கோல்கட்டா: சட்டசபை தேர்தலையொட்டி நேற்று மம்தா ஸ்கூட்டரில் பிரசாரம் செய்தார். இவருக்கு போட்டியாக பா.ஜ, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஸ்கூட்டர் பேரணி நடத்தி பிரசாரம் செய்தார்.
மேற்குவங்க மாநிலத்திற்கு 8 கட்டங்களாக சட்டசபை தேர்தலை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது.நேற்று மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மின்சார ஸ்கூட்டரின் பின் இருக்கையில் அமர்ந்தபடி, தலைமைச் செயலகத்திற்கு வந்தார்.
![]()
|
அமைச்சர் பிர்ஹட் ஹகீம் வாகனத்தை ஓட்டி வந்தார். பெட்ரோல் விலை உயர்வை கண்டிக்கும் அட்டையை கழுத்தில் அணிந்து வந்த மம்தா, சாலையின் இருபுறமும் மக்களை பார்த்து கையசைத்து சென்றார்.
இந்நிலையில் மம்தாவிற்கு போட்டியாக இன்று பா.ஜ.,மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, பா.ஜ. சார்பில் ஸ்கூட்டர் ஓட்டி தேர்தல் பிரசார பேரணியை துவக்கி வைத்தார். மேற்குவங்க மாநிலம் பவுரிபூர்- சோனாபூர் இடையேயான முக்கிய சாலை வழியாக தானே ஸ்கூட்டர் ஓட்டிச்சென்று பிரசாரம் செய்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE