பொது செய்தி

இந்தியா

சீன வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் 'ஹாட்லைன்' பேச்சு

Added : பிப் 26, 2021
Share
Advertisement
புதுடில்லி:ஜம்மு காஷ்மீரின் வடக்கே, கிழக்கு லடாக்கில் உள்ள உண்மையான எல்லை கட்டுப்பாட்டு பகுதி யின் தற்போதைய நிலை குறித்தும், இந்தியா - சீனா இடையிலான ஒட்டு மொத்த உறவு குறித்தும், சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி உடன், நம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், தொலைபேசி வாயிலாக, 75 நிமிடங்கள் பேசினார். பிரச்னை இந்த பேச்சு குறித்து, மத்திய வெளியுறவுத் துறை
 சீன வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் 'ஹாட்லைன்' பேச்சு

புதுடில்லி:ஜம்மு காஷ்மீரின் வடக்கே, கிழக்கு லடாக்கில் உள்ள உண்மையான எல்லை கட்டுப்பாட்டு பகுதி யின் தற்போதைய நிலை குறித்தும், இந்தியா - சீனா இடையிலான ஒட்டு மொத்த உறவு குறித்தும், சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி உடன், நம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், தொலைபேசி வாயிலாக, 75 நிமிடங்கள் பேசினார்.


பிரச்னை



இந்த பேச்சு குறித்து, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:'பாங்காங் சோ ஏரி பகுதியில், இரு தரப்பு படைகளும் முழுமையாக வாபஸ் பெறப்பட்ட பின், கிழக்கு லடாக்கின் பிற பகுதிகளில், இந்தியா - சீனா இடையே நிலவி வரும் இதர பிரச்னைகளுக்கு தீர்வு காண, இரு நாடுகளும் முன் வர வேண்டும்' என அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தினார்.

கடந்த ஆண்டு, கிழக்கு லடாக் எல்லையில் நிகழ்ந்த சம்பவங்களால், இந்தியா - சீனா இடையிலான நல்லுறவு கடுமையாக பாதிக்கபட்டதாக, சீன அமைச்சர் தெரிவித்தார்.எல்லைப் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு, மேலும் பல காலம் ஆகலாம். அதே நேரம், எல்லையில் நிகழ்ந்த வன்முறை காரணமாக, அமைதியும், நல்லிணக்கமும் சிதைந்து போனதாக, இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.


விவாதம்

கிழக்கு லடாக் எல்லையில் தற்போதைய நிலை குறித்தும், பிற பகுதிகளில் நிலவும் பிரச்னைகள் குறித்தும், விரிவாக விவாதிக்கப்பட்டன.'ஹாட்லைன்' வாயிலாக, தொடர்ச்சியாக தொடர்பில் இருக்க, இரு நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்களும் ஒப்புக் கொண்டனர். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X