மிச்சமிருக்கும் பிரச்னைகளையும் தீர்க்க வேண்டும்: சீன அமைச்சரிடம் ஜெய்சங்கர் வலியுறுத்தல்

Updated : பிப் 26, 2021 | Added : பிப் 26, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
புது டில்லி: சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி உடன் 75 நிமிடம் தொலைபேசியில் உரையாடிய மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், எல்லைப் பகுதியில் மீதமுள்ள பிரச்சினைகளை தீர்க்க இரு தரப்பினரும் விரைவாக செயல்பட வேண்டும் என்றார்.இந்திய - சீன எல்லைப் பகுதியான கிழக்கு லடாக்கின் பாங்காங் ஏரி பகுதியிலிருந்து இரு நாட்டு படைகளும் கடந்த வாரம் வாபஸ் பெற்றன. அதனைத் தொடர்ந்து

புது டில்லி: சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி உடன் 75 நிமிடம் தொலைபேசியில் உரையாடிய மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், எல்லைப் பகுதியில் மீதமுள்ள பிரச்சினைகளை தீர்க்க இரு தரப்பினரும் விரைவாக செயல்பட வேண்டும் என்றார்.latest tamil news
இந்திய - சீன எல்லைப் பகுதியான கிழக்கு லடாக்கின் பாங்காங் ஏரி பகுதியிலிருந்து இரு நாட்டு படைகளும் கடந்த வாரம் வாபஸ் பெற்றன. அதனைத் தொடர்ந்து பிப்., 20 அன்று இரு நாட்டு ராணுவ படைத்தலைவர்கள் இடையே 16 மணி நேர பேச்சுவார்த்தை நடந்தது. இதர சர்ச்சைக்குரிய பகுதிகளான டெப்சாங், ஹாட் ஸ்பிரிங்ஸ் மற்றும் கோக்ரா ஆகியவற்றிலிருந்தும் படைகளை வாபஸ் பெற விவாதிக்கப்பட்டன. ஆனால் அது பற்றிய அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.


75 நிமிட உரையாடல்இந்நிலையில் வியாழனன்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி உடன் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் 75 நிமிடங்கள் உரையாடினார். அது தொடர்பான அறிக்கை இந்தியா தரப்பில் இன்று வெளியிடப்பட்டது. அதில், எல்லையில் ஏற்கனவே இருந்த நிலையை சீனா தன்னிச்சையாக மாற்ற முயன்றதன் விளைவாகவே இரு தரப்பு உறவுகளும் பாதிக்கப்பட்டது என ஜெய்சங்கர் குறிப்பிட்டதாக கூறப்பட்டுள்ளது. மற்ற சர்ச்சைக்குரிய பகுதிகளிலிருந்தும் படைகள் வெளியேற வேண்டியதன் அவசியத்தை ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.


latest tamil news
விரைவாக செயல்பட வேண்டும்மேலும், “தற்போதுள்ள நிலைமை நீடிப்பது இரு தரப்பினருக்கும் நன்மை பயக்காது. எனவே, எல்லையில் மீதமுள்ள பிரச்சினைகளை தீர்க்க இரு தரப்பினரும் விரைவாக செயல்பட வேண்டும். அனைத்து சர்ச்சைக்குரிய பகுதிகளிலிருந்தும் படைகளை விலக்குவது அவசியம். அது மட்டுமே அமைதியை மீட்டெடுக்கும். இருதரப்பு உறவினையும் முன்னேற்றும்.” என பேசியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
27-பிப்-202118:28:46 IST Report Abuse
மலரின் மகள் எங்கள் மனமுவந்த பாராட்டுகள். நீங்களும் ஸ்ரீ அஜித் தோவல் அவர்களும் நாட்டிற்கு கிடைத்த பொக்கிஷம் எனலாம். மிகைத்திறமையாக செய்திருக்கிறீர்கள். ஒரு தோட்டாக்களும் பயன்படுத்தாமல் வெற்றியை தேடித்தந்திருக்கிறீர்கள். சீனர்கள் பின்வாங்கி செய்னருக்கிறார்கள். அவர்களால் வெற்றிபெறமுடியாது என்பதை மூன்றில் ஒன்று பங்கிற்கு மேலான அவடலின் ஆயுத பலத்தை குவித்து வைத்து பயமுறுத்த பார்த்து பயந்து பின்வாங்கியிருக்கிறார்கள். அதை செய்தது மிகச்சிறப்பான நமது ஆட்சியாளர்கள். தாராளமாக சொல்லலாம்.56 இன்ச் மார்பென்று. நெஞ்சுரம் மிக்கவர்கள் நமது அரசாட்சி செய்வோர். மனமார்ந்த பாராட்டுக்கள். பாகிஸ்தானியர்கள் இப்போது நம்மிடம் இறைஞ்சுகிறார்கள். அவர்கள் சீனாவை நம்பி பயனில்லை என்பதை உணர்கிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக பாகிஸ்தானிய ராணுவத்தை பயன்படுத்தினால் உடனை நிர்மூலமாக்க படுவார்கள் என்பதை மிகவும் தெளிவாக்கி இருக்கிறீர்கள். பல தேசங்களுடன் சென்று பிரதமர் முதலில் நட்பை மேம்படுத்தினார். நமது தேசத்தின் வலிமையை பறை சாற்றினார். உதவிகள் பலவற்றை மனமுவந்து உடனடியாக செய்தார். செய்கிறோம் இப்போதும். கொரநா தடுப்பூசிகளை அல்லி வழங்குவது நாம். அவை ஸ்ரீஅப்பகை செயல்படுகின்றன. மேற்கத்திய நாடுகள் மேற்காசிய நாடுகள் என்று பலவும் நம்மை சார்ந்தே இருக்கின்றன. தென்கிழக்கு ஆசிய நாடுகள் நம்மையே நம்பி இருக்கின்றன. உதவி கரம் நீட்டுவது ஆகட்டும், எதிரிகளை ராணுவத்தால் சந்திப்பதில் ஆகட்டும் எதிலுமே சிறந்தவர்கள் நாம் என்பதை நிரூபித்திருக்கிறோம். பாகிஸ்தானியர்கள் தங்களின் தீவிரவாத பயங்கரவாதா தாக்குதல்களை மறைமுக யுத்தங்களை இந்தியாவிற்கு எதிராக நினைத்து கூட பார்க்கமுடியாதவகையில் நாம் அவர்களை பல கோணங்களில் முடக்கி இருக்கிறோம். எப்படியாவது வெளிநாட்டு கடன்களை பெறுவதற்கு க்ரெய் பட்டியலிலிருந்து வெளியேற முயல்கிறார்கள் அவர்கள். சீன பக்கம் போனார்கள், துருக்கி பக்கம் போனார்கள் எங்கும் அவர்களால் சிறப்பாக இருக்க முடியாது. இருவருமே பாகிஸ்தானின் நிலத்திலும் வளத்திலும் மட்டுமே அக்கறை கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்பதை இப்போது மெயில்ல உணர பார்க்கிறார்கள். இஸ்லாமிய தேச கூட்டமைப்பு காஸ்மீர் விவகாரத்தை அது ஒன்று பட்ட இந்தியாவின் ஒரு உள்நாட்டு சச்சரவு என்று சொல்ல வைத்தாகி விட்டது. மிக பெரிய ராஜ தந்திரம். சவுதியுடன் இணைந்து மேலை கடல் முழுதும் கூட்டு போர் பயிற்சி செய்கிறது நமது கடல் படை. ஆசிய பசிபிக் கடல் பகுதி என்பதை இன்று உலகமே இந்தோ பசிபிக் கடல் பிறந்திறம் என்று சொல்கிறது. சீனர்கள் முழி பிதுங்குகிறார்கள் இப்போது. ராணுவத்தின் ஐந்தாம் தலைமுறை எலாம் தலைமுறை ஆயுத்தங்கள் எங்களிடமே உள்ளன என்று உளறிய அவர்கள் நமது ராணுவத்தை எத்ரிகவே முடியாது என்று உணர்ந்திருக்கிறார்கள். உளவியலாக ராணுவத்தை பலமிழக்க செய்யவேண்டும் என்று நினைத்து சீன ராணுவ வீரர்கள் அசைவ விருந்து உணவும் சொகுசாகவும் எல்லையில் வாழ்வதற்கு டென்ட் அமைத்து தந்திருக்கிறோம் இந்திய ராணுவத்திற்கு அப்படி இல்லை என்றும் ஹிந்தியிலும் பஞ்சாபியிலும் உங்கள் குடும்பம் குழந்தைகள் வீட்டில் தவித்திருக்கிறார்கள், யுத்தம் செய்வதை விட்டு குடும்பத்தை பார்க்க செல்லுங்கள் என்று செய்திகளையும் பாடல்களையும் எல்லையில் ஒலி பரப்பிரனார்கள். எல்லையில் அவ்வப்போது ட்ராகன் கத்துவதை போல எதோ ஒரு வினோத சத்தத்தை அதிக இரைச்சலில் எழுப்பி ராணுவத்தை அச்சமூட்ட நினைத்தார்கள். பழைமையான முறைகளை கையாண்டு பார்த்தார்கள். எப்படி செய்தாலும் இந்திய ராணுவம் அஞ்சாது வெற்றி பெறுவதை குறிக்கோள் என்று உள்ளவர்கள் அவர்கள் என்பதை உணர்ந்தார்கள். குளிர் பிரதேச எல்லையில் மலை முகத்தில் போராட முடியாமல் அதற்கு பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் வந்து உதவ வேண்டும் என்று முயன்று பார்த்தார்கள். பாகிஸ்தான் ராணுவம் அத்தகைய செயலைசெய்வதற்கு நடுநடுங்கியது. அவ்வாறு அவர்கள் ராணுவ வீரர்கள் யுத்த எல்லைக்கு வந்தால் பாகிஸ்தானிய பகுதிகள் பல்வேறும் கபளீகரம் செய்யப்பட்டு விடும் என்பதையும் பாகிஸ்தான் ராணுவத்தை நிர்மூலம் செய்து விடும் இந்தியா என்றும் உணர்ந்தார்கள். அமைதி காத்தார்கள். சீனாவை தவிர எந்த தேசமுமும் எந்த விதத்திலும் பாகிஸ்தானுக்கு உதவிகள் செய்யவே செய்யாது என்பதை சையது காட்டியது வெளியுறவு தரூரின் சிறப்பு. உங்களின் பங்கு மிக அதிகம். ஆப்கானின் புனரமைப்பு பாதுகாப்பு இரண்டும் இந்தியாவின் வசமிருக்கிறது. பாகிஸ்தானிலங்கை பகுதிகளில் நமது ரா அமைப்பின் கைவண்ணம் மிகவும் அதிகமாக செயல் படுகிறது என்று அஞ்சுகிறார்கள் அவர்கள். இரண்டரை யுத்தம் என்று அழைப்பதில் அந்த அரை யுத்தம் என்பதில் மிகவும் பொருள் பொருந்திருக்கிறது. ஆராய்ச்சியாளர்கள் பலவாறாக ஆய்ந்து சொல்கிறார்கள். இந்தியராக நமக்கு பிரமிப்பூட்டுகிறது அவைகள். இராது எதிரிகள் சீன பாகிஸ்தான் எல்லையில் நமது ராணுவத்தின் யுத்த நேரடி இலக்கில். மூன்றாவதாக உள்நாட்டில் ஏற்படும் குழப்பம் குண்டு வெடிப்பு தாக்குதல்கள் என்ற அரை யுத்தம். இந்த அரை யுத்தத்திற்கு பல்வேறு ஊகங்களை வெளி தருகிறது பல்வேறு ஆராய்ச்சிகள். எதை மனதில் வைத்து இந்திய அதிகாரிகள் அரை யுத்தம் என்று சொன்னார்கள். இந்திய மானிற்குள்ளாக சீனர்கள் தூண்டுதலில் வட கிழக்கு பிராந்தியத்தில் மியான்மர் எல்லைப்பகுதியில் நடக்கும் யுத்தத்தை மியான்மர் ராணுவத்துடன் இணைந்து இந்திய ராணுவம் எதிர்கொள்வதையா அல்லது காஸ்மீர் முதல் இந்திய எல்லைக்குள் பாகிஸ்தானிய தீவிரவாதிகள் நுழைந்து தாக்குவதையா என்று ஆய்வுகள். இது ஒரு புறமிருக்க வேறு விதமாக இந்திய பாகிஸ்தானிய மற்றும் ஒரு குட்டி தீவு தேசத்தை குலை நடுங்க செய்யும் ஆய்வுகளையும் தருகிறார்கள். அது ராவின் கைவண்ணம் என்று சொல்கிறார்கள். இந்திய எல்லைக்குள் பயங்கர வாத தாக்குதல்களை நிதி உதவிகளை அந்நிய சக்திகள் செய்தால் அதை எதிர்த்து எதிரிகளுக்கு தக்க பாடமாக அவர்கள் வழியிலேயே பேசுவதற்கு இந்தியாவிற்கு தெரியும் என்றும் நெஞ்சு நிமிர்த்தி சொன்னது அழுத்தம் திருத்தமாக இந்தியா. இந்த செய்தியை மேற்கோள் காட்டி அதன் பிறகு அந்நிய தேசத்தில் அங்குள்ளவர்கலே தாக்குதல்களை தாக்கியதை அதன் பின்புலத்தில் இந்தியாவை குற்றம் சாட்டிய இம்ரான் போன்றோரின் ஐயத்தை பயத்தை வெளிக்காட்டி ஆய்ந்து சொல்வது பல ஆராய்ச்சி செய்திகள். ஒரு சிறு சம்பவங்களால் பாகிஸ்தான் மற்றும் குட்டி தீவு தேசம் அலறி சுருட்டி கொண்டது என்பதை விளக்குகிறார்கள் அவர்கள். யுத்தம் என்று வந்தால் அது இந்திய எல்லைக்குள் அல்ல என்று நமது அதிகாரிகளும் அரசாள்வோரும் தொடர்ந்து சொன்னதை மேற்கோள் காட்டுகிறார்கள். ஆகா அந்த அரை யுத்தம் என்ற உள்நாட்டு கலவர யுத்தம் என்பது எதிரிகளை குலை நடுங்க செய்கிறது என்பது பொருளாக பார்க்க படுகிறது. மிக பெரிய ராணுவப்பழம் என்று தம்பட்டம் அடிக்கும் சீன தோல்வியுற்றால் அது வாய்ப்புக்கள் நூற்றுக்கு நூறுசதவீதத்தை குறையாமல் இருக்கிறது, அவர்களால் உலகின் எங்கும் ஜம்பம் அடித்து கொள்ளமுடியாத நிலையம் வாலய் சுருட்டி கொள்ளும் நிலையேற்படுவதால் வேறு வழியின்றி திரும்பும் அவர்களை நம்பி பாகிஸ்தான் இனி எதையும் செய்ய அஞ்சுகிறது. அவர்கள் எந்த பேச்சையும் விட்டு ஒதுங்கி அவர்களின் பகுதிக்குள் சீரமைத்து கொள்ள முயலவே மிகப்பிரயத்தனம் படுகிறார்கள். இதையெல்லாம் செய்தது திறமையான நிர்வாகம், சாணக்கியத்தனம். மிக்க மகிழ்ச்சியுடன் நம்மால் இருப்பதற்கு நமது தலை சிறந்த அரசாள்பவர்களை செல்லவேண்டும். பாராட்டுக்கள் உங்கள் அனைவருக்கும். நன்றி. ஜெய் ஹிந்த்
Rate this:
Cancel
vnatarajan - chennai,இந்தியா
27-பிப்-202115:43:52 IST Report Abuse
vnatarajan திரு ஜெய்சங்கரைப் போல படிப்பு மற்றும் நிர்வாக திறமையுள்ள இந்திய யை ஏ எஸ் அதிகாரிகளை காபினெட் மந்திரிகளாக்கினால் இந்தியாவிற்கும் மற்ற நாடுகளுக்கிடையேயுள்ள பிரச்சனைகளை விரைவில் தீர்த்துவிடலாம்
Rate this:
Cancel
நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா
27-பிப்-202110:37:38 IST Report Abuse
நக்கீரன் ஆம். சீனா உட்பட எல்லா நாடுகளுடனும் உள்ள எல்லா பிரச்சனைகளையும் ஒரேயடியாக தீர்த்து விட வேண்டும். அப்போதுதான் நமது வளர்ச்சியில் கவனம் செலுத்த முடியும். இந்தியாவை எளிதாக நினைத்துக்கொண்டிருந்த சப்பை மூக்கன் இப்போதுள்ள வலிமையான அரசின் செயல்பாடுகளை எதிர்பார்த்திருக்க மாட்டான். இனி, இந்தியா கவனமாக காய்களை நகர்த்த வேண்டும். ஐநா பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பு நாடு என்னும் உரிமையை விரைவில் பெற வேண்டும். இல்லையேல், அந்த அமைப்பையே கேள்விக்குறியாக்க வேண்டும். மோடிஜி செய்து காட்டுவார் என்று நம்புவோம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X