அரசியல் செய்தி

தமிழ்நாடு

"தேர்தலுக்கு பிறகு அடுத்த நகர்வு குறித்து முடிவு எடுப்பீர்கள் என நம்பலாமா..."

Updated : பிப் 26, 2021 | Added : பிப் 26, 2021 | கருத்துகள் (25)
Share
Advertisement
மூன்று கட்சிகள் மாறி விட்டீர்களே என பலரும் கேட்கின்றனர். 'எங்கு மரியாதை இல்லையோ, அங்கு இருக்காதே' என, என் அம்மா அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, தி.மு.க., மற்றும் காங்கிரசில் இருந்து விலகியுள்ளேன். பா.ஜ.,வில் நல்ல மரியாதை உள்ளது.-நடிகை குஷ்பு 'தேர்தலுக்கு பிறகு, அடுத்த நகர்வு குறித்து முடிவு எடுப்பீர்கள் என நம்பலாமா...' என, கிடுக்கி போடும் வகையில், பா.ஜ.,வில் இணைந்துள்ள
ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ, பா.ஜ., முன்னாள் தேசியச் செயலர், எச்.ராஜா, சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார், காங்., - எம்.பி., திருநாவுக்கரசர்,நடிகை குஷ்பு

மூன்று கட்சிகள் மாறி விட்டீர்களே என பலரும் கேட்கின்றனர். 'எங்கு மரியாதை இல்லையோ, அங்கு இருக்காதே' என, என் அம்மா அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, தி.மு.க., மற்றும் காங்கிரசில் இருந்து விலகியுள்ளேன். பா.ஜ.,வில் நல்ல மரியாதை உள்ளது.
-நடிகை குஷ்பு


'தேர்தலுக்கு பிறகு, அடுத்த நகர்வு குறித்து முடிவு எடுப்பீர்கள் என நம்பலாமா...' என, கிடுக்கி போடும் வகையில், பா.ஜ.,வில் இணைந்துள்ள நடிகை குஷ்பு



மத்தியில் இதற்கு முன் காங்., ஆட்சி செய்த, பத்தாண்டுகளில், பெட்ரோல் விலை, 39 ரூபாய் உயர்ந்துள்ளது. எங்களின், ஏழாண்டு ஆட்சியில், 19 ரூபாய் தான் உயர்ந்துள்ளது. ஆக, பத்து ஆண்டுகளில், விலை உயர்வு அதிகமா; ஏழாண்டுகளில் விலை உயர்வு அதிகமா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

- பா.ஜ., முன்னாள் தேசியச் செயலர், எச்.ராஜா



latest tamil news




'உங்கள் ஆட்சியில், பெட்ரோல் விலையை குறைத்திருந்தால் தான் சாதனை; அதிகப்படுத்தியது சாதனையில்லை...' என, கூறத் தோன்றும் வகையில், பா.ஜ., முன்னாள் தேசியச் செயலர், எச்.ராஜா பேட்டி



காவிரி உபரி நீர் திட்டத்தை நடைமுறைப்படுத்த விட மாட்டோம் என்று எதிர்ப்பதற்கு, கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவுக்கு எந்த தார்மிக உரிமையும் கிடையாது. எனினும், காவிரி - வைகை - குண்டாறு திட்டம், தேர்தலுக்காக அறிவிக்கப்பட்டது போல் உள்ளது.
-காங்., - எம்.பி., திருநாவுக்கரசர்


'தேர்தலுக்காக அறிவித்ததால், கர்நாடகா எதிர்ப்பு தெரிவிக்காமல் விட்டு விடவா செய்தது...' என, நினைவுபடுத்தத் தோன்றும் வகையில், காங்., - எம்.பி., திருநாவுக்கரசர் பேட்டி



தமிழகத்தின் கடன் தொகை அதிகரிப்பானது, எதிர்காலத்தில் தமிழகத்தின் மீதும், தமிழக மக்களின் மீதும், கூடுதல் சுமையை, உண்டாக்கக் கூடும் என்பதால், தமிழக அரசு நிதி நிர்வாகத்தை கடன் நெருக்கடியின்றி, திறம்பட கையாள வேண்டும் என்ற அவசியத்தை உணர வேண்டும்

-சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார்



'நீங்கள் போய் சந்தித்த, 'தியாகத் தலைவி'யிடம் கடனாக கேட்டு, நிதி நிர்வாகத்தை சரி செய்ய வேண்டியது தானே...' என, கிண்டலாக கூறத் தோன்றும் வகையில், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் அறிக்கை



தமிழக இடைக்கால பட்ஜெட்டில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு குறித்து எந்த தகவலும் இடம்பெறவில்லை. அதுபோல, கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் தள்ளுபடிக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகையும் குறைவு.

-ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ


'எல்லாம் மேலே இருக்கிறவன் பார்த்துக் கொள்வான் என, மாநில அரசு நினைக்கிறதோ...' என, கேட்கத் தோன்றும் வகையில், ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ அறிக்கை

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
26-பிப்-202120:04:27 IST Report Abuse
Bhaskaran ராஜா நோட்டாவைவிட விட அதிகம் வாக்குகள் வாங்க வாழ்த்துக்கள்
Rate this:
Cancel
vnatarajan - chennai,இந்தியா
26-பிப்-202118:29:01 IST Report Abuse
vnatarajan மேடம் குஷ்பூ அவர்களே அப்போ நீங்க கட்சியின் கொள்கைகள் பிடித்து கட்சியில் சேர்வதில்லை மரியாதைக்காகத்தான் ஒரு கட்சியிலே சேரரீங்கனு சொல்லுங்க. பிஜேபி யில் கொள்கைதான் முக்கியம். அதை நீங்க பின்பற்றாவிட்டால் அடுத்த கட்சிக்கு இப்போதே ஸீட்டுக்கு துணி விரிச்சிடுங்க.
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
26-பிப்-202116:21:40 IST Report Abuse
வெகுளி என்ன முயன்றாலும் தேர்தலுக்கு பிறகு ஹிஹி ..... ஸ்டாலின் கட்சி மாற மாட்டார்.... ஹிஹி.... எந்த கட்சியும் ஸ்டாலினை சேத்துக்காது.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X