எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

பள்ளிக்கூடம் போகாமலே... பாடமும் படிக்காமலே: மாணவர்கள் குஷி; கல்வியாளர்கள் அச்சம்

Added : பிப் 26, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
கோவை: ஒன்பது முதல் பிளஸ் 1 வரை, ஆல்பாஸ் செய்யப்படும் என்ற முதல்வர் அறிவிப்பு, தேர்தல் காரணமாக எடுக்கப்பட்ட அவசர அறிவிப்பாக, கல்வியாளர்கள் கருதுகின்றனர்.சட்டசபையில் 110 விதியின் கீழ், ஒன்பது, பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மாணவர்களுக்கு தேர்வு நடத்தாமல், ஆல்பாஸ் செய்யப்படும் என, முதல்வர் பழனிசாமி நேற்று அறிவித்தார். இந்த அறிவிப்பால், மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும்
பள்ளிக்கூடம் போகாமலே... பாடமும் படிக்காமலே: மாணவர்கள் குஷி; கல்வியாளர்கள் அச்சம்

கோவை: ஒன்பது முதல் பிளஸ் 1 வரை, ஆல்பாஸ் செய்யப்படும் என்ற முதல்வர் அறிவிப்பு, தேர்தல் காரணமாக எடுக்கப்பட்ட அவசர அறிவிப்பாக, கல்வியாளர்கள் கருதுகின்றனர்.

சட்டசபையில் 110 விதியின் கீழ், ஒன்பது, பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மாணவர்களுக்கு தேர்வு நடத்தாமல், ஆல்பாஸ் செய்யப்படும் என, முதல்வர் பழனிசாமி நேற்று அறிவித்தார். இந்த அறிவிப்பால், மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் அபாயம் ஏற்படும்.இதோடு கடந்தாண்டு, கொரோனா தொற்று பரவ துவங்கிய போது, பிளஸ் 1 மாணவர்களுக்கு ரத்து செய்யப்பட்ட தேர்வுகளை மீண்டும் நடத்திய அரசு, தற்போது பள்ளிகள் திறந்த பிறகு, பொதுத்தேர்வு ரத்து செய்வதன் அவசியம் என்ன என்ற கேள்வியும் எழுந்துள்ளது.மாணவர்கள் உற்சாகத்துடன் வரவேற்றாலும், பத்தாம் வகுப்புக்கு மட்டுமாவது பொதுத்தேர்வு நடத்த வேண்டுமென, கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கல்வியாளர்கள், பெற்றோர்களிடையே மாணவர்களின் எதிர்காலம் குறித்த அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது என்பதே உண்மை.

இதுகுறித்து இவர்கள் என்ன நினைக்கிறார்கள்?


அருளானந்தம், மாநில தணிக்கையாளர், தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்


நடப்பாண்டில் ஆன்லைன் வகுப்பிலும் தேர்வு நடத்த அனுமதிக்கப்படவில்லை. பள்ளி திறந்த பிறகும், வருகைப்பதிவு கட்டாயமாக்கப் படவில்லை. எந்த தேர்வும் நடத்தாமல், மதிப்பெண்கள் கணக்கிடுவது எப்படி. பத்தாம் வகுப்புக்கு மட்டுமாவது பொதுத்தேர்வு நடத்தப்பட வேண்டும்.


பேட்ரிக் ரெய்மாண்ட், பொது செயலாளர், தமிழ் நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்புபத்தாம் வகுப்புக்கு பின், குறிப்பிட்ட சதவீத மாணவர்கள், டிப்ளமோ, ஐ.டி.ஐ., போன்ற தொழிற்பயிற்சி படிப்புகளை தேர்வு செய்கின்றனர். இவர்களுக்கு தேர்வே நடத்தாமல், 'ரிசல்ட்' வெளியிட்டால், அவர்களின் கல்வித்தரம் கேள்விக்குறியாகிவிடும். கமிஷனர் தலைமையில், குழு அமைத்து, பாடத்திட்டம் குறைக்கப்பட்டு, 'நாமினல்' எண்ணுக்கு பட்டியல் தயாரிக்கும் பணி முடிக்கப்பட்ட நிலையில், தேர்வை ரத்து செய்வது சரியல்ல.சுந்தர வடிவேலு, (பெற்றோர்)


குழந்தைகள் கடந்த இரு மாதங்களாக தான் முறையாக பள்ளிக்கூடம் செல்கின்றனர். இதுநாள் வரை இணையவழி படித்தாலும். முழுமையான கற்றல் மாணவர்களிடையே நடக்க வாய்ப்பில்லை. கற்றல் என்பது எந்தவகையில் தொய்வு இல்லாதவாறு ஏதேனும் ஒருவகையில் மாணவர்களுக்கு கிடைத்துக்கொண்டே இருக்க வேண்டும். அரசு இதை உறுதிப்படுத்த வேண்டும்.


பிந்து, (பெற்றோர்)


ஊரடங்கில் விளையாட்டுத்தனமாகவே இருந்துவிட்டனர். சூழலும் அதற்கேற்ப அமைந்துவிட்டது. அவர்களை இறுக்கிப்பிடித்து, குறுகிய காலத்தில் பாடங்களை முடிக்க சொன்னால், ஆசிரியர்கள் அவசர கதியில் நடத்த அதிக வாய்ப்புள்ளது. மாணவர்களுக்கு புரிந்ததா இல்லையா என்றெல்லாம் சோதிக்க நேரமில்லை. தேர்தல் பணிகள் வேறு நடந்து வருகிறது. இந்த முடிவு மிகச்சரி.


மூர்த்தி, (கல்வியாளர்)


கொரோனாவால், கற்றல் முழுமையாக போய்விட்டது. ஆன்லைன் வகுப்பு சரிபாதியினருக்கு நன்மை அளிக்கவில்லை. நேரடி கற்றல் முறையே கற்றல் திறன் குறைந்தவர்களை மேம்படுத்த உதவும். பாடத்தை முழுமையாக நடத்தாமல் பரீட்சை வைப்பது சரியானது அல்ல. இதன் அடிப்படையில் தேர்ச்சி அளிப்பது சாத்தியமில்லை. இயல்பு திரும்பிய பிறகு தேர்வு நடத்துவதே சிறப்பு. குழந்தைகள் மத்தியில், கல்வி திறனை அதிகரிக்க தேவையான நடவடிக்கை களை எடுப்பதே சிறப்பாக இருக்கும்.


சுந்தரமூர்த்தி, (ஓய்வு பெற்ற ஆசிரியர்)


பொதுத்தேர்வு எழுதுவதற்கு, பத்தாம் மற்றும் பிளஸ் 1 மாணவர்களை, மனதளவில் தயார்ப்படுத்துவது சிரமம். அடுத்த முறை 'சிலபஸ்' குறைக்கவும் வாய்ப்பில்லை. வரும் கல்வியாண்டில் மாணவர்களை ஊக்கப்படுத்தி, தேர்வு அட்டவணை, மாதிரி வினாத்தாள், கல்வி சார்ந்த நடவடிக்கைகளை முன்கூட்டியே திட்டமிட்டு மாணவர்களுக்கு அளித்தால், ஓரளவு இந்த சூழலை சமாளிக்கலாம்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arunachalam Muthu - Karaikudi,இந்தியா
26-பிப்-202112:52:30 IST Report Abuse
Arunachalam Muthu Very first Macaulay education worst, in this corona situation CM Mr. EPS announced 100% correct. Bcoz of students mind stress, complex, suicide etc.,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X