மும்பை: இந்திய பங்குச்சந்தைகளில், இன்றைய வர்த்தகத்தில் சரிவு ஏற்பட்டது.
மும்பை பங்குச்சந்தையில் 1,800 புள்ளிகளுக்கு மேல் சரிவு ஏற்பட்டது.
பிற்பகல் 1 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 1,619 புள்ளிகள் சரிவடைந்து 49,419 ஆக வர்த்தகமானது. நிப்டியும் 502 புள்ளிகள் சரிவை சந்தித்து 14, 595 ஆக வர்த்தகம் ஆனது.
பிற ஆசிய சந்தைகளில் ஏற்பட்ட சரிவே, இந்திய பங்குச்சந்தைகளின் சரிவுக்கும் காரணம் எனக்கூறப்படுகிறது.

மஹாராஷ்டிரா, ம.பி., கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரிப்பால், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்திய பங்குச்சந்தைகளில் கடந்த சில நாட்களாக சரிவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE