அரசியல் செய்தி

தமிழ்நாடு

பழைய திட்டங்களுக்கு பச்சை பெயிண்ட் அடிக்கும் அதிமுக அரசு: ஸ்டாலின்

Updated : பிப் 26, 2021 | Added : பிப் 26, 2021 | கருத்துகள் (65)
Share
Advertisement
விழுப்புரம்: அதிமுக அரசு, பழைய திட்டங்களுக்கு பச்சை பெயிண்ட் அடித்து புதிய திட்டங்கள் போல் துவக்குவதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.விழுப்புரம் மாவட்டம் மயிலம் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் ‛உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' தேர்தல் பிரசார கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாவது: இதுவரை மக்களுக்கு எதுவும் செய்யாத முதல்வர் பழனிசாமி, இப்போது தான்
DMK, Stalin, SlamsADMK, திமுக, தலைவர், ஸ்டாலின், உங்கள்_தொகுதியில்_ஸ்டாலின், அதிமுக, அரசு, மோடி, பழனிசாமி,

விழுப்புரம்: அதிமுக அரசு, பழைய திட்டங்களுக்கு பச்சை பெயிண்ட் அடித்து புதிய திட்டங்கள் போல் துவக்குவதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் மயிலம் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் ‛உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' தேர்தல் பிரசார கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாவது: இதுவரை மக்களுக்கு எதுவும் செய்யாத முதல்வர் பழனிசாமி, இப்போது தான் கல்வெட்டுகளை திறந்துவைக்கிறார். இடைக்கால பட்ஜெட்டில் ஏராளமான கற்பனை அறிவிப்புகள் எல்லாம் அறிவித்துள்ளனர். தமிழக நிர்வாகத்தை சீரழித்துவிட்டனர்.


latest tamil news


பழனிசாமி, பன்னீர்செல்வத்திற்கு தெரிந்த ஒரே விஷயம் கடன் வாங்குவது. கடன் வாங்கி தமிழகத்தின் கடனை 5.70 லட்சமாக அதிகரித்துள்ளனர். தேர்தல் வரவுள்ளதால் பிரதமர் மோடி அடிக்கடி தமிழகம் வருகிறார். அனைத்து மாவட்டங்களிலும் திமுக அராஜகத்தை அவிழ்த்துவிட்டதாக பிரதமர் பேசுகிறார். அவரிடம் என்ன ஆதாரம், என்ன புள்ளிவிவரம் உள்ளது?. தமிழகம், புதுச்சேரியில் சமீபத்தில் பா.ஜ.,வில் இணைந்தவர்கள் குறித்து பிரதமரும், உள்துறை அமித்ஷாவும் விசாரித்து பாருங்கள். அனைவரும் குற்றப்பின்னணி கொண்டவர்கள். அப்படி இருக்கையில் திமுக பற்றி பேசுவதை இதோடு நிறுத்திக்கொள்ளுங்கள்.


latest tamil news


ஒரு பெண் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் ஜெயலலிதா என மோடி பேசியுள்ளார். ஆனால், மாநிலங்களில் சிறந்த ஆட்சியை தந்தது லேடியா, மோடியா என உரக்க பேசியது ஜெயலலிதா என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள். 2016ல் மே மாதம் ஓசூர், சென்னையில் நடந்த கூட்டத்தில், ‛ஜெயலலிதாவின் ஆட்சியில் ஊழல் பெருகியுள்ளது, ஊழல் மிகுந்த இந்த ஆட்சியை மாற்ற வேண்டும்' என பிரதமர் மோடி பேசினார். அதேபோல், மதுரை கூட்டத்தில் அமித்ஷா, ‛ஊழல் மேல் ஊழல் செய்யும் ஆட்சிக்கு சொந்தக்காரர் ஜெயலலிதா' என பேசினார். இதையெல்லாம் மறந்துவிட்டீர்களா? இப்போது ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவி நாடகம் ஆடுகிறார் மோடி.

தங்களது கொள்ளையில் இருந்து தப்பவே மோடியை ஆதரிக்கிறார் பழனிசாமி. இந்த நாடகங்களை எல்லாம் தமிழக மக்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். பழைய திட்டங்களுக்கு பச்சை பெயிண்ட் அடித்து புதிய திட்டமாக துவங்குகின்றனர். மக்களின் எந்த கோரிக்கைகளையும் நிறைவேற்றவில்லை. இனி அமையவுள்ள திமுக ஆட்சியில் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என உறுதியளிக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (65)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
I LOVE MY INDIA - CHENNAI,குவைத்
27-பிப்-202109:31:28 IST Report Abuse
I LOVE MY INDIA விடுப்பா இதே மதுரையில உங்க அப்பா இந்திராகாந்தி பத்தி சொன்னதையே மறந்திட்டோம் . இதெல்லாம் அரசியல்........
Rate this:
Cancel
27-பிப்-202105:58:52 IST Report Abuse
S.Balakrishnan அதிமுக திட்டங்களுக்கு பச்சை சாயம் பூசுவது உண்மை: நியாயம். அதை விமர்சனம் செய்யும் அருகதை ஸ்டாலிக்கு உண்டா ? நீங்கள் கிடப்பில் போட்டு கொள்ளையடித்து கருப்பு பெயிண்ட் அடித்த திட்டங்களின் பட்டியலை உங்களால் வெளியிட முடியுமா ?அதிமுக அரசு திட்டங்களுக்கு பச்சை பெயிண்ட் அடித்து இந்தியாவின் பல துறைகளில் முன்னனி மாநிலமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. வேளாண் துறையிலும் இந்தியாவில் சிறந்து தமிழ்நாட்டுக்கே பச்சை (பசுமை)யை தழைத்தோங்க செய்திருக்கிறார்கள். இதையும் சேர்த்து விளம்பரப்படுத்தி அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்புக்கு வழிவகை செய்து கொடுக்கவும்.
Rate this:
Cancel
27-பிப்-202105:33:03 IST Report Abuse
மனுநீதி சரி சரி அந்த ஹைட்ரொ கார்பன், நீட் தேர்வுக்கு தெரியாமல் நீங்கள் கையெழுத்துப் போட்ட திட்டங்களுக்கு என்ன கலர் பெயிண்ட் அடிக்கலாம் என்று சொல்லுங்கள் சுடலையாரே? கொள்ளை அடிக்கும் குணம் திமுகவின் ரத்தத்தில் ஊறியுள்ளது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X