அரசியல் செய்தி

தமிழ்நாடு

கனிமொழி போட்டியிட விருப்பமனு; காங்., த.மா.கா., தொண்டர்களும் தொகுதி பெறுவதில் ஆர்வம்

Updated : பிப் 26, 2021 | Added : பிப் 26, 2021 | கருத்துகள் (21)
Share
Advertisement
சென்னை: தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் யார் எந்த தொகுதியில் போட்டயிடுவது என்ற விருப்ப மனு வழங்குவதில் அதிமுக, பா.ஜ,, திமுக, காங்., த,மா.கா., உள்ளிட்ட அரசியல் கட்சியினர் சுறு, சுறுப்பாக களம் இறங்கி உள்ளனர்.தி.மு.க., சார்பில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட விருப்பமனுக்களை அறிவாலயத்தில் அக்கட்சியின் வழங்கி வருகின்றனர்.தி.மு.க.,


சென்னை: தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் யார் எந்த தொகுதியில் போட்டயிடுவது என்ற விருப்ப மனு வழங்குவதில் அதிமுக, பா.ஜ,, திமுக, காங்., த,மா.கா., உள்ளிட்ட அரசியல் கட்சியினர் சுறு, சுறுப்பாக களம் இறங்கி உள்ளனர்.latest tamil news
தி.மு.க., சார்பில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட விருப்பமனுக்களை அறிவாலயத்தில் அக்கட்சியின் வழங்கி வருகின்றனர்.

தி.மு.க., மகளிர் அணி செயலர் கனிமொழி, திருப்போரூர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என,கே.ரஞ்சித்குமார் விருப்ப மனு வழங்கியுள்ளார்.


latest tamil news
நான்குநேரி, ராதாபுரம், ஆலங்குளம் தொகுதிகளில் போட்டியிட நாங்குநேரி கிழக்கு ஒன்றிய செயலர் ஆரோக்கிய எட்வின் விருப்பமனு வழங்கினார்.

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர் காவல்காடு சொர்ணக்குமார், வேளச்சேரி தொகுதியில் தி.மு.க., தலைமை தேர்தல் பணி செயலர் வேளச்சேரி மணிமாறன், விருகம் பாக்கம் தொகுதியில் போட்டியிட தலைமை செயற்குழு உறுப்பினர் கே.கே.நகர் க..தனசேகரன் விருப்பமனு வழங்கினர்.

தென்காசி மாவட்ட தி.மு.க., செயலர் சிவபத்மநாபன் தென்காசி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு வழங்கினார்.

சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் திமுக தலைமை குழு உறுப்பினர் தனசேகரன் போட்டியிட விருப்பமனு அறிவாலய நிர்வாகிகளிடம் வழங்கினார்.


சத்தியமூர்த்திபவனில் தொண்டர்கள்சென்னை சத்தியமூர்த்திபவனில் தமிழக காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவோரின் விருப்பமனுக்கள் குவிகின்றன. தமிழக காங்கிரஸ் பொதுச்செயலர் தமிழ்செல்வன் மதுரவாயல் தொகுதிக்கும், தென் சென்னை மேற்கு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் முத்தழகன் விருகம்பாக்கம் தொகுதிக்கும், சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் சிவராஜசேகரன் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதிக்கும் போட்டியிட விருப்பமனு வழங்கினர்.


latest tamil news
வடசென்னை மே. மாவட்டத் தலைவர் டில்லி பாபு பெரம்பூர் தொகுதிக்கும்,தி.நகர் தொகுதிக்கு மாநில செயலர்கள் இல.பாஸ்கரன், காண்டீபன் உட்பட ஏராளமானோர் விருப்பமனுக்களை வழங்கினர்.
தமிழக காங்கிரஸ் மாநில செயலாளர் வசந்தராஜ் ஆரணி, செய்யாறு தொகுதியில் போட்டியிட விருப்ப மனு வழங்கினார்latest tamil news
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள த.மா.கா., தலைமை அலுவலகத்தில் வால்பாறை தொகுதியில் மாநில துணைத் தலைவர் கோவை தங்கம், காங்கேயம் தொகுதியில் மாநில பொதுச்செயலர் விடியல் சேகர், ஈரோடு மேற்கு தொகுதியில் இளைஞரணி மாநில தலைவர் யுவராஜா, தென்காசி தொகுதியில் மாநில செயலர் என்.டி.என்.சார்லஸ் ஆகியோர் விருப்ப மனுக்களை வழங்கினர்.

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் மாநில செயலர் சென்னை நந்து, வேளச்சேரி தொகுதியில், சென்னை கிழக்கு மாவட்டத் தலைவர் கொட்டிவாக்கம் முருகன், கொளத்துார் தொகுதிக்கு மாணவரணி தலைவர் சங்கர், திருச்செந்துார் தொகுதியில் கொள்கைபரப்பு செயலர் கே.டி.எஸ்.ராஜா, பொன்னேரி, எழும்பூர் தொகுதியில் எஸ்,சி.எஸ்.டி,பிரிவு மாநில பொதுச் செயலர் செந்தில்குமார் உட்பட ஏராளமானோர் விருப்பமனுக்களை தலைமை நிலைய நிர்வாகிகள் பிரபாகரன், சந்திரன், அசோகனிடம் வழங்கினர்.

திமுக இளைஞர் அணி செயலர் உதயநிதியை எதிர்த்து த.மா.கா., சார்பில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட மாநில செயலாளர் சென்னை நந்து போட்டியிட தலைமை நிலைய நிர்வாகிகளிடம் வழங்கினார்.

Advertisement
வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
27-பிப்-202111:20:41 IST Report Abuse
Malick Raja கட்சிக்கார்கள் விருப்பம், அது அவர்களின் கட்சி சார்ந்தது இதில் மங்குணிகள் கருத்துக்கு என்ன அவசியமிருக்கிறது ? ஓ... அழையா விருந்தாளிகளாக இருப்பதும் அவர்களின் உயர்பண்புகளன்றோ ஊடகங்கள் பில்ட்டப் கொடுத்தெல்லாம் தமிழகத்தில் ஒன்றும் விளையாது . பெட்ரோல் விலை உயர்வில் வெற்றி மடிந்து மக்கிப்போகும் ..தன்வினை தன்னை சுடும் .. அன்று செய்தது இன்று வினையாகி விட்டது
Rate this:
Cancel
Velumani K. Sundaram - Victoria,செசேல்ஸ்
27-பிப்-202111:19:28 IST Report Abuse
Velumani K. Sundaram கீழவிழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று சொல்வானுங்க இந்த சுயமரியாதை இல்லாத ஜென்மங்கள்.
Rate this:
Cancel
Yaro Oruvan Vs திருடர் முன்னேற்ற கழகம் - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
27-பிப்-202111:17:27 IST Report Abuse
Yaro Oruvan Vs திருடர் முன்னேற்ற கழகம்  தூத்துக்குடி எம்பி பதவியை ராஜினாமா செஞ்சிட்டு நிக்க சொல்லுங்க..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X