பொது செய்தி

இந்தியா

தடுப்பூசி விவகாரத்தில் சீனாவின் கனவு...தகர்ந்தது!ஆதிக்கத்தை தவிடு பொடியாக்கியது இந்தியா

Added : பிப் 26, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
புதுடில்லி,: வளரும் நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கி, அந்த நாடுகளில், தங்கள் அரசியல் அதிகாரத்தை நிலை நிறுத்த விரும்பிய சீனாவின் கனவை, இந்தியா தவிடு பொடியாக தகர்த்தெறிந்துள்ளது. தடுப்பூசி தயாரிப்பில் மத்திய அரசு காட்டிய வேகமும், துல்லியமும், இதை சாத்தியப்படுத்தியதாக அதிகாரிகள் கருதுகின்றனர்.கொரோனா தொற்று பரவலில் இருந்து, சீனா கடந்த ஆண்டே படிப்படியாக விடுபட்டது.

தடுப்பூசி விவகாரத்தில் சீனாவின் கனவு...தகர்ந்தது!ஆதிக்கத்தை தவிடு பொடியாக்கியது இந்தியா

புதுடில்லி,: வளரும் நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கி, அந்த நாடுகளில், தங்கள் அரசியல் அதிகாரத்தை நிலை நிறுத்த விரும்பிய சீனாவின் கனவை, இந்தியா தவிடு பொடியாக தகர்த்தெறிந்துள்ளது. தடுப்பூசி தயாரிப்பில் மத்திய அரசு காட்டிய வேகமும், துல்லியமும், இதை சாத்தியப்படுத்தியதாக அதிகாரிகள் கருதுகின்றனர்.

கொரோனா தொற்று பரவலில் இருந்து, சீனா கடந்த ஆண்டே படிப்படியாக விடுபட்டது. உள்நாட்டில் தொற்றுப் பரவலை விரைவாகவே கட்டுக்குள் கொண்டு வந்தது. அந்த நேரத்தில், நம் நாட்டில், நாள் ஒன்றுக்கு, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர், கொரோனா தொற்றுக்கு ஆளாகி வந்தனர். ஊரடங்கு அறிவிப்பால், கடந்த, 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, நம் நாட்டின் பொருளாதாரம், சரிவைச் சந்தித்தது.


நிலைமை மோசம்



'கொரோனா வைரஸ் பரவல் துவங்கியது முதலே, இந்தியா - சீனா இடையிலான உறவில் பதற்றம் ஏற்படத் துவங்கியது. அந்த நேரத்தில், கிழக்கு லடாக் எல்லையில் மோதல் போக்கு அதிகரிக்கத் துவங்கியதை அடுத்து, நிலைமை மோசமானது.நுாற்றுக்கணக்கான சீன நிறுவனங்களின், 'மொபைல் போன்' செயலிகளுக்கு, மத்திய அரசு அதிரடியாக தடை விதித்தது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் உடனான உறவை, மத்திய அரசு வலுவாக்கத் துவங்கியது.இந்த நேரத்தில், கொரோனா தடுப்பூசியை சீனா தயாரித்தது. அது குறித்த விபரங்களை மற்ற நாடுகளுடன் அவர்கள் பகிர்ந்து கொள்ளவில்லை.

பல்வேறு வளரும் நாடுகள், கொரோனா தொற்றில் இருந்து விடுபட, சீனாவிடம் இருந்து தடுப்பூசியை எதிர்பார்த்து காத்திருந்தன. விலை குறைவாகவோ அல்லது இலவசமாகவோ தடுப்பூசியை பெற, அந்நாடுகள் விரும்பின. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, ஆசிய நாடுகளில் ஆதிக்கம் செலுத்த சீனா திட்டமிட்டது. இந்த நேரத்தில், சீனாவில் தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் துவங்கியது. இதையடுத்து, அந்நாட்டின், 140 கோடி மக்கள் தொகைக்கு தடுப்பூசி வழங்க வேண்டிய கட்டாயத்துக்கு, சீனா தள்ளப்பட்டது.

இந்த இடைவெளியில், 'கோவிஷீல்டு' மற்றும் 'கோவாக்சின்' தடுப்பூசியை பயன்பாட்டுக்கு கொண்டு வந்த மத்திய அரசு, அதை அண்டை நாடுகளான, நேபாளம், வங்கதேசம், இலங்கை ஆகிய நாடுகளுக்கு வழங்கியது. இதன் காரணமாகவே, தடுப்பூசி போடும் பணிகள், இலங்கையில் விரைவாக துவங்கப்பட்டதாக, அந்நாட்டு தலைவர்கள் நன்றி தெரிவித்தனர்.


முறியடிப்பு



உலகம் முழுதும் உள்ள பல்வேறு நாடுகளுக்கு, இதுவரை, 68 லட்சம், 'டோஸ்'கள் இலவச தடுப்பூசிகளை, மத்திய அரசு வழங்கியுள்ளது. சீனா தரப்பில், 39 லட்சம் டோஸ்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.பல்வேறு வளரும் நாடுகளுக்கும், கொரோனா தடுப்பூசி வழங்கி, அங்கு தங்கள் அரசியல் அதிகாரத்தை நிலைநிறுத்த நினைத்த சீனாவின் கனவை, இந்தியா தவிடு பொடியாக உடைத்துள்ளது.
கொரோனா தடுப்பூசி தயாரிப்பில் நாம் காட்டிய வேகமும், துல்லியமுமே, சீனாவின் கனவை முறியடித்ததாக, அதிகாரிகள் கருதுகின்றனர்.

2 கோடி 'டோஸ்' தடுப்பூசி

பிரேசில் ஒப்பந்தம்தென் அமெரிக்க நாடான, பிரேசில், உலகளவில், கொரோனா பாதிப்பில், இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்நாட்டில், கொரோனாவுக்கு, 2.51 லட்சம் பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில், பிரேசில் சுகாதார அமைச்சரகம், இந்தியாவில், ஐதராபாதைச் சேர்ந்த, 'பாரத் பயோடெக்' நிறுவனத்தின், 'கோவாக்சின்' என்ற கொரோனா தடுப்பூசி மருந்தை வாங்கி, மக்களுக்கு செலுத்த முடிவு செய்துள்ளது. இதற்காக, பாரத் பயோடெக் நிறுவனத்துடன், பிரேசில் ஒப்பந்தம் செய்துள்ளது. பிரேசில், முதற்கட்டமாக, 2 கோடி ரூபாய் மதிப்பிலான, இரண்டு கோடி டோஸ் கோவாக்சின் தடுப்பூசி மருந்தை கொள்முதல் செய்ய உள்ளது.

தடுப்பூசி பணி நிறுத்திவைப்பு

நம் நாட்டில், மார்ச், 1 முதல், இரண்டாம் கட்ட தடுப்பூசி மருந்து திட்டம் துவங்க உள்ளது. இதில், 60 வயதை கடந்தவர்கள் மற்றும் பல நோய்களுடன் உள்ள, 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு, கொரோனா தடுப்பூசி மருந்து செலுத்தப்பட உள்ளது. இதையொட்டி, தற்போது சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி மருந்து செலுத்தும் பணிகள், இன்றும், நாளையும் நிறுத்தி வைக்கப்படுவதாக, மத்திய சுகாதார அமைச்சகம்
தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
28-பிப்-202118:08:47 IST Report Abuse
J.V. Iyer இதெற்கெல்லாம் கரணம் நம்முடைய ராஜதந்திரி மோடிஜி. அவர்களால் இந்தியா பிழைத்தது. மேலும் உலகில் இந்தியாவின் பெருமை, புகழ் தினமும் உயருகிறது. மோடிஜி நன்றி..நன்றி..நன்றி. ஒருவர் உழைப்பிற்கே இப்படி என்றால் எல்லா இந்தியர்களும் தேச பற்றுடன் உழைத்தால்????
Rate this:
Cancel
suresh kumar - Salmiyah,குவைத்
28-பிப்-202116:03:46 IST Report Abuse
suresh kumar // 2 கோடி ரூபாய் மதிப்பிலான, இரண்டு கோடி டோஸ் கோவாக்சின் தடுப்பூசி// அதாவது ஒரு டோஸ் தடுப்பூசி ஒரு ரூபாய் அதை தனியார் ஆஸ்பத்திரியில் ரூ 250/- செலுத்தி போட்டுக் கொள்ளலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X