அரசியல் செய்தி

தமிழ்நாடு

பா.ஜ.,வில் ரவுடிகள்: ஸ்டாலின் பதிலடி

Updated : பிப் 28, 2021 | Added : பிப் 26, 2021 | கருத்துகள் (66)
Share
Advertisement
திண்டிவனம்: பா.ஜ.வில் சேர்ந்துள்ள ரவுடிகள் பட்டியலை கூறி பிரதமர் மோடியின் விமர்சனத்துக்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தீவனுாரில் நடந்த 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' கூட்டத்தில் அவர் பேசியதாவது: மோடி தான் பிரதமர் என்பதை மறந்து தரமற்ற முறையில் தி.மு.க.வை விமர்சித்து பேசியதை வன்மையாக கண்டிக்கிறேன்.மோடி
BJP, DMK, MK Stalin, Stalin, பாஜ, ரவுடிகள், ஸ்டாலின், பதிலடி

திண்டிவனம்: பா.ஜ.வில் சேர்ந்துள்ள ரவுடிகள் பட்டியலை கூறி பிரதமர் மோடியின் விமர்சனத்துக்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தீவனுாரில் நடந்த 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' கூட்டத்தில் அவர் பேசியதாவது: மோடி தான் பிரதமர் என்பதை மறந்து தரமற்ற முறையில் தி.மு.க.வை விமர்சித்து பேசியதை வன்மையாக கண்டிக்கிறேன்.மோடி சொல்கிறார் தி.மு.க. ஆட்சியில் அராஜகத்தை கட்டவிழ்த்து விட்டதாகவும் அதில் அதிகம் பாதிக்கப்பட்டது தமிழக பெண்கள் தான் என்று.

என்ன ஆதாரத்தை வைத்து மோடி பேசுகிறார்? அராஜாகத்தை பற்றி யார் பேசுவது. 2002ம் ஆண்டில் குஜராத்தில் நடந்த பச்சை படுகொலையை இந்திய நாடே இன்னும் மறக்கவில்லை.
டெண்டர் பழனிசாமியையும் பாதபூஜை பன்னீர்செல்வத்தையும் மிரட்டி பணிய வைத்து அப்பாவி அ.தி.மு.க. ஓட்டுகளை திருடிப் போக வந்துள்ள மோடிக்கு தி.மு.க.வைப் பற்றி பேச உரிமையில்லை.

நாட்டின் அதிகாரமிக்க பதவியில் இருக்கிற மோடி சமீபகாலமாக தமிழகம், புதுச்சேரியில் பா.ஜ.வில் சேர்ந்து வருபவர்களின் பின்னணி என்ன என்பதை மத்திய உளவுத்துறை மூலம் விசாரித்து பாருங்கள். நான் ஆதாரத்துடன் சொல்கிறேன்.புளியந்தோப்பு பெண் தாதா அஞ்சலை, கல்வெட்டு ரவி, புதுச்சேரி எழிலரசி, சீர்காழி சத்யா, சேலம் முரளி, நெற்குன்றம் சூர்யா, புதுச்சேரி சோழன், விக்கி, பாம் வேலு, டோக்கன் ராஜா, குரங்கு ஆனந்த், குடவாசல் அருண், சீர்காழி ஆனந்த்.

சென்னை பாலாஜி, குடந்தை அரசன், தஞ்சை பாம் பாலாஜி, அரியமங்கலம் ஜாகிர் உசேன், குடவாசல் சீனு, பாக்கெட் ராஜா, பல்லு கார்த்திக், பூண்டு மதன். இவர்கள் எல்லாம் யார் என்று மோடி தயவு செய்து விசாரிக்க வேண்டும். இவர்கள் பற்றி உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் விசாரிக்க கூறுங்கள்.

ஒரு பெண் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் ஜெ. தான் என்று மோடி பேசியிருக்கிறார். நல்ல வேளை இதைக் கேட்க ஜெ. உயிரோடு இல்லை. 'ஜெ.யின் ஐந்து ஆண்டு கால ஆட்சியில் ஊழல் பெருகிவிட்டது. 'ஊழல் நிறைந்த ஆட்சியை மாற்ற வேண்டும்' என 2006ல் ஓசூர் சென்னையில் தான் பேசியதை மோடி மறந்து விட்டாரா?

'குழந்தைகளுக்கு வழங்கப்படும் பாலில் இருந்து பெரியவர்கள் குடிக்கும் மதுபானங்கள் வரைக்கும் ஊழல் செய்தவர் ஜெ.' என்று பேசியவர் உள்துறை அமைச்சர் அமித்ஷா. அ.தி.மு.க.வின் அப்பாவி தொண்டர்களை ஏப்பம் விட வருகிறார் மோடி. இந்த சந்தர்ப்பவாத கூட்டணியை மக்கள் நன்றாக புரிந்து வைத்திருக்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (66)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ram Mayilai - Mayiladuthurai,இந்தியா
28-பிப்-202122:04:02 IST Report Abuse
Ram Mayilai இவர்கள் கட்சி உத்தமர் காந்திகள் நிறைந்த அப்பழுக்கற்ற, சுத்த நீதி, நேர்மை நிறைந்த கட்சி?????.
Rate this:
Cancel
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
27-பிப்-202121:59:29 IST Report Abuse
கல்யாணராமன் சு. \\2002ம் ஆண்டில் குஜராத்தில் நடந்த பச்சை படுகொலையை இந்திய நாடே இன்னும் மறக்கவில்லை.....\\ ........ அதைப்பத்தி உங்கள் காலம் சென்ற தந்தையார் என்ன சொன்னார் என்பதை சற்று நினைவு கூர்ந்தால் நல்லது ............
Rate this:
Cancel
Nagercoil Suresh - India,இந்தியா
27-பிப்-202121:15:06 IST Report Abuse
Nagercoil Suresh தரமான வார்த்தைகளை பயன்படுத்தி போட்டு தாக்குவதே சிறந்தது, எதிர்க்கட்சி டிபென்சிவ் ரோல் எடுக்காமல் இருப்பதே தலைமைக்கு அழகு...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X