அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஆளும் கட்சியை டென்ஷனாக்கிய தேர்தல் கமிஷன்!

Updated : பிப் 28, 2021 | Added : பிப் 26, 2021 | கருத்துகள் (16)
Share
Advertisement
திடீர் தேர்தல் அறிவிப்பு, ஆளும் கட்சியினரை பாடாய் படுத்தி விட்டது.தேர்தல் தேதி, மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்கப்படலாம் என, ஏற்கனவே தகவல் பரவியிருந்தது. சுதாரித்த இ.பி.எஸ்., அரசு, 23ம் தேதி, இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தது. இன்று வரை சட்டசபை நடக்கும் என, அறிவித்தது.அதன்பிறகே, தேர்தல் தேதி அறிவிப்பு இருக்கும் என்றும், ஆளுவோரும், அதிகாரிகளும் எதிர்பார்த்தனர். அதனால், எந்த
TN election, Election Commission, EC, ஆளும் கட்சி,டென்ஷன், தேர்தல் கமிஷன்

திடீர் தேர்தல் அறிவிப்பு, ஆளும் கட்சியினரை பாடாய் படுத்தி விட்டது.தேர்தல் தேதி, மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்கப்படலாம் என, ஏற்கனவே தகவல் பரவியிருந்தது. சுதாரித்த இ.பி.எஸ்., அரசு, 23ம் தேதி, இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தது. இன்று வரை சட்டசபை நடக்கும் என, அறிவித்தது.

அதன்பிறகே, தேர்தல் தேதி அறிவிப்பு இருக்கும் என்றும், ஆளுவோரும், அதிகாரிகளும் எதிர்பார்த்தனர். அதனால், எந்த பதற்றமும் இன்றி, நேற்று காலை, 10:00 மணிக்கு, வழக்கம் போல சட்டசபை கூடியது. எதிர்க்கட்சியினர், 23ம் தேதியே புறக்கணிப்பு முடிவை எடுத்து விட்டனர்.


ஆளும் கட்சியை டென்ஷனாக்கிய தேர்தல் கமிஷன்! திடீர் அறிவிப்பால் பரபரப்பு

தகவல் வெளியானது


சேலம் சென்றிருந்த முதல்வர், நேற்று காலை தான், சென்னை வந்தார்; சபைக்கு வரவில்லை. அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் வந்தனர். கேள்வி நேரம் நடந்த வேளையில், மாலையில், தேர்தல் தேதி அறிவிக்க உள்ளதாக, தகவல் வெளியானது. உடனடியாக, ஆளும் கட்சி வட்டாரத்திலும், அதிகாரிகள் மட்டத்திலும் பரபரப்பு தொற்றியது. அனைவரும் முதல்வரின் வருகையை எதிர்நோக்க, காலை, 11:30க்கு, முதல்வர் இ.பி.எஸ்., சபைக்குள் நுழைந்தார்.

அதைத் தொடர்ந்து, கேள்வி நேரம் முடிந்ததாக, சபாநாயகர் அறிவித்தார். அதன்பின், 110 விதியின் கீழ், முதல்வர் அறிக்கை வெளியிடத் துவங்கினார். கூட்டுறவு வங்கிகளில், ஆறு சவரன் நகை வரை, அடகு வைத்து வாங்கப்பட்ட நகைக் கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவித்தார். ஆளும் கட்சி எம்.எல்.ஏ.,க்கள், மேஜையை தட்டி வரவேற்றனர். அமைச்சர் ஓ.எஸ்.மணியன், அமைச்சர் தங்கமணி ஆகியோர், முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர். அமைச்சர் செங்கோட்டையன் உட்பட, மேலும் பலர் பேச அனுமதி கேட்க, 'வேண்டாம்' என, முதல்வர் அமர வைத்தார்.

பின், சபையில் இருந்து வெளியேறி, தன் அறைக்கு சென்றார், முதல்வர். துணை முதல்வரும், அமைச்சர்களும் பின் தொடர்ந்தனர். அதிகாரிகள் அங்குமிங்கும் ஓடினர். பா.ம.க., தலைவர் ஜி.கே.மணி வந்து, முதல்வரை சந்தித்தார். வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கும், சட்ட மசோதா குறித்து ஆலோசித்தார். மதியம், 2:30 மணிக்கு, பத்திரிகையாளர்களை, முதல்வர் சந்திக்க போவதாக தகவல் வெளியானது. சட்டசபையில், பட்ஜெட் உரை மீதான விவாத்தில், துணை சபாநாயகர் ஜெயராமன், எம்.எல்.ஏ.,க்கள் ராஜன் செல்லப்பா, கீதா, வி.என்.ரவி, முருகுமாறன் ஆகியோர் பேசினர்.


எகிறிவிட்டது


நேரம் செல்ல செல்ல, விரைவாக முடிக்கும்படி, சபாநாயகர் அறிவுறுத்தினார். மாலை, 3:00 மணிக்கு, மீண்டும் சபை கூடும் என, அறிவித்தார்.அதேநேரத்தில், முதல்வர் துவக்கி வைக்க இருந்த திட்டப் பணிகள் அனைத்தும், மாலையில் துவக்கப்படும் என்ற, தகவல் வந்தது. உடனடியாக, தலைமை செயலகம் சென்று, பத்திரிகையாளர்களை சந்தித்து முடித்ததும், திட்டப் பணிகளை, இ.பி.எஸ்., துவக்கி வைத்தார்.மீண்டும் சட்டசபை கூட்டம் நடந்த, கலைவாணர் அரங்கிற்கு வந்தார்.

மாலை, 3:00 மணிக்கு மீண்டும் சபை கூடியது. தா.பாண்டியன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, சபை ஒத்தி வைக்கப்பட்டது. இடைப்பட்ட நேரத்தில், வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு குறித்து, முதல்வரும், அமைச்சர்களும் ஆலோசித்தனர். பின், சட்டசபை கூடி, மசோதா நிறைவேற்றப்பட்டது. தேர்தல் தேதி அறிவிப்பு வரும் என்பது முன்கூட்டியே தெரியாததால், அரசு இன்று ஏற்பாடு செய்திருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன. திடீர் அறிவிப்பால், நேற்று முதல்வர், அமைச்சர்கள் அனைவருக்கும், 'டென்ஷன்' எகிறி விட்டது.
-நமது நிருபர்-

Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karutthu - nainital,இந்தியா
27-பிப்-202117:12:46 IST Report Abuse
karutthu முற்பட்ட வகுப்பினருக்கு தமிழக அரசு எதுவும் செய்யவில்லை ஆனால் வன்னியர்க்கு மட்டும் உள்ஒதுக்கீடு பத்து புள்ளி ஐந்து சதவிகிதம் கொடுத்தது ஏன் ?அப்போ ஓ சி மக்களின் ஒட்டு வேண்டாமா ?ஆனால் இவர்கள் பார்வையில் பிராமணர்கள் இளிச்சவாயன் போல ? ஒரு பிராமணன் ஒட்டு கூட இவர்களுக்கு போடக்கூடாது ....அத்தனை ஓட்டுக்களையம் நோட்டாவிற்கு போடுங்கள் ப்ராமண மக்களே
Rate this:
Cancel
Raman Muthuswamy - Bangalore,இந்தியா
27-பிப்-202115:05:08 IST Report Abuse
Raman Muthuswamy மம்தா தீதியின் கூற்றுப்படி காவிக் கட்சிக்கு ஆதரவாக மேற்கு வங்கத்தில் எட்டு சுற்டிராம் .. கட்சியினர் இடம் பெயர்ந்து மாற்றி மாற்றி வோட்டு போட வசதி அல்லவா ?? மேலும் .. தேர்தல் பாதி நடக்கும்போதே அரோராராஜி பதவி விலகல் .. அதன் பின்னர் ராஜ்ய சபா மெம்பெறா .. அல்லது ஆளுனரா ?? புண்ணியம் செய்தவர்
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
27-பிப்-202113:23:19 IST Report Abuse
Malick Raja கொயந்த கூட நம்பாது .. ஆளுங்கட்சியின் உத்தரவின் படி தேர்தல் தேதி வெளிட்ட தேர்தலானையம் என்பது மாறா உண்மை ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X