அரசியல் செய்தி

தமிழ்நாடு

போட்டு வாங்கிய அமித்ஷா: புழுக்கத்தில் பழனிசாமி

Updated : பிப் 26, 2021 | Added : பிப் 26, 2021 | கருத்துகள் (107)
Share
Advertisement
லோக்சபா தேர்தலில் தோற்றாலும், சட்டசபை தேர்தலில் பா.ஜ.,வுடன் கூட்டணி தொடர்வதாக அ.தி.மு.க அறிவித்தது.'அவசரப்பட்டு அறிவித்து விட்டீர்களே...' என, ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்துக்கும், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமிக்கும், மாவட்ட செயலாளர்கள் தரப்பில் ஏகப்பட்ட கேள்விக் கணைகள்.கள நிலவரம் அறிந்தவர்கள் அவர்கள்தானே.அ.தி.மு.க மேலிடத்தின் அறிவிப்புக்கு வித்திட்டது,
அதிமுக, பழனிசாமி, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், பன்னீர்செல்வம், அ.தி.மு.க., பாஜ, பா.ஜ.,  கூட்டணி,  அமித்ஷா, உள்துறை அமைச்சர், கொங்கு மண்டலம்,

லோக்சபா தேர்தலில் தோற்றாலும், சட்டசபை தேர்தலில் பா.ஜ.,வுடன் கூட்டணி தொடர்வதாக அ.தி.மு.க அறிவித்தது.'அவசரப்பட்டு அறிவித்து விட்டீர்களே...' என, ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்துக்கும், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமிக்கும், மாவட்ட செயலாளர்கள் தரப்பில் ஏகப்பட்ட கேள்விக் கணைகள்.

கள நிலவரம் அறிந்தவர்கள் அவர்கள்தானே.அ.தி.மு.க மேலிடத்தின் அறிவிப்புக்கு வித்திட்டது, உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சென்னை வருகை. 2020 நவம்பரில் அவர் சென்னையில் வந்தார். அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். முதல்வரும், துணை முதல்வரும் அவரிடம் பேசியபின், 'கூட்டணி தொடரும் தொடரும்' என விழாவிலேயே அறிவித்தனர்.


லோக்சபா தேர்தலில் தோற்றாலும், சட்டசபை தேர்தலில் பாஜவுடன் கூட்டணி தொடர்வதாக அதிமுக அறிவித்தது. அவசரப்பட்டு அறிவித்து விட்டீர்களே என்று ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இபிஎஸ்-க்கு மாவட்ட செயலாளர்கள் தரப்பில் ஏகப்பட்ட கேள்விக் கணைகள். அதிமுக மேலிடத்தின் கூட்டணி அறிவிப்புக்கு வித்திட்டது, உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சென்னை வருகை. கடந்த நவம்பரில் சென்னைக்கு வந்த அவர், அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். 'கூட்டணி தொடரும்' என்று விழாவிலேயே அறிவித்தனர். இருவரும் தமிழில் பேசியதால், என்ன விஷயம் என்பது அமித்ஷாவுக்கு புரியவில்லை; எடுத்து சொல்லவும் யாரும் இலு்லை. அதனால், கூட்டணி குறித்து அமித்ஷா எதுவும் பேசாமலே போய் விட்டார். அந்த சூழ்நிலையில், ஜனவரியில் பழனிசாமி டில்லி சென்றார். பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோரை சந்தித்தார். அமித்ஷாவிடம் அவர் சொன்ன விஷயம்தான், இப்போது ஆளும் கட்சி வட்டாரத்தில் வேகமாக விவாதிக்கப்படுகிறது.

latest tamil news

இருவரும் தமிழில் பேசியதால், என்ன விஷயம் என்பது அமித்ஷாவுக்கு புரியவில்லை; யாரும் எடுத்துச் சொல்லவும் இல்லை. அதனால், அவர் கூட்டணி குறித்து, எதுவும் பேசாமலே போய் விட்டார்.அப்புறம், ரஜினியை அழைத்து வந்து, அவரோடு கூட்டு சேர முயற்சிப்பதாக, பா.ஜ., பற்றி தகவல்கள் பரவின. அது நடக்காமல் போனது வேறு விஷயம்.

அந்த சூழ்நிலையில், ஜனவரியில் பழனிசாமி டில்லி சென்றார். பிரதமர் மோடியையும் அமித்ஷாவையும் சந்தித்து பேசினார். அமித்ஷாவிடம் அவர் சொன்ன விஷயம்தான், இப்போது ஆளும் கட்சி வட்டாரத்தில் வேகமாக விவாதிக்கப்படுகிறது.'பழனிசாமி.ஜீ, எனக்கு ஒரு தகவல் வந்திருக்கு. அ.ம.மு.க.,வினரால் தென் மாவட்டங்களில் நம்ம கூட்டணியோட வெற்றி பாதிக்கும்னு, உளவுத் துறை அறிக்கை தந்திருக்கு. அதனால, அ.ம.மு.க.,யும் கூட்டணில சேத்துப்போம்' என அமித் ஷா கூறி இருக்கிறார்.

முதல்வர் அதை எதிர்பார்த்தார் போல. அசராமல் பதில் சொல்லி இருக்கிறார்.'அ.ம.மு.க., நிர்வாகிகள் எல்லாம், எங்கள் பக்கம் வந்து விட்டனர். எந்த வழியிலும், நம்முடைய வெற்றி வாய்ப்பு பாதிக்காது. நீங்கள் சொன்ன தென் மாவட்டங்களில் மட்டுமே, நாம் 78 தொகுதிகளில் ஜெயித்து விடுவோம்' என்றாராம், பழனிசாமி பெருமையாக.அப்போதுதான்,'டுவிஸ்ட்' வைத்தார், அமித் ஷா.

'சூப்பர், பழனிசாமி.ஜீ... சூப்பர். தென் மாவட்டங்கள்ல உங்களுக்கு அவ்ளோ பிரைட் சன்ஸ் இருக்குன்னு தெரிஞ்சுகிட்டதுல ரொம்ப சந்தோஷம். நீங்க அங்கே நிறைய இடத்துல போட்டி போடுங்க. எங்க கட்சிக்கு கொங்கு மண்டலத்துல அதிகமான சீட் குடுங்க, அது போதும்' என்றாராம், அமித் ஷா. அப்போதுதான் பழனிசாமிக்கு புரிந்தது, அமித் ஷா நம்மிடம் போட்டு வாங்கி இருக்கிறார் என்பது.இப்போது, பா.ஜ கேட்கும், 40 சீட்களில், 30 கொங்கு மண்டலத்தில்.

'மாறி மாறி வரும் உதிரி கட்சிகளோடு பேசுவதற்கும், மாநிலம் மாநிலமாக ஆளும் கட்சியுடன் பேசுவதற்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது என்பதை, பழனிசாமிக்கு பாடமாகவே எடுத்து விட்டார் அமித் ஷா ஜீ' என, பா.ஜ நிர்வாகிகள் புல்லரிக்க சொல்கின்றனர்.

-நமது நிருபர்-

Advertisement
வாசகர் கருத்து (107)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வக்கீல் வண்டுமுருகன் - Phoenix, Arizona,யூ.எஸ்.ஏ
27-பிப்-202108:45:02 IST Report Abuse
வக்கீல் வண்டுமுருகன் புரிலனா, மொழி பெயர்ப்பு சிகரம் தங்கபாலு கூப்புடுங்கப்பா
Rate this:
Cancel
வக்கீல் வண்டுமுருகன் - Phoenix, Arizona,யூ.எஸ்.ஏ
27-பிப்-202108:42:11 IST Report Abuse
வக்கீல் வண்டுமுருகன் நீங்கல்லாம் வோட்டுக்கு ஆயிரம் ரெண்டாயிரம் கொடுத்து MLA ஆனா, அவீங்க அந்த MLA க்கலவே, வாங்கிற ஆளுக. யார்கிட்ட
Rate this:
Cancel
Zakir Hussain - KANNUR,இந்தியா
27-பிப்-202106:59:37 IST Report Abuse
Zakir Hussain ADMK would collapse if it goes with bjp. Even with modi wave admk won one loksabha seat. Admk should bring Dinakaran and some other smaller parties and form grand alliance. Otherwise dmk would sweep election. This would vanish Ammas party forever as bjp may take admk space bt all its unethical coward practice it is doung aginst other parties like goa assam thripura west bengal mp karnataka pondicherry etc. Admk be careful
Rate this:
Seitheee - San Jose,யூ.எஸ்.ஏ
28-பிப்-202115:56:50 IST Report Abuse
Seitheeeஉன்னக்கு பயம். எங்க தி மு க தோத்துடுமோ ? இந்த வட்டி வோட்டு ஆதிமுக விற்குத்தான். பிஜேபியினால் பலன் அதிகமாக இருக்கும். திமுக அல்லக்கை இப்படியெல்லாம் கருத்து போட்டு டயம் வேஸ்ட். ஹிந்து வோட்டு பிஜேபிக்கு தான் விழும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X