி கொலை செய்த முன்னாள் தலைவர் காளீஸ்வரனுக்கு 45 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.


பட்டாசு ஆலை பலி 23 ஆக உயர்வு


சாத்துார்: சாத்துார் அருகே அச்சங்குளம் பட்டாசு ஆலையில் பிப். 12ல் வெடி விபத்து ஏற்பட்டது. 22 பேர் இறந்த நிலையில் துாத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மார்க்கநாதபுரம் காளியப்பன் 32, நேற்று காலை இறந்தார். இதை தொடர்ந்து பலி எண்ணிக்கை 23 ஆக உயர்ந்தது. காயமடைந்து சிகிச்சை பெற்றவர்களில் 25 பேர் வீடு திரும்பினர். 10 பேர் மதுரை, சாத்துார், துாத்துக்குடி மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர்.


Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce -  ( Posted via: Dinamalar Android App )
26-பிப்-202117:07:56 IST Report Abuse
oce பிசாசு இதய வறுவல் வேணும்னு இந்த கொலைகாரனிடம் கேட்டதா. மேலை நாடுகளிலும் இத்தகைய மென்டல் கேஸ்கள் இருப்பது வியப்பாக உள்ளது.
Rate this:
Cancel
Chola - bangalore,இந்தியா
26-பிப்-202111:05:22 IST Report Abuse
Chola பட்டாசு விபத்து. கேட்கவே மிக வேதனையாக உள்ளது.. ஆலை உரிமையாளர்கள் பாதுகாப்பு தன்மையை உறுதி செய்ய வேண்டும்.. சொல்ல வார்த்தைகள் இல்லை.. ஆழ்ந்த அனுதாபங்கள்...
Rate this:
Cancel
Amirthalingam Shanmugam - Trichy,இந்தியா
26-பிப்-202109:53:41 IST Report Abuse
Amirthalingam Shanmugam அமெரிக்காவிலும் பிசாசு ,நரபலி அதுவும். இதயத்தை.. உவ்வே ...வயிற்றை குமட்டுது .இதுபோல் செய்திகள் தேவையா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X