நீரவ் மோடியை அடைக்க மும்பையில் சிறை தயார்

Updated : பிப் 28, 2021 | Added : பிப் 26, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
மும்பை பிரிட்டனில் இருந்து, நாடு கடத்தப்பட உள்ள நீரவ் மோடியை அடைத்து வைக்க, மும்பையில் உள்ள மத்திய சிறைச் சாலையில், அவருக்காக சிறப்பு அறை, தயார் செய்யப்பட்டு உள்ளது.பஞ்சாப் நேஷனல் வங்கியில், 14 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்த, மஹாராஷ்டிராவைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரி நீரவ் மோடி, இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு தப்பிச் சென்றார். கைதுஇதையடுத்து, அவர் மீது,
PNB case, Nirav Modi, Mumbai Arthur Road Jail, நீரவ் மோடி, மும்பை, சிறை தயார்

மும்பை பிரிட்டனில் இருந்து, நாடு கடத்தப்பட உள்ள நீரவ் மோடியை அடைத்து வைக்க, மும்பையில் உள்ள மத்திய சிறைச் சாலையில், அவருக்காக சிறப்பு அறை, தயார் செய்யப்பட்டு உள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில், 14 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்த, மஹாராஷ்டிராவைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரி நீரவ் மோடி, இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு தப்பிச் சென்றார்.


கைது


இதையடுத்து, அவர் மீது, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை வழக்கு தொடர்ந்தன.அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தி வருவதற்கான முயற்சி களில், மத்திய அரசு இறங்கியது. இதையடுத்து, 2019ம் ஆண்டு, லண்டனில் கைது செய்யப்பட்ட நீரவ் மோடி, அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டார். அவரை நாடு கடத்தும் வழக்கு, லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்நிலையில், நீரவ் மோடியை நாடு கடத்த, நீதிமன்றம், நேற்று முன்தினம் அனுமதி அளித்தது. இந்த தீர்ப்பின் அடிப்படையில், நீரவ் மோடியை நாடு கடத்துவதற்கான உத்தரவை, பிரிட்டன் அரசு பிறப்பிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, நாடு கடத்தப்படும் நீரவ் மோடியை அடைத்து வைக்க, மும்பையின் ஆர்தர் சாலை மத்திய சிறைச் சாலையில், அவருக்காக சிறப்பு அறை, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


முடிவு


அதிக பாதுகாப்புடன் இருக்கும், 12ம் எண் சிறை அறையில் அவரை அடைத்து வைக்க முடிவு செய்யப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, சிறை நிர்வாகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், 'நீரவ் மோடியை அடைத்து வைக்க தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்து முடிக்கப்பட்டு விட்டன. அவருக்காக சிறை தயாராக உள்ளது'என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.P SARATHI - chennai,இந்தியா
27-பிப்-202118:03:01 IST Report Abuse
K.P  SARATHI கடன் வழங்கிய பேங்க் இதில் ஒரு குற்றாவாளிதான் . இனிமேல் பத்து கோடிக்கு மேலே கடன் பெற்றால் அதை திருப்பி செலுத்தும் வரை அந்த வங்கி அதில் ஒரு பங்குதாரர் இருக்க வேண்டும்
Rate this:
Cancel
kmathivanan - Trichy ,இந்தியா
27-பிப்-202112:56:38 IST Report Abuse
kmathivanan மோடிஜி சொன்னதை செய்கிறார் , அடுத்தது kingfisher பிலே பாய் மல்லையா தான் , இவங்களுக்கு லோன் கொடுத்த கொங்கிரஸ் அண்ட் பேங்க் பயல்களையும் உள்ளே போட்டு பெண்டு எடுக்காணும்
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
27-பிப்-202110:08:00 IST Report Abuse
blocked user செட்டியாருக்கும் சேர்த்து அறை தயார் செய்யவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X