பொது செய்தி

இந்தியா

கொரோனா காலத்தில் புது பாதை அமைத்த இந்தியா: பிரதமர் மோடி

Updated : பிப் 26, 2021 | Added : பிப் 26, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
புதுடில்லி: கொரோனா காலத்தில், தனக்கென புதிய பாதை அமைத்த இந்தியா, உலக நாடுகளுக்கும் உதவி செய்ததாக பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.எம்ஜிஆர் பல்கலை பட்டமளிப்பு விழாவில் வீடியோ கான்பரன்சிங் முறையில் கலந்து கொண்ட பிரதமர் மோடி பேசியதாவது: இந்திய சுகாதார அமைப்பை, புது நம்பிக்கையுடனும், புது மரியாதையுடனும் பார்க்க துவங்கி உள்ளார்கள். இது உங்கள் மீது உலகம் மிகப்பெரிய
Pmmodi, narendramodi, corona, india,  healthsector, பிரதமர் மோடி, சுகாதாரத்துறை, கொரோனா,

புதுடில்லி: கொரோனா காலத்தில், தனக்கென புதிய பாதை அமைத்த இந்தியா, உலக நாடுகளுக்கும் உதவி செய்ததாக பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.

எம்ஜிஆர் பல்கலை பட்டமளிப்பு விழாவில் வீடியோ கான்பரன்சிங் முறையில் கலந்து கொண்ட பிரதமர் மோடி பேசியதாவது: இந்திய சுகாதார அமைப்பை, புது நம்பிக்கையுடனும், புது மரியாதையுடனும் பார்க்க துவங்கி உள்ளார்கள். இது உங்கள் மீது உலகம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை வைத்துள்ளது என்பதற்கு அர்த்தம். இளமை மற்றும் வலிமையான உங்கள் தோளில் கடமை கூடியுள்ளது. கொரோனா காலத்தில், இந்தியா புதிய பாதையை மட்டும் அமைக்காமல் மற்றவர்களுக்கும் உதவி செய்தது. உலகிலேயே கொரோனாவினால் உயிரிழப்போரின் விகிதம் இந்தியாவில் தான் குறைவு. மீள்வோரின் விகிதம் அதிகம்.


latest tamil news
இலங்கையில் நான் திறந்து வைத்த மருத்துவமனை நிகழ்ச்சியை என்னால் மறக்க முடியாது. இந்த நவீன மருத்துவமனை பலருக்கு உதவி வருகிறது. சுகாதாரத்துறையில் எடுத்து கொண்ட முயற்சிகள், முக்கியமாக தமிழ் சமுதாயத்திற்காக செய்த இந்த முயற்சி எம்ஜிஆருக்கு மகிழ்ச்சி அளித்திருக்கும். ஏழைகள், பெண்கள் அதிகாரம் மற்றும் சுகாதாரத்துறை சார்ந்து எம்ஜிஆர் நிர்வாகம் இருந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எம்ஜிஆர் பிறந்த இலங்கைக்கு சென்று இருந்தேன். இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் நலனுக்காக பணியாற்றுவதில் இந்தியா பெருமிதம் கொள்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
27-பிப்-202104:41:50 IST Report Abuse
Mani . V ஸாரி, புதுப்பாதை அமைத்தது சீனா - அருணாசல பிரதேசம் வரை.
Rate this:
Cancel
m.viswanathan - chennai,இந்தியா
26-பிப்-202122:06:07 IST Report Abuse
m.viswanathan எது , பார்த்திபன் படமா ? புதிய பாதையை , புது பாதையாக மாற்றி விட்டிர்களா
Rate this:
Cancel
வெற்றி நமதே: தடுப்பூசி போட்டுக் கொள்வோம் - தடுப்பூசியால் எவ்வித ஆபத்தும் இல்லை” ,இஸ்ல் ஆப் மேன்
26-பிப்-202120:11:30 IST Report Abuse
வெற்றி நமதே: தடுப்பூசி போட்டுக் கொள்வோம் சாவர்க்கரின் வாழ்வினை புரட்டி பார்க்குமுன் இங்கிருக்கும் ஒரு பெரிய பொய்யினை முதலில் உடைக்க வேண்டும் அது சாவர்க்கர் வெள்ளையனுக்கு மன்னிப்புகடிதம் எழுதினார் என்பது சாவர்க்கர் தன்னை கொடும் அந்தமான் சிறையில் இருந்து ரத்னகிரி சிறைக்கு மாற்றத்தான் கடினம் எழுதினாரே அன்றி வேறேதுமல்ல‌ ஆம் சாவர்க்கரும் வ.உ.சியும், சிவாவும், பாரதியும் சிறையில் வாடினார்கள் படாதபாடு பட்டார்கள் ஆனால் காந்திக்கு நவாப்களின் பங்களாவில் வீட்டு சிறை எனும் உல்லாச தண்டனை கொடுக்கபட்டது, நேரு இருந்த சிறையும் அப்படியே தண்டனைகொடுக்கபட்டாலும் நேரு சுவிட்சர்லாந்து செல்ல அனுமதி கொடுக்கபட்டு உல்லாச பயணத்துக்கு வழிவகை செய்யபட்டது நேதாஜி வெள்ளையனை எதிர்த்து காடு காடாய் நாடு நாடாய் ஓட காந்தி, நேரு போன்ற தலைவர்கள் சுகவாழ்வினை வாழ்ந்து கொண்டிருந்தனர் அவர்கள் மேல் சிறு கீறல் கூட விழவில்லை சாதிகள் இல்லையடி பாப்பா என பாடிய பாரதியினை ஒட விரட்டிய வெள்ளையன் அம்பேத்கரை சாதி ஒழிப்பு போராளி என தன்னருகே அமர்த்தியதெல்லாம், பாரதியினை ஓடவிட்டு தாகூரை கவிஞன் என்றதெல்லாம் விடைகாணா மர்மங்கள் இங்கு வரலாறு எல்லாமே பொய், வெள்ளையன் எழுதிவைத்து அதை காங்கிரசும் படிக்க வைத்த பெரும் பொய் அந்த பொய் கனவில் இருந்து வெளிவந்து சாவர்க்கரை படியுங்கள் முழு தெளிவும் கிடைக்கும் அந்த மனிதர் நிச்சயம் நாட்டுபற்றாளர், தேசாபிமானி. இந்த தேசவிடுதலைக்கு ஏதேனும் செய்தாக வேண்டும் என்ற வெறியில் வாழ்வினை அர்பணித்தவர் அந்த சாவர்க்கர். நாசிக் அருகே பிறந்த அவர் மிக சிறியவயதிலே அப்படி தொடங்கியவர். வீரசிவாஜி ஏற்றிவைத்த அந்த பெரும் நெருப்பு அவரிலும் தொடர்ந்து எரிந்தது. இந்நாடு சுதந்திரம் பெறவேண்டுமென்றால் அப்போது இருந்த 30 கோடி மக்களும் ஒன்றுபட வேண்டும். மொழியால் அவர்களை இணைக்க முடியாது, ஆட்சி என்றாலும் 600 சமஸ்தானம் இருந்தது. இம்மக்களை இணைக்க மதம் ஒரு வழி என கண்டார் திலகர் அப்படி மத கொண்டாட்டத்தில் தேசவிடுதலையினை கலந்து அவர் தொடங்கியதுதான் விநாயக சதுர்த்தி ஊர்வலம், சிவாஜி ஊர்வலம் எல்லாம். இதனை எல்லாம் பார்த்து வளர்ந்த சாவர்கருக்கு அதே கொள்கை வந்தது. வானரசேனை என்றொரு அமைப்பினை தன் 11 வயதிலே தொடங்கினார். வெள்ளையரின் மிகபெரிய கொடுமைகளெல்லாம் அவர் மனதை வலிக்க செய்தன. நல்ல அறிவாளி, படிப்பு அவருக்கு இயல்பாய் வந்தது. எந்த இந்திய தலைவருக்கும் இல்லா ஒரு வித்தியாசமான குணம் அவருக்கு இருந்தது, அது இந்தியாவினை வரலாற்று பாணியில் நோக்குவது ஆம் நடந்த வெள்ளையன் ஆட்சிக்கு சலாம் போட்டு பொற்காலம் புரட்சி என அவர் பரணிபாட விரும்பவில்லை, இந்தியாவின் பாரம்பரிய பெருமையினை அதன் வரலாற்றில் இருந்து நோக்கினார் எங்கிருந்தோ இங்கு பிழைக்க வந்தவன் இவ்வளவு சிரமபட்டு இத்தேசத்தை ஆள்கின்றான் என்றால் இது சாதாரண பூமி அல்ல என்பது அவருக்கு விளங்கிற்று. வரலாற்றை அவர் தோண்டி தோண்டி சுதந்திர கனலை ஊட்டினார் அலெக்ஸாண்டரை உலகம் மாவீரன் என சொன்ன காலத்தில் அவன் இந்திய எல்லையில் பெற்ற தோல்வியினை நிறுவி சொன்னவர் சாவர்க்கர். இதெல்லாம் ஐரோப்பியரின் கவுரவத்திற்கு வந்த இழுக்காக கருதிய அவர்கள் அன்றே குறி வைத்தனர், இன்னும் ஏராள இந்திய வரலாறுகளை வெளிகொணர்ந்தார் சாவர்க்கார் 1857 சிப்பாய் புரட்சி வெறும் கலவரம் என உலகெல்லாம் பிரிட்டிசார் பூசி மெழுகியபொழுது, அது இந்திய சுதந்திரபோர் என 1907ல் புத்தகம் எழுதி உலகினை திரும்பி பார்க்க வைத்தவர் சாவர்க்கர் . இதனால் தன் படை வீரர்கள் எல்லாம் படிக்க வேண்டிய புத்தகம் சாவர்கருடையது என உத்தரவே பின்னாளில் போட்டார் நேதாஜி லண்டனில் பாரிஸ்டர் படிக்க சென்றாலும் மனிதர் சும்மா இருக்கவில்லை, இந்திய சங்கத்தை உருவாக்கினார். ஆயுதங்களை உருவாக்கி பயிற்சியளித்தார் அதில் பெண்களும் இருந்தனர் நிச்சயமாக சொல்லலாம் நேதாஜிக்கு இவ்விஷயத்தில் சாவர்க்கரே முன்னோடி. அவரின் வீரர்கள் இந்தியாவில் ஆளும் கொடூர கலெக்டர்கள் லண்டன் வரும்போது அங்கே தீர்த்துகட்டினர், சிங்கத்தின் குகையில் நுழைந்து அதன் பிடறியினை உலுக்கினார் சாவர்க்கர் முதலில் தடுமாறிய ஸ்காட்லான்டு யார்டு பெரும் போராட்டத்திற்கு பின் அவரை கைதுசெய்தது, விசாரணைக்கு கப்பலில் இந்தியா வந்தபொழுது கப்பல் ஓட்டை வழியாக தப்பி சாகசமாக பிரான்ஸை அடைந்தார் சாவர்க்கர் பின் பிரான்ஸ் பிரிட்டன் அரசுகள் பேசி வழக்கு நடந்து அவருக்கு 50 ஆண்டு சிறை என முடிவானது. நிச்சயம் அவரை சுட்டுகொல்லும் முடிவில்தான் பிரிட்டன் இருந்தது, ஆனால் பிரான்ஸ் விவகாரம் வந்தபின் அதற்கு பல விவகாரங்கள் வந்ததால் தப்பினார் சாவர்க்கர் இந்திய சுதந்திர போராட்டத்தில் 1911ல் 50 வருடம் சிறை தண்டனை விதிக்கபட்ட ஒரே தலைவர் அவர்தான் கொடூர அந்தமான் சிறையில் அவரை வைத்தார்கள். செக்கிழுத்தார், மரம் வெட்டினார் இன்னும் 6 மாதம் இருட்டறையில் அடைத்தல், தனிச்சிறை என அவரை உடனே கொல்லமுடியாவிட்டாலும் சித்திரவதை செய்து கொல்ல முடிவு செய்தார்கள் கல்பாணி எனும் படத்தில் வந்த சித்திரவதைகளை அவரும் அனுபவித்தார் . அப்பொழுதும் எழுத பேனாவும் பேப்பரும் கேட்டாலும் கிடைக்கவில்லை. இந்த வலிகள் பின்னாளில் மறக்கும், கூடாது இது மறக்கவே கூடாது என சுவற்றில் கல்லால் எழுதிவைத்தார் சாவர்க்கர். புகழ்பெற்ற கவிதைகள் அங்குதான் அவரால் எழுதபட்டன‌ இதுவரை மிக சரியாக சென்ற அவரின் வரலாறு இதற்கு பின்புதான் மாறுகின்றது அவர் தான் செய்தது தவறு என சொல்லவில்லை, சுதந்திர போராட்டம் செய்யமாட்டேன் என சொல்லவில்லை முன்பு பிரிட்டனில் தப்பித்தது போல் தப்பிக்க மாட்டேன் என்னை ரத்னகிரி சிறைக்கு மாற்றுங்கள் என்றுதான் கோரியிருந்தார், அந்த தப்பித்த முயற்சி தான் தவறு என குறிப்பிட்டிருந்தார். ஆம் அன்று ஜின்னா தீவிர இஸ்லாமிய தலைவனாக செயல்பட்டபொழுது இந்துக்களுக்கான தலைவராக யாருமில்லை, ஜின்னா தனி இஸ்லாமிய நாடு கோரியபொழுது அவரை கண்டிக்க எல்லோருக்கும் தயக்கம் இருந்தது 1924ல் நன்னநடத்தை என விடுதலையும் செய்யபட்டார் சாவர்க்கார் ஏன் விடுதலை செய்யபட்டார் என்றால், அதுதான் வெள்ளையன் தந்திரம். சாவர்க்கர் பற்றி அவனுக்கு தெரியும், காந்தி பற்றியும் தெரியும் இருவரையும் களத்தில் விட்டால் அவனுக்கு வேலை குறைவு சாவர்க்கார் வெளிவரும் பொழுது ஜின்னாவின் அட்டகாசம் உச்சத்தில் இருந்தது, பிரிவினை நோக்கி அவன் நடைபோட அவனுக்கு சில நவாப்களின் ஆதரவும் இருந்தது சில நவாப்களோ துருக்கிய சாம்ராஜ்ய உதவியுடன் இந்தியாவில் மறுபடி மொகலாய ஆட்சி கொண்டுவந்து வெள்ளையனை விரட்டி இதை இஸ்லாமிய பூமியாக்க முழு முயற்சி செய்த காரியங்களும் அன்று உண்டு காந்தியின் கள்ளமதசார்பின்மை இங்கு இந்துக்களுக்கு ஒரு முடிவும் தராது என உணர்ந்த சாவர்க்கர் 1925ல் இந்து மகாசபையினை தொடங்கினார். ஆர்.எஸ்.எஸ் முதல் இன்றைய பாஜக வரை அதுதான் தாய் இயக்கம் காந்திக்கும் சாவர்க்கருக்கும் முட்டி கொண்டது. இருவரும் இந்திய சுதந்திரத்திற்கு பாடுபட்டாலும் வழி வேறாய் இருந்தது, காந்திய அஹிம்சை பலருக்கு பிடிக்கவில்லை அதில் சாவர்க்கரும் ஒருவர். காந்தியின் மதசார்பின்மை ஜின்னாவுக்கு ஆதரவானது என்பதுதான் எல்லோரின் எதிர்ப்புக்கும் காரணம், ஆனால் காந்தி திருந்தியபாடில்லை தீவிரமாக இந்துத்வா பேச தொடங்கினார் சாவர்க்கர், ஆனால் தீண்டாமை ஒழிப்பு, சாதி ஒழிப்பு போன்ற சீர்திருத்தங்களை செய்யவும் அவர் தயங்கவில்லை. எல்லா சாதி இந்துக்களும் வணங்க "பதித பவன்" எனும் ஆலயத்தையும் ஏற்படுத்தினார் உண்மையில் அன்று சாவர்க்கருக்கு ஆதரவு கூடிற்று, எங்கிருந்தோ வந்தார் ஜின்னா, பாகிஸ்தான் வேண்டுமென்றார். இந்தியா ரத்தத்தில் மிதக்கும் நாள் நெருங்கிற்று. உண்மையில் இந்தியாவிற்கு சுதந்திரம் தரும் திட்டமெல்லாம் வெள்ளையனுக்கு இல்லை. ஹிட்லர் அடித்த அடியில் பொறி கலங்கி இருந்தது, வேறு வழியே இல்லையா என சர்ச்சில் போன்றவர்கள் கேட்டபொழுது இனியும் இந்தியாவினை துப்பாக்கி முனையில் ஆள்வது சாத்தியமில்லை என லண்டன் பாரளுமன்றம் சொன்ன பின்பே சுதந்திரம் வந்தது ஆனால் தன்னை எதிர்த்தவர்களை எல்லாம் மிக நுட்பமாக பழிவாங்க பாகிஸ்தானை பிரித்து கொடுத்தான் வெள்ளையன், காந்தியின் உண்ணாவிரதம் எல்லாம் ஜின்னாவிடம் எடுபடவில்லை. டம்மி ஆக்கியிருக்க வேண்டிய ஜின்னாவினை காந்தி வெல்ல விட்டது தவறு இதன் பின் காங்கிரசுக்கும், சாவர்கருக்கும் பெரும் அபிப்ராய பேதம் வந்தது. சர்ச்சைகள் வெடித்தன . காந்தி கொலைக்கு பின் சாவர்க்கர் தேசவிரோதி ஆக்கபட்டார். உண்மையில் காந்தியினை கொல்ல சாவர்க்கருக்கு எந்த அவசியமுமில்லை , கொல்லவேண்டும் என்றால் 1947க்கு முன்பே கொன்றிருக்கலாம். அதன் பின் காந்தி இருந்தாலோ இறந்தாலோ ஆகபோவது ஒன்றுமில்லை எனும்பொழுது ஏன் கொல்லபட வேண்டும்? காந்தியினை கொன்றது யார் என்பது இதுவரை மர்மமே, கோட்சே சுட்டேன் என ஒப்புதல் வாக்குமூலம் அளித்தாலும் கொட்சே துப்பாக்கி அல்லாத இன்னொரு துப்பாக்கியின் உடலும் காந்தி உடலில் இருந்தது இதையெல்லாம் மீறித்தான் சாவர்க்கர் மேல் குற்றம் சுமத்தினார்கள், இந்துமகா சபையினை கொலை அமைப்பு என முடக்கினார்கள் மிகவருத்தமான விஷயம் என்னவென்றால், காங்கிரஸ் அவரை இந்நாட்டின் எதிரிபோலவே நடத்திற்று, வெள்ளையன் பறித்த அவரின் வீட்டை கூட அது திரும்ப கொடுக்கவில்லை வெள்ளையன் சாவர்க்கரை ஓட அடித்ததில் நியாயம் இருந்தது, ஆனால் தேசாபிமான காங்கிரஸ் ஏன் செய்ய வேண்டும், அங்குதான் காங்கிரஸ் வெள்ளையனின் அடிவருடி கட்சி என்ற சந்தேகம் எல்லோருக்கும் வந்தது காங்கிரஸ் தன் கோரமுகங்களை அவர்மேல் காட்டிற்று எந்த சலுகையும் அவருக்கு இல்லை, வெள்ளையன் கொடுத்த சில சலுகைகளை கூட கொடுக்கமறுத்தது காங்கிரஸ் நிச்சயம் இதெல்லாம் மகா தவறான விஷயங்கள். துளியும் சுயநலமின்றி நாட்டிற்காய் உழைத்து , சுதந்திர இந்தியாவில் ஒரு அரசு பதவிக்கும் ஆசைபடாமல், கட்சி நடத்தாமல் , அமைதியாய் நாட்டுக்கு ஆலோசனை சொல்லிகொண்டிருந்த அம்மனிதனை அப்படி நோகடித்திருக்க கூடாது ஏன் பகைத்தார்கள்? காஷ்மீர் விஷயத்தில் ஏற்பட போகும் அபாயத்தை அம்மனிதன் முன்பே சொன்னார். பின்னாளில் காங்கிரஸ் அரசு அதில் சிக்கி சீரழிய முன்பே சொன்னேன் அல்லவா? என அவர் சொன்னபொழுது அவர்களுக்கு சகிக்க முடியவில்லை ஆச்சரியமாக சீனாவின் நயவஞ்சகம் பற்றியும் எச்சரித்தார் சாவர்கர், ஆனால் அவர் மறைந்த பின்பே சீனபடை எடுப்பு நடந்தது நாட்டிற்காக போராடிய அம்மனிதன் ஒதுக்கபட்டு மூலையில் எறியபட்டதும், பெரும் தியாகம் ஏதும் செய்யாத ராஜேந்திர பிரசாத் குடியரசு தலைவரானதும் நிச்சயம் இந்நாட்டின் கருப்பு பக்கங்கள் அதோடு விட்டார்களா? ஒரு கட்டத்தில் மனம்வெறுத்து அம்மனிதன் சாக தீர்மானித்தார். உண்ணாவிரதம் தொடங்கினார், என்னால் செயல்பட முடியா நிலையில் சமூகத்திற்கு பாரமாய் இரேன் என சொல்லி அவர் சாகும் வரை உண்ணாவிரதம் தொடங்கினார். அரசு தடுக்கவில்லை அவர் செத்தும் போனார் ஆம் இதே பெப்ரவரி 26, 1961 அவர் உடலுக்கு அரசு மரியாதை இல்லை. ஆளும் கட்சியில் ஒரு அமைச்சரோ, எம்.எல்.ஏ கூட வரவில்லை மாறாக அனாதையாக அந்த சுதந்திர போராளியின் தகனம் நடந்தது அந்தமானில் அவர் தங்கி இருந்த சிறை அருகே அவருக்கு சிலை வெகுநாள் கழித்தே வைக்கபட்டது, அதுவும் பத்தோடு பதினொன்றாக வைக்கபட்டு அவர் இருந்த சிறையும் இன்று இல்லாமல் ஆகிவிட்டது அந்த அளவு அவரின் அடையாளத்தை மறைக்க விரும்பியிருக்கின்றார்கள் ஏன் என தெரியவில்லை நெடுநாளைக்கு பின்பே அந்தமான் விமான நிலையம் மோடியால் சாவர்க்கர் நினைவு விமான நிலையமாயிற்று பாராளுமன்றத்தில் அவர் படமே மிக சர்ச்சைக்கு பின்பே திறக்கபட்டது, அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கபட வேண்டும் என்ற கோரிக்கைக்கு இன்று மோடி அரசே செவிமடுக்கவில்லை இவ்வளவிற்கும் இன்று பாஜக ஆட்சிக்கு வர அன்றே அடிகோலியவர் அவர்தான், ஆனாலும் பாஜக அரசு அஞ்சுகின்றது என்றால் எந்த அளவு சாவர்க்கரை பற்றி இங்கு பெரும் கொடும் பிம்பம் உருவாக்கபட்டிருக்கின்றது என்பது ஒன்றும் புரிந்துகொள்ள சிரமம் அல்ல‌ இந்நாட்டின் விடுதலைக்காக தன் உயிரை, வாழ்வை எல்லாம் பணயம் வைத்து போராடிய ஒருவரை. அந்தமான் சிறையின் கொடூர வடுக்களின் நேரடி சாட்சியாய் வாழ்ந்த ஒருவரை, மதவாதி என ஒதுக்குவதோ ஏதோ ஹிட்லர் போல பார்ப்பதோ சரியானதல்ல‌ இந்து மகாசபை என்ற ஒன்றை தொடங்கினாரே அன்றி எங்கும் எதிலும் அடுத்த மதத்தை அவர் வெறுத்தார் என எங்கும் இல்லை. மதத்தின் காரணமாக இந்நாடு பிளக்கபடுவதைத்தான் எதிர்த்தார் வரலாற்றில் ஒரு காட்சி காணகிடக்கின்றது , 1930களில் இந்து முஸ்லீம் பிரச்சினையினை பெரிதாக்கி மின்டோ மார்லி சீர்திருத்தமெல்லாம் செய்து தேர்தலை நடத்தினான் ஜின்னா அன்று தனி இஸ்லாமிய இயக்கம் கண்டு இஸ்லாமிய அரசியல் செய்தார், ஆனால் சாவர்க்கர் இந்து மகாசபையில் இருந்து இந்து முஸ்லீம் ஒற்றுமை அரசியல் செய்தார் சாதி வேறுபாடின்றி எல்லா மக்களையும் அவர் இந்து மன்றங்களில் ஒன்றிணைத்த காட்சியும் வரலாற்றில் இருக்கின்றது நாட்டுபற்றோடு நோக்கினால் அந்த மனிதன் ஒன்றும் மாபெரும் சர்ச்சைகுரியவன் அல்ல , மாறாக எதற்கோ பயந்து அப்படி சித்தரிக்கபட்டு அந்த சித்தரிப்பு கலைந்து போக கூடாது என பாதுகாத்தும் வரபட்டிருப்பது புரிகின்றது சாவர்க்கர் பெயரை தொட்டால் இந்து எழுச்சி ஏற்படும் என் அஞ்சியிருக்கின்றது காங்கிரஸ், ஏன் அஞ்சியது என்றால் வெள்ளையன் கொடுத்த பயிற்சி அப்படி இந்நாடு எக்காலமும் "மதசார்பற்ற" ஆனால் "சாதி கொண்ட" நாடாக இருந்து குழம்பி தவித்து சண்டையிட்டு கொண்டே இருக்க வேண்டும் அதில் தேசம் வளராமல் நாசமாக வேண்டும் என்பது அவன் எண்ணம் இது இந்துநாடாக , மக்கள் எழுச்சி கொண்ட நாடாக மாறினால் அது பெரும் வளர்ச்சி அடையும் என்பது அவன் பயம் அதைத்தான் காங்கிரசும் செய்தது, சாவர்க்கர் பலிவாங்கபட்டு இல்லா பொய்பிம்பம் சூட்டபட்டது அதனால்தான் காலம் அம்மனிதனின் உண்மை முகத்தினை காட்டி கொண்டே இருக்கின்றது, போலி மதசார்பின்மையும், இந்து விரோதமும், காங்கிரசும் கம்யூனிசமும் இன்னும் பல குழப்பமான கொள்கைகளும் இந்தியாவின் கேடுகள் என அன்றே சொன்ன தலைவன் அவன் இன்று அவன் அனாதையாக பராரியாக செத்த நினைவு நாள், காங்கிரசின் வஞ்சகத்தால் வதைபட்டு செத்ததின் கொடும் நினைவு நாள் இனியாவது இத்தேசம் அந்த சுதந்திர போராட்ட தியாகிக்கு செய்ய வேண்டிய மரியாதையினை செய்யட்டும். அந்த சுதந்திர போராளிக்கு, நவபாரத சிந்தனையாளனுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்.
Rate this:
மனிதன் - riyadh,சவுதி அரேபியா
27-பிப்-202111:51:07 IST Report Abuse
மனிதன்வரலாற்றை திரிக்க உங்களுக்கு சொல்லியா தரவேண்டும்....ஒரு இருபது ஆண்டுகள் நீங்களே தொடர்ந்தால், நாட்டிற்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தது, சாவர்க்கரும்,கோட்ஸேவும்தான் என்று,வரும் தலை முறையினர் படிக்கவேண்டிய நிலை வரலாம்... முகவரியில்லாத ஆட்கள், மற்றவர்களின் முகவரியை அழிப்பதால் தங்களுக்கான முகவரி கிடைத்து விடுமோ???...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X