நீரவ் மோடியை அடைக்க மும்பையில் சிறை தயார்

Added : பிப் 26, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
மும்பை:பிரிட்டனில் இருந்து, நாடு கடத்தப்பட உள்ள நீரவ் மோடியை அடைத்து வைக்க, மும்பையில் உள்ள மத்திய சிறைச் சாலையில், அவருக்காக சிறப்பு அறை, தயார் செய்யப்பட்டு உள்ளது.பஞ்சாப் நேஷனல் வங்கியில், 14 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்த, மஹாராஷ்டிராவைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரி நீரவ் மோடி, இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு தப்பி சென்றார். கைதுஇதையடுத்து, அவர் மீது, சி.பி.ஐ.,
 நீரவ் மோடியை அடைக்க மும்பையில் சிறை தயார்

மும்பை:பிரிட்டனில் இருந்து, நாடு கடத்தப்பட உள்ள நீரவ் மோடியை அடைத்து வைக்க, மும்பையில் உள்ள மத்திய சிறைச் சாலையில், அவருக்காக சிறப்பு அறை, தயார் செய்யப்பட்டு உள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில், 14 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்த, மஹாராஷ்டிராவைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரி நீரவ் மோடி, இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு தப்பி சென்றார். கைதுஇதையடுத்து, அவர் மீது, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை வழக்கு தொடர்ந்தன.அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தி வருவதற்கான முயற்சி களில், மத்திய அரசு இறங்கியது.

இதையடுத்து, 2019ம் ஆண்டு, லண்டனில் கைது செய்யப்பட்ட நீரவ் மோடி, அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டார். அவரை நாடு கடத்தும் வழக்கு, லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.இந்நிலையில், நீரவ் மோடியை நாடு கடத்த, நீதிமன்றம், நேற்று முன்தினம் அனுமதி அளித்தது. இந்த தீர்ப்பின் அடிப்படையில், நீரவ் மோடியை நாடு கடத்துவதற்கான உத்தரவை, பிரிட்டன் அரசு பிறப்பிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, நாடு கடத்தப்படும் நீரவ் மோடியை அடைத்து வைக்க, மும்பையின் ஆர்தர் சாலை மத்திய சிறைச் சாலையில், அவருக்காக சிறப்பு அறை, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முடிவுஅதிக பாதுகாப்புடன் இருக்கும், 12ம் எண் சிறை அறையில் அவரை அடைத்து வைக்க முடிவு செய்யப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, சிறை நிர்வாகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், 'நீரவ் மோடியை அடைத்து வைக்க தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்து முடிக்கப்பட்டு விட்டன. அவருக்காக சிறை தயாராக உள்ளது' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெற்றிக்கொடி கட்டு - நாத்திக, தேசவிரோத கட்சிகளை ஆதரிக்காதீர்,இந்தியா
27-பிப்-202113:52:47 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டு நரேந்திர தாமோதர் தாஸ் மோடி சொல்லியிருப்பார் நீரவ் மோடியிடம் "பல முக்கிய மாநிலங்களில் தேர்தல் வருது தேர்தல் வரைக்கும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க அப்புறம் ஏதாச்சும் பார்த்து விடுவிக்க ஏற்பாடு பண்ணிடுறேன்"
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X