ராகுலின் வடக்கு - தெற்கு பேச்சு: காங்., மூத்த தலைவர்கள் அதிருப்தி

Updated : பிப் 26, 2021 | Added : பிப் 26, 2021 | கருத்துகள் (37)
Share
Advertisement
புதுடில்லி: ராகுலின் வடக்கு - தெற்கு பேச்சுக்கு, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.கடந்த லோக்சபா தேர்தலில், கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராகுல், தான் எப்போதும் போட்டியிடும், உத்தர பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் தோல்வியடைந்தார்.கேரள மாநிலம், வயநாடு தொகுதிக்கு சமீபத்தில் சென்றிருந்த ராகுல், அங்கு பேசுகையில், 'நான், 15
Rahulgandhi, rahul, amethi, wayanad, congress, cong, south, north, kapil sibal,  anand sharma, MP rahul, ராகுல், ராகுல்காந்தி, வயநாடு, அமேதி,  காங்கிரஸ், காங், வடக்கு, தெற்கு, கபில் சிபல், ஆனந்த் சர்மா,

புதுடில்லி: ராகுலின் வடக்கு - தெற்கு பேச்சுக்கு, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

கடந்த லோக்சபா தேர்தலில், கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராகுல், தான் எப்போதும் போட்டியிடும், உத்தர பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் தோல்வியடைந்தார்.

கேரள மாநிலம், வயநாடு தொகுதிக்கு சமீபத்தில் சென்றிருந்த ராகுல், அங்கு பேசுகையில், 'நான், 15 ஆண்டு, வட மாநில, எம்.பி.,யாக இருந்தேன். என் அரசியல் பயணம், கேரளாவுக்கு மாறிய போது புத்துணர்வை தந்தது. கேரள மக்கள் சமூக பிரச்னைகளை மேலோட்டமாக இல்லாமல், ஆழமாக அணுகுகின்றனர்' என்றார்.


latest tamil news



ராகுலின் இந்த பேச்சுக்கு பா.ஜ., தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். ராகுலின் இந்த பேச்சுக்கு, காங்கிரஸ் மூத்த தலைவர்களும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். 'காங்கிரசுக்கு நிரந்தர தலைவர் தேவை' என கூறி, கட்சியின் தலைவர் சோனியாவுக்கு கடிதம் எழுதிய, 23 தலைவர்களில் பலரும், அதிருப்தி தெரிவித்துள்ளனர்.


முன்னாள் மத்திய அமைச்சர்கள் கபில் சிபல், ஆனந்த் சர்மா ஆகியோர் கூறுகையில், 'வாக்காளர்களின் தீர்ப்பு எதுவாகினும், மதிக்கப்பட வேண்டும். அவர்கள், எந்த பகுதி என பார்க்கக் கூடாது. யாருக்காக ஓட்டளிக்க வேண்டும்; எதற்காக ஓட்டளிக்கிறோம் என்பதை, வாக்காளர்கள் அறிவர்' என்றனர்.

எனினும், ராகுலுக்கு நெருக்கமானவர்கள் கூறுகையில், 'ராகுலை குற்றம்சொல்லும் கட்சியின் தலைவர்கள், முதலில் சிறப்பாக செயல்படட்டும். பா.ஜ.,வுக்கு உதவும் வகையில் பேச வேண்டாம்' என்றனர்.


தனி அமைச்சகம் தேவை!



புதுச்சேரி மற்றும் கேரளாவில், மீனவர்கள் இடையே ராகுல்பேசும்போது, 'மத்திய அரசிடம், மீன் வளத் துறைக்கென, தனி அமைச்சகம் உருவாக்க வலியுறுத்துவேன்' என்றார். இதற்கு பா.ஜ., தலைவர்கள், 'மீன்வளத்துறைக்கு தனி அமைச்சகம், 2019லிருந்து செயல்படுவது ராகுலுக்கு தெரியவில்லை' என, விமர்சித்தனர்.

இதற்க விளக்கம் அளித்து, 'டுவிட்டரில்' ராகுல் நேற்று பதிவிட்டிருந்ததாவது:மீன்வளம், கால்நடை, பால்வளம் ஆகிய துறைகள் இணைக்கப்பட்டு, அமைச்சகம் செயல்படுவது எனக்கு தெரியும், மீன்வளத்துக்கு என, தனி அமைச்சகம் உருவாக்க வேண்டும் என்று தான் கூறினேன். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nagendirank - Letlhakane,போஸ்ட்வானா
27-பிப்-202101:01:34 IST Report Abuse
nagendirank வந்தாரை வாழவைக்கும் தமிழகம் . இத்தாலியிலிருந்து வந்தாரை வாழவைக்கும் தென்னகம் .
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
26-பிப்-202118:11:01 IST Report Abuse
J.V. Iyer அடுத்தமுறை தெற்கிலும் தோற்றபிறகு, தாய்நாடான பாகிஸ்தானை வெளிப்படையாக கொண்டாடுவார் ராகுல்ஜி.
Rate this:
Cancel
Suppan - Mumbai,இந்தியா
26-பிப்-202116:36:30 IST Report Abuse
Suppan " 'ராகுலை குற்றம்சொல்லும் கட்சியின் தலைவர்கள், முதலில் சிறப்பாக செயல்படட்டும். பா.ஜ.,க வுக்கு உதவும் வகையில் பேச வேண்டாம்' என்றனர்." ராகுலே பா ஜ க வுக்கு உதவும் வகையில் பேசும்பொழுது மற்ற தலைவர்களை பற்றி குற்றம் சொல்வது சரியா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X