புதுடில்லி: நாட்டில், 219 கோடி ரூபாய்க்கும் அதிகமான, சொத்து மதிப்பு கொண்ட பெரும் பணக்காரர்கள் எண்ணிக்கை, அடுத்த ஐந்து ஆண்டுகளில், 63 சதவீதம் அதிகரிக்கும் என, ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
சொத்து ஆலோசனைக்கான 'நைட் பிராங்க் இந்தியா' நிறுவனம், தன் அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:இந்தியாவில், 219 கோடி ரூபாய், அதாவது, 30 மில்லியன் டாலர் அல்லது அதற்கு மேல் சொத்து மதிப்பு கொண்டவர்களின் எண்ணிக்கை, அடுத்த ஐந்து ஆண்டுகளில், 11 ஆயிரத்து, 198 ஆக உயரும். அதாவது, 63 சதவீதம் அளவுக்கு உயரும்.

உலகளவில், பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை, 5.22 லட்சமாக இருக்கிறது. இதில், இந்திய பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை, 6,884.இந்தியாவின் பொருளாதார செயல்பாடுகள், அதிகளவில் உயர்ந்து வரும் நிலையில், விரைவில், 5 லட்சம் கோடி ரூபாய் பொருளாதாரமாக, நாடு உயரும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE