பெட்ரோல், டீசல் விலை குறைப்பு குழப்பமான விஷயம்: நிர்மலா சீதாராமன்

Updated : பிப் 26, 2021 | Added : பிப் 26, 2021 | கருத்துகள் (89)
Share
Advertisement
ஆமதாபாத்: பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளுக்கு தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் பேசி தீர்வு காண முடியும் எனவும், இது ஒரு குழப்பமான விஷயம் எனவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், மத்திய, மாநில அரசுகள் வரிகளை குறைத்து,
Dharam Sankat, Nirmala Sitharaman, PetrolPrice, Diesel Rates, Fall, குழப்பமான விஷயம், பெட்ரோல், டீசல், விலை, நிர்மலா சீதாராமன்

ஆமதாபாத்: பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளுக்கு தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் பேசி தீர்வு காண முடியும் எனவும், இது ஒரு குழப்பமான விஷயம் எனவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், மத்திய, மாநில அரசுகள் வரிகளை குறைத்து, விலையை குறைக்க வேண்டும் என்றும் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், ஆமதாபாத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: அதிகரித்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளுக்கு தீர்வு காண ஒரே வழி மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒருங்கிணைந்து பேசித்தான் தீர்வு காண முடியும். எப்போது என்று என்னால் உறுதியாக சொல்ல முடியாது. இது ஒரு குழப்பமான விஷயம்.


latest tamil news


இது வெறும் செஸ் வரி தொடர்பானது மட்டுமல்ல. உங்களிடம் மத்திய அரசின் கலால் வரி உள்ளது. பின்னர் உங்களிடம் மாநிலங்களின் வாட் உள்ளது. மத்திய அரசு சம்பாதிக்கும் அனைத்திலும், 40 சதவீதம் மாநிலங்களுக்கு செல்கிறது. எனவே மாநிலங்களுக்கும் இதில் வருவாய் இருக்கிறது என்ற உண்மையை மறைக்க முடியாது. இது நான் மட்டுமல்ல, நீங்கள் எந்த மாநிலத்தை கேட்டாலும் அங்கே வருவாய் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (89)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
27-பிப்-202123:46:40 IST Report Abuse
தல புராணம் கடந்த 6 வருடங்களில் 20 லட்சம் கோடி பெட்ரோலில் இருந்து .ஒரு லிட்டர் பெட்ரோலுக்கான செஸ் வரி மட்டும் இருபது ரூபாய்க்கும் அதிகம். வழக்கமாக மற்ற வரிகளில் செஸ் வரி என்பது வரிப்பணத்தில் ஒற்றை இழக்க சதவீதமாகவே 3%-4% என இருக்கும். இங்கோ கிட்டத்தட்ட 200%. இதன் காரணம் வியக்கத்தக்கது. மற்ற வரிகள் என்றால் மாநிலத்திற்கு அதில் பங்கு தரவேண்டும், செஸ் வரி என்றால் மாநிலத்திற்கு பங்கு தரப்படாது. இம்புட்டு வசூலிச்சும் கஜானா காலிங்கிறதைத்தான் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.
Rate this:
Cancel
THANGARAJ - CHENNAI,இந்தியா
27-பிப்-202113:39:56 IST Report Abuse
THANGARAJ பெட்ரோல், டீசல் விலை குறைப்பு குழப்பமான விஷயம்:- நிர்மலா சீதாராமன். இதை சரி செய்து மக்களுக்கு நன்மை செய்யத்தானே, மத்திய அமைச்சர் பதவியில் முழு அதிகாரத்துடன் இருக்கிறீர்கள்? அல்லது பிறர் எழுதி கொடுத்ததை வாசிப்பார் இல்லையே நீங்கள்
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
27-பிப்-202110:51:47 IST Report Abuse
Malick Raja இவர்களுக்கெல்லாம் ஒரு வார்த்தைதான் கூற முடியும் மானம்போய் உயிர் காவலா என்பது மட்டும் .. அன்று குருடாயில் 110 டாலர்கள் பெட்ரோல் 67 ரூ விற்றபோது இந்த அம்மா ருத்ரதாண்டவம் ஆடியது .. மோடி ஐயா ரொம்ப கேவலமாக ஆட்சியை சாடினார் .. தமிழிசை அக்கா .. சொல்லவே வேண்டாம் .. இன்று குருடாயில் அதிக பட்சமாக 65 டாலர்கள் இருக்கிறது பெட்ரோல் விலை ரூ 100 க்கு வர இருக்கிறது .. அன்று சொன்னவர்கள் இன்று கேட்கும் ,உணரும் ,பார்க்கும் ,திறனற்றவர்களாக இருப்பதும்.. அதிலும் இன்னும் வாய் சவுடால் குறையாமல் .. பெட்ரோல் விலை குறைவாகவே இருக்கிறது என்று சொல்வதும் மனித மாண்புக்கு அப்பாற்பட்டது .. மக்கள் முடிவில் பார்ப்போம் .. அதற்குள் EVM கைங்கர்ய வேலைகள் இருக்கிறது .. பார்ப்போம் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X