அரசியல் செய்தி

தமிழ்நாடு

இந்திய கம்யூ., மூத்த தலைவர் தா.பாண்டியன் காலமானார்

Updated : பிப் 26, 2021 | Added : பிப் 26, 2021 | கருத்துகள் (77)
Share
Advertisement
சென்னை: இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் இன்று (பிப்.,26) காலமானார்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான தா.பாண்டியன் (வயது 88) சிறுநீரகப் பிரச்னையால் அவதிப்பட்டு வந்தார். அதற்கான மருந்துகளை உட்கொண்டுவந்த அவர், உடல்நலக் குறைபாடு காரணமாக சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு செயற்கை சுவாச கருவி
CPI, Tha_Pandian, Communist, Tamilnadu, இந்திய கம்யூனிஸ்ட், தா பாண்டியன், காலமானார், மறைவு

சென்னை: இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் இன்று (பிப்.,26) காலமானார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான தா.பாண்டியன் (வயது 88) சிறுநீரகப் பிரச்னையால் அவதிப்பட்டு வந்தார். அதற்கான மருந்துகளை உட்கொண்டுவந்த அவர், உடல்நலக் குறைபாடு காரணமாக சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு செயற்கை சுவாச கருவி பொருத்தி, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்த நிலையில், அவர் இன்று காலமானார்.


latest tamil news


மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வெள்ளைமலைப்பட்டி கிராமத்தில் 1932ல் பிறந்த தா.பாண்டியன், மாணவர் பருவத்தில் கம்யூனிச சித்தாந்தத்தில் ஈர்க்கப்பட்டு பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றுள்ளார். அழகப்பா கல்லூரியில் பேராசிரியராக பணியை துவக்கிய தா.பாண்டியன், ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியை தொடங்கி 1983 முதல் 2000 வரை மாநில செயலராக இருந்தார்.
பின், 2000ல் கட்சியை கலைத்துவிட்டு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் மீண்டும் இணைந்தார். இதற்கிடையே 1989 முதல் 1996 வரை இரண்டு முறை லோக்சபா எம்.பி., ஆகவும் இருந்துள்ளார். மேலும், இ.கம்யூ., மாநில செயலராக 2005 முதல் 2015 வரை பதவி வகித்தார். கடந்த 2018 வரை இந்திய கம்யூனிஸ்ட் தேசிய நிர்வாக்குழு உறுப்பினராக பதவி வகித்தார்.

தா.பாண்டியனின் மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் இரங்கல் தெரிவித்தனர்.
திமுக தலைவர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது:
பொதுவுடைமைப் போராளி - ஒடுக்கப்பட்டோரின் போர்க்குரல் - பண்பாளர் - தமிழ் மண்ணை அடிமையாக விடமாட்டோம் என சிம்மக்குரல் எழுப்பிய தா.பாண்டியன் மறைவு பொதுவுடைமை கொள்கையில் நம்பிக்கையுள்ள அனைவருக்கும் பேரிழப்பு.

Advertisement
வாசகர் கருத்து (77)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
27-பிப்-202111:40:39 IST Report Abuse
Malick Raja மனிதனின் இறப்பிலும் குளிர்காய நினைக்கும் மனித நேயமற்ற ,மனித பண்பற்ற , மனிதஉருவில் கால்நடைகளின் அறிவைக் கொண்டு புத்தி ஜீவிகள் கருத்தின் இழுக்கு அவர்களை மட்டுமே சார்ந்திருக்கும்
Rate this:
Cancel
Nallappan Kannan Nallappan - Perambalur,இந்தியா
27-பிப்-202111:18:05 IST Report Abuse
Nallappan Kannan Nallappan கம்யூனிசம் ஒரு வெற்றுகோஷம் என்று தெரிந்துபோனதால் உலகின் பெரிய நாடுகளில் ஒன்றான ரஷ்யாவில் கம்யூனிசம் துடைத்து எறியப்பட்டது. கார்ல் மார்ஸ், லெனின் சிலைகள் உடைத்து எறியப்பட்டன. கம்யுனிசத்திடமிருந்து விடுதலை வேண்டுமென்று போராடிய சைனாவில் அடக்குமுறை பரிசாக கிடைத்து போராடிய பலர் அநியாயமாக கொல்லப்பட்ட நிகழ்வு நடந்தது. ஒரு ஜோதிபாசை பெரிதாக பேசும் நீங்கள் இதையெல்லாம் மறந்து விட்டீர்கள். இதே சோ ஒரு முறை கீரமணியிடம் நீங்கள் கடவுள் எதிர்ப்பு என்று பேசுகிறீர்கள். ஆனால் ஹிந்து மதத்தை மட்டுமே ஏதிக்கிறீர்கள். கிறிஸ்துவம், இஸ்லாம், பவுத்தம் இப்படி ஏராளமான மதங்கள் உள்ளன. ஆனால் அவற்றையெல்லாம் பற்றி மட்டும் நீங்கள் ஏன் வாய் திறப்பதில்லை என்று கேட்டார். அதற்கு கீரமணியிடம் பதிலில்லாமல் போனது. நாம் நினைப்பது மட்டுமே சரி, உண்மை என்று நினைப்பது அறியாமை மட்டுமே. ஜெய் ஹிந்த்..
Rate this:
Cancel
Nallappan Kannan Nallappan - Perambalur,இந்தியா
27-பிப்-202111:15:50 IST Report Abuse
Nallappan Kannan Nallappan தாமஸ் பாண்டியன் வசதி இல்லாதவர் என்றுயார் உனக்கு சொன்னது . இரண்டு கம்யூனிச கட்சிகளுக்கும் தியமுக விடம் கொடிகளாக வாங்கியது மறந்து விட்டதோ ? இவர் இந்துமதத்தை திட்டுவார். கிறிஸ்துவத்தையும் இஸ்லாத்தையும்போற்றுவார் சொந்த பிறந்த நாட்டின்மீது பிடிப்புஇ ல்லாதவர் கம்முனிச நாடுகளுக்கு அடிமை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X