பொது செய்தி

இந்தியா

தமிழகம், புதுச்சேரியில் ஏப்ரல் 6-ல் தேர்தல், மே 2-ல் ஓட்டு எண்ணிக்கை

Updated : பிப் 26, 2021 | Added : பிப் 26, 2021 | கருத்துகள் (71)
Share
Advertisement
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும் எனவும், மே 2-ல் ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.மே 24ம் தேதியுடன் தமிழக சட்டசபைக்கான பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், டில்லியில் இன்று (பிப்.,26) இந்திய தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா, தமிழகம் உள்ளிட்ட
Tamilnadu, PollDate, AssemblyElection, Puducherry, ElectionDate, தமிழகம், தேர்தல், தேதி, சட்டசபை, புதுச்சேரி

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும் எனவும், மே 2-ல் ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.

மே 24ம் தேதியுடன் தமிழக சட்டசபைக்கான பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், டில்லியில் இன்று (பிப்.,26) இந்திய தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா, தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபைக்கான தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, 234 தொகுதிகளை கொண்ட தமிழகம் மற்றும் 30 தொகுதிகள் கொண்ட புதுச்சேரி சட்டசபைகளுக்கான பொதுத்தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது.


latest tamil newsதமிழகம், புதுச்சேரி சட்டசபை தேர்தல் அட்டவணை:


வேட்புமனு தாக்கல் துவக்கம்: மார்ச் 12
வேட்புமனு தாக்கல் முடிவு: மார்ச் 19
வேட்புமனு பரிசீலனை: மார்ச் 20
வேட்பு மனு திரும்பப் பெற கடைசி நாள்: மார்ச் 22
சட்டசபை தேர்தல் தேதி: ஏப்ரல் 6
ஓட்டு எண்ணிக்கை: மே 2
தமிழகத்தில் மொத்த வாக்குச்சாவடிகள்: 88,936
கன்னியாகுமரி லோக்சபா தொகுதி:

இத்துடன் கன்னியாகுமரி லோக்சபா தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடைத்தேர்தலும் மேற்கண்ட அட்டவணைப்படி ஏப்.6ல் தேர்தல் நடைபெற்று, மே 2ம் தேதி முடிவுகள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்னடத்தை விதிமுறைகள்வாக்குச்சாவடிக்கோ, வாக்கு எண்ணும் இடத்திற்கோ அமைச்சர்கள் செல்ல அனுமதியில்லை:

வேட்பாளர் அல்லது வாக்காளராக இருந்தால் வாக்குச்சாவடிக்கு அமைச்சர்கள் செல்லலாம்.

சாதி, மத, மொழி, இன ரீதியாக வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பரப்புரை செய்யக்கூடாது.

வழிபாட்டுத் தலங்களில் தேர்தல் பரப்புரை செய்யக் கூடாது.

மாற்று கட்சியின் கொள்கை, செயல் திட்டங்கள், ஆட்சியை விமர்சிக்கலாம்.

மாற்று கட்சியின் தனி நபர்களின் சொந்த வாழ்க்கையை விமர்சிக்க கூடாது.

Advertisement
வாசகர் கருத்து (71)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ravi Chandran - Vienna,ஆஸ்திரியா
27-பிப்-202102:19:28 IST Report Abuse
Ravi Chandran மின்னனு வாக்கு பெட்டி மூலம் வாக்கு போட்டு அதை ஒரு மாதம் கழித்து எண்ணுவது தான் டிஜிட்டல் இந்தியா. வாழ்க டிஜிட்டல் இந்தியா, வாழ்க பணநாயகம், மன்னிக்கவும் ஜனநாயகம்
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
26-பிப்-202123:57:59 IST Report Abuse
தல புராணம் ஒரே நாளில் வாக்கெடுப்பு, எண்ணுவதற்கு 27 நாட்கள் எதற்கு. பெருமளவில் வாக்கெடுப்பு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்வதற்கு மட்டுமே இந்த தாமதம். இதை எதிர்த்து தமிழக எதிர்க்கட்சிகள் கடுமையாக போராட வேண்டும். மக்களின் வாக்கை அழிக்க முயலும் பா-சிச கூட்டத்தை தடுக்க வேண்டும்.
Rate this:
Cancel
oce -  ( Posted via: Dinamalar Android App )
26-பிப்-202121:16:36 IST Report Abuse
oce பகுதி பகுதியாக நடத்துவதை விட அனைத்து மாநில தேர்தலை ஏப்ரல் ஆறாம் தேதியில் நடத்துவதில் என்ன சிரமம். வாக்கு எண்ணிக்கைக்கு இருபத்தேழு நாட்கள் அவகாசம் ஏன்.தேர்தல் முடிந்த இரண்டொரு தினங்களில் வாக்கு எண்ணிக்கையை தொடங்குவதில் என்ன கஷ்டம். தேர்தல் ஆணையம் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தான் வேலை செய்கிறது. அதை விரைவாக செய்தாலென்ன.நாள்கடத்தல் வாக்கு பெட்டிகளில் ஆட்டோமேடிக்காக சின்னங்கள் அப்படியே அழியாமல் இருபத்தேழு நாட்கள் வரை இருக்குமா.அதற்குள் எதிர் கட்சிகள் பொறுமை இழந்து வாக்குபெட்டி வைத்திருக்கும் இடங்களை சுற்றி ரவுண்டடிப்பார்கள்.அசந்தால் அவைகளை வைத்திருக்கும் அறைகளுக்குள்ளும் அத்து மீறி நுழைவார்கள்.இதில் திமுக முன்னிலையில் நிற்கும்.
Rate this:
வெற்றி நமதே: தடுப்பூசி போட்டுக் கொள்வோம் - தடுப்பூசியால் எவ்வித ஆபத்தும் இல்லை” ,இஸ்ல் ஆப் மேன்
26-பிப்-202122:38:26 IST Report Abuse
வெற்றி நமதே: தடுப்பூசி போட்டுக் கொள்வோம் ஐந்து மாநில தேர்தல்கள் வருகின்றது 1 - நம்ம ஜீக்கு கொலை மிரட்டல் வரலாம் 2 - ராணுவ வீரர்கள் தாக்கப்படலாம் 3 - பாகிஸ்தான் எல்லையில் ஊடுறுவலாம் 4 - முக்கிய நகரங்களில் இஸ்லாமிய தீவிரவாதிகள் ஊடுறுவலாம் 5 - சர்ஜிகல் அட்டாக் நடந்ததாக கூறப்படலாம் 6 - நம்ம ஜீ, பிரச்சார மேடையில் அழலாம் 7 - பெட்ரோல், டீசல், கேஸ் விலைகள் சில நாட்கள் உயராமல் இருக்கலாம் 8 - காவிகள், ஓடுக்கப்பட்டவர்களிடம் சமத்துவமும், சிறுபான்மையினரிடம் சகோதரத்துவமும் பேசலாம் 9 - நம்ம ஜீயும், ஜண்டா ஜீயும் வாராவாரம் தேர்தல் நடக்கும் மாநிலங்களுக்கு செல்லலாம் 10 - கல்கத்தாவில் காளிக்கும், தமிழகம், புதுவையில் வேலுக்கும் டிமாண்ட் பெருகலாம். எல்லாம் இ வி எம் ல் விளையாடும் விளையாட்டை திசைதிருப்ப அன்றி வேறில்லை பராபரமே.......
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
26-பிப்-202122:58:12 IST Report Abuse
தமிழவேல் இவ்வளவுக்கும், இங்கே மெஷின் ஓட்டு இருந்தும், மத்த நாடு போல நடக்காது.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X