அரசியல் செய்தி

தமிழ்நாடு

பல்வேறு சோதனைகளை கடந்து வந்துள்ளோம்: முதல்வர் பழனிசாமி

Updated : பிப் 26, 2021 | Added : பிப் 26, 2021 | கருத்துகள் (42)
Share
Advertisement
சென்னை: பல்வேறு நெருக்கடிகள், சோதனைகளை கடந்து வெற்றிகரமாக ஆட்சியை நிறைவு செய்துள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசியதாவது: மக்களின் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று பயிர்கடன் தள்ளுபடி, விவசாய பம்பு செட்டுகளுக்கு 24 மணிநேரம் மும்முனை மின்சாரம், நகைக்கடன் தள்ளுபடி,
TamilnaduCM,Palanisamy, EPS, PressMeet, தமிழகம், முதல்வர், பழனிசாமி, சோதனைகள்,

சென்னை: பல்வேறு நெருக்கடிகள், சோதனைகளை கடந்து வெற்றிகரமாக ஆட்சியை நிறைவு செய்துள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசியதாவது: மக்களின் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று பயிர்கடன் தள்ளுபடி, விவசாய பம்பு செட்டுகளுக்கு 24 மணிநேரம் மும்முனை மின்சாரம், நகைக்கடன் தள்ளுபடி, மகளிர் சுய உதவிக்குழுக்களின் கடன் தள்ளுபடி போன்றவற்றை அறிவித்துள்ளோம். ஆனால், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், அவர் சொல்லி தான் நாங்கள் செய்வதாக கூறிவருகிறார். அரசு அறிவிக்க உள்ளதை முன்கூட்டியே தெரிந்துக்கொண்டு ஸ்டாலின் அறிவித்துவிடுகிறார். ஆனால், எந்த காலக்கட்டத்தில் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என சிந்தித்து செயல்படுத்துகிறோம்.மக்களின் கோரிக்கையை ஏற்று அரசு செயல்படுகிறது. நான் விவசாய குடும்பத்தில் வளர்ந்தவன். மக்களின் பிரச்னைகளை தெரிந்த காரணத்தினால், எந்த காலத்தில் செயல்படுத்த வேண்டும் என அறிந்து அந்த காலத்தில் செயல்படுத்தி வருகிறோம். அரசின் அறிவிப்பிற்கும், தேர்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.


எடப்பாடி.K.பழனிச்சாமி செய்தியாளர் சந்திப்பு

latest tamil news

வளர்ச்சி திட்டங்களுக்காக தான் கடன் வாங்கி உள்ளோம். திமுக ஆட்சி காலத்தின் போதும் கடன் வாங்கப்பட்டதை ஸ்டாலின் ஒப்பு கொண்டுள்ளார். அனைத்து மாநில அரசுகளும் கடன் வாங்கி தான் நிர்வாகத்தை நடத்தி வருகின்றன. எந்த மாநிலமும் கையில் பணத்தை வைத்துக்கொண்டு திட்டங்களை அறிவிப்பதில்லை. வளர்ச்சி திட்டங்களுக்கு கடன் வாங்க வேண்டிய அவசியம் இருப்பதால் வாங்கப்படுகிறது. 10 ஆண்டுகளில் ஏறிய விலைவாசிக்கு ஏற்ப தற்போது ரூ.5.70 லட்சம் கோடி கடன் இருக்கிறது. தேர்தலுக்கும் எங்களின் அறிவிப்புக்கும் சம்பந்தமில்லை. எந்த திட்டத்தை அறிவித்தாலும், அதை இந்த அரசு நிறைவேற்றும் என்பதை உறுதிபடுத்தியுள்ளோம். கொரோனா காலத்திலும், மக்கள் சகஜமாக வாழ்வதற்கு தேவையான வசதிகளை செய்து உள்ளோம். திமுகவினரின் அராஜகங்களை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.


latest tamil news


விவசாயக்கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ்கள் 75 சதவீத விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுவிட்டன. ரூ.40 ஆயிரம் கோடி டெண்டர் என்றால், உடனடியாக முழுத் தொகையும் செலவிட்டு விடுவதில்லை. டெண்டர் விடுவதில், எந்தவித முறைகேடும் இல்லை.

அதிமுகவை உடைக்க சதி செய்தனர். திமுக.,வின் தூண்டுதலின் பேரில் சில எம்எல்ஏக்கள் வெளியே சென்றனர். அதை முறியடித்து, சட்டசபை இடைத்தேர்தலில் வெற்றி பெற்று சிறப்பாக ஆட்சி செய்து வருகிறோம். பல்வேறு நெருக்கடிகள், சோதனைகளை கடந்து வெற்றிகரமாக 4 ஆண்டுகள் ஆட்சியை நிறைவு செய்துள்ளேன். இயற்கைச் சீற்றங்கள், கொரோனா உள்ளிட்ட சோதனைகளிலும் அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளது. சட்டசபையிலோ, பார்லிமென்டிலோ திமுக.,வினர் குரல் கொடுப்பதில்லை. சட்டசபை தேர்தல் வந்தால் மட்டுமே குரல் கொடுக்கின்றனர்.

எந்த திட்டத்தை அறிவித்தாலும், அதனை வெற்றிகரமாக அதிமுக அரசு நிறைவேற்றி காட்டும். வேலைவாய்ப்பை அதிகரிக்கவே உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தப்பட்டது. அதிமுக அரசு நடத்துவது இ டெண்டர். திமுக அரசு நடத்துவது பெட்டி டெண்டர். இ டெண்டரில் முறைகேடு நடக்க வாய்ப்பு இல்லை. உலக வங்கி விதிமுறைப்படி இ டெண்டர் விடப்படுகிறது. எங்கிருந்து வேண்டுமானாலும் இ டெண்டர் எடுக்கலாம்? இ டெண்டரில் எப்படி முறைகேடு செய்ய முடியும். அரசியலுக்காக இ டெண்டரில் முறைகேடு நடந்துள்ளது என ஸ்டாலின் குற்றம்சாட்டி வருகிறார். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
27-பிப்-202116:04:55 IST Report Abuse
Vaithilingam Ahilathirunayagam அதிமுக தனது தொண்டர்களையும் ஆதரவாளர்களையும் தயார் நிலையில் வைக்க வேண்டும். தேசியக் கட்சிகளும் திமுகவும் அதன் கூட்டுக் கட்சிகளும் சசிகலாவும் தினகரனும் கூட்டுச்சதியில் இணைந்து அதிமுகவின் நிலையைத் தடுமாறச் செய்யலாம். எம்ஜிஆர் அவர்கள் எப்படி வழி நடத்தினார் என்பதை மனதில் கொள்ள வேண்டும். ஜெயலலிதா அவர்கள் எப்படிக் கட்சியைக் காப்பாற்றினார் என்பதையும் கவனத்தில் எடுக்க வேண்டும். தமிழகத்திற்கும் தமிழக மக்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். தற்போதைய தலைமை எப்படி அதிமுகவை சசிகலாவிடம் இருந்து காப்பாற்றியது என்பதையும் மறந்துவிட வேண்டாம்.
Rate this:
Cancel
Srinivas - Chennai,இந்தியா
27-பிப்-202114:44:58 IST Report Abuse
Srinivas கால் கடுக்க நின்றது, தொபீர் என்று கீழே விழுந்து காலை பிடித்தது, பதவி கிடைத்தபிறகு கமிஷன் அடிப்பது, கொள்ளையடிப்பது, பங்குபோடுவது,கோயில் சிலைகளை திருடி விற்பது,அதற்க்கு விசாரணை வந்தால் அவரை விசாரணை செய்யவிடாமல் தடுப்பது,வழக்கு தொடர்வது, தினம்,தினம் புதிய திட்டங்களை அறிவித்து கட்டிங் கேட்டது,கொடநாடு கொலை,கொள்ளைகளை செய்தது, இறந்த அமைச்சரிடம் இருந்த பல ஆயிரம் கோடி கொள்ளைப்பணத்தை பிடுங்க செய்தது, பொள்ளாச்சி கொடூரத்தை மறைத்தது, கொரோனாவை மூன்று நாட்களில் ஒழித்தது.இவை எல்லாமே சோதனைகள்தான்....
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
27-பிப்-202111:36:41 IST Report Abuse
Malick Raja உழைத்து உழைத்து .. உழைப்புக்கு கிடைத்ததுதான் முதல்வர் பதவி .. சசிகலா அவர்களின் இரு கால்களும் சாட்சி பகரட்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X