ஜாதிவாரி கணக்கெடுப்பு அரசுக்கு 'நோட்டீஸ்'

Added : பிப் 26, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
புதுடில்லி :பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் கணக்கெடுப்பு தொடர்பாக, உச்ச நீதிமன்றம், மத்திய அரசுக்கு 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டுள்ளது. மலேஷ் யாதவ் என்பவர், இந்தாண்டு நடக்க உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது, பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில், ஜாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த, மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.
ஜாதிவாரி கணக்கெடுப்பு  அரசுக்கு 'நோட்டீஸ்'

புதுடில்லி :பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் கணக்கெடுப்பு தொடர்பாக, உச்ச நீதிமன்றம், மத்திய அரசுக்கு 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டுள்ளது. மலேஷ் யாதவ் என்பவர், இந்தாண்டு நடக்க உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது, பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில், ஜாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த, மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.
நேற்று, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி,


latest tamil news



எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு முன், இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனுவை, இதேபோல ஏற்கனவே வந்த மனுக்களுடன் இணைப்பதாக, அமர்வு அறிவித்தது. அத்துடன், இந்த மனுக்கள் தொடர்பாக, கருத்து தெரிவிக்கும்படி, மத்திய அரசு, தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் உள்ளிட்ட அமைப்புகளுக்கு, நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

''மத்திய அரசு அளிக்கும் பதிலைப் பொறுத்து, அடுத்த கட்ட விசாரணையில், உச்ச நீதிமன்றம் உரிய முடிவெடுக்கும்,'' என, மலேஷ் யாதவ் சார்பில் மனு தாக்கல் செய்த, வழக்கறிஞர், ஜி.எஸ்.மணி தெரிவித்து உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
27-பிப்-202118:24:54 IST Report Abuse
Vena Suna திறமையை வலது பொழைங்கடா....ஜாதியை வைச்சு ஒட்டு கேட்க வெக்கமா இல்லையா?
Rate this:
Cancel
A.Muralidaran - Chennai,இந்தியா
27-பிப்-202111:56:37 IST Report Abuse
A.Muralidaran பெரியார் வெங்காய பூமியில் சாதி மறுப்போர் சாதியில்லை என்று தெரிவித்து அரசு சலுகைகள் வேண்டாம் மறுத்துவிடுவார்கள்.
Rate this:
Cancel
27-பிப்-202110:39:07 IST Report Abuse
ஆரூர் ரங் ஒரே பெயரில் பல சாதிகள். பல பட்டப் பெயர்களோடு ஒரே சாதி😉. இதுபோதாதென்று ஒரே சாதி ஒரு மாநிலத்தில் பட்டியலினத்திலும்☹ வேறு மாநிலத்தில் BC அல்லது OC.பிரிவில்😇😇உள்ளனர் .அரசு ஊழியர் தவிர வேறு எத்தனை பெர் உண்மையான வருமானம் சொத்தை கணக்கெடுப்பின்போது தெரிவிப்பர்? ஆகமொத்தம் சாதிவாரி கணக்கீடு 21 ம் நூற்றாண்டின் மிகப்பெரிய 🤣 காமெடி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X