அறிவியல் ஆயிரம்| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : பிப் 26, 2021
Share
அறிவியல் ஆயிரம்பாதிப்பில் துருவக்கரடிஉலகில் பருவநிலை மாற்றம், வெப்பமயமாதல் காரண மாக பனிக்கட்டிகள் உருகி வருகின்றன. ஆர்க்டிக் பகுதியில் பனிக்கட்டி உருகுவதால் அப்பிரதேசங்களில் வாழும் துருவக்கரடிகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என அமெரிக்க விஞ்ஞானிகள் ஆய்வில் தெரிவித்துள்ளனர். ஆண் துருவக்கரடியின் எடை 350 - 700 கிலோ வரை இருக்கும். நீளம் 7 - 9 அடி வரை இருக்கும். பெண்

அறிவியல் ஆயிரம்
பாதிப்பில் துருவக்கரடி

உலகில் பருவநிலை மாற்றம், வெப்பமயமாதல் காரண மாக பனிக்கட்டிகள் உருகி வருகின்றன. ஆர்க்டிக் பகுதியில் பனிக்கட்டி உருகுவதால் அப்பிரதேசங்களில் வாழும் துருவக்கரடிகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என அமெரிக்க விஞ்ஞானிகள் ஆய்வில் தெரிவித்துள்ளனர். ஆண் துருவக்கரடியின் எடை 350 - 700 கிலோ வரை இருக்கும். நீளம் 7 - 9 அடி வரை இருக்கும். பெண் துருவக்கரடியின் எடை இதில் பாதி இருக்கும். நீளம் 5 - 7 அடி வரை இருக்கும். இது குளிருக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளும். வெள்ளை நிறத்தில் காணப்படும். இதன் ஆயுட்காலம் 25 ஆண்டு.

தகவல் சுரங்கம்
பெண்களுக்கு முன்னுரிமை

உலக நாடுகளில் பார்லிமென்டில் அதிக பெண் எம்.பி,.க்கள் உள்ள நாடு ஆப்ரிக்காவின் ருவாண்டா. இந்நாட்டு பார்லிமென்டின் மொத்த எம்.பி.,க்கள் 80 பேர். இதில் 49 பேர் (61.3%) பெண்கள். 2வது இடத்தில் கியூபா உள்ளது. இங்கு மொத்த எம்.பி.,க்கள் 602 பேரில் 322 பேர் (53.2%) பெண்கள். இப்பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் பொலிவியா (53.1%), மெக்சிகோ (48.2%), ஸ்வீடன் (47.3%), நமீபியா (46.2%), கோஸ்டாரிகா (45.6 %), நிக்ராகுவா (44.6 %) உள்ளன. இந்தியாவில் மொத்தமுள்ள 543 எம்.பி.,க்களில் 78 பேர் மட்டுமே பெண்கள். இது 14.36 சதவீதம் தான்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X