பொது செய்தி

இந்தியா

'பாஸ்டேக்' முறையால் அம்பலமானது ஊழல்

Updated : பிப் 28, 2021 | Added : பிப் 27, 2021 | கருத்துகள் (39)
Share
Advertisement
புதுடில்லி :'பாஸ்டேக்' முறையில், ஒரே நாளில், ரூ.102 கோடி அளவுக்கு, சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளதை பார்க்கும்போது, இதற்கு முன் மிகப்பெரிய முறைகேடு நடந்திருப்பது அம்பலமாகி உள்ளது. சுங்கச் சாவடிகளில், வாகனங்களுக்கான சுங்கக் கட்டணத்தை மின்னணு முறையில் செலுத்தும், பாஸ்டேக் வசதி, 2016ம் ஆண்டு, அறிமுகம் செய்யப்பட்டது. சமீபத்தில், அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் உள்ள
 'பாஸ்டேக்' முறை, ஊழல் அம்பலம்,

புதுடில்லி :'பாஸ்டேக்' முறையில், ஒரே நாளில், ரூ.102 கோடி அளவுக்கு, சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளதை பார்க்கும்போது, இதற்கு முன் மிகப்பெரிய முறைகேடு நடந்திருப்பது அம்பலமாகி உள்ளது.

சுங்கச் சாவடிகளில், வாகனங்களுக்கான சுங்கக் கட்டணத்தை மின்னணு முறையில் செலுத்தும், பாஸ்டேக் வசதி, 2016ம் ஆண்டு, அறிமுகம் செய்யப்பட்டது. சமீபத்தில், அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் உள்ள சுங்கச் சாவடிகளில், இந்த பாஸ்டேக் முறை, கட்டாயமாக்கப்பட்டது.இந்நிலையில், இந்த பாஸ்டேக் முறை வாயிலாக வசூலிக்கப்பட்டுள்ள சுங்க கட்டணம், கடந்த நான்கு நாட்களில், 23 சதவீதம் உயர்ந்திருப்பது தெரியவந்துள்ளது.

அதிகபட்சமாக, கடந்த, 19ம் தேதி மட்டும், நாடு முழுதும், 102 கோடி ரூபாய், பாஸ்டேக் முறையில் வசூலிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில், இவ்வளவு அதிக சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது, இதுவே முதன்முறை.

பாஸ்டேக் முறை கட்டாயம் ஆக்கப்படுவதற்கு முன், 85 கோடி ரூபாய் மட்டுமே, தினசரி சுங்க கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது, 17 கோடி ரூபாய் அதிகமாக வசூலிக்க ப்பட்டுள்ளது. இவ்வளவு காலமாக, நேர்மையற்ற ஊழியர்களால் பல கோடி ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டு வந்துள்ளது, இதன் வாயிலாக தெரிகிறது.ஒரு நாளில், 17 கோடி ரூபாய் என்றால்; ஒரு மாதத்திற்கு, 510 கோடி ரூபாய்; ஒரு ஆண்டுக்கு, 6,120 கோடி ரூபாய் என பெரிய ஊழல் நடந்துள்ளது. இந்த பணத்தை வைத்து, ஒரு நகருக்கு, மெட்ரோ ரயில் திட்டத்தையே கொண்டுவர முடியும்.

Advertisement




வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r.sundaram - tirunelveli,இந்தியா
27-பிப்-202122:22:42 IST Report Abuse
r.sundaram பணம் புழங்கும் இடம் என்றாலே ஊழல் என்றாகி விட்டது. இதை கண்டிப்பாக மாற்றி ஆக வேண்டும்.
Rate this:
Cancel
Mohanraj Raghuraman - Madurai,இந்தியா
27-பிப்-202122:19:49 IST Report Abuse
Mohanraj Raghuraman டோல் வசூலிப்பது முற்றிலும் ரத்து செய்யப்பட வேண்டும். வாகனம் வைத்திருப்போரிடம் வசூல் செய்யப்படும் லைப் டைம் வரியுடன் வசூல் நிறுத்திக்கொள்ளப்பட வேண்டும்.
Rate this:
Cancel
Mohanraj Raghuraman - Madurai,இந்தியா
27-பிப்-202122:13:30 IST Report Abuse
Mohanraj Raghuraman ஒரு புறம் பெட்ரோல் டீசல் மற்றும் காஸ் மூலம் தினசரி விலை ஏற்றதினால் அரசுக்கு செம வருமானம். கேள்வி கேட்பாரில்லை. மற்றொரு புறம் இந்த டோல் மூலமான வாகன வரியால் செம செம வருமானம். இந்த டோல் வசூலிப்பது குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்கு பிறகு முற்றிலுமாக நிறுத்தப்பட வேண்டும். ஆனால், தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இந்த வருமானங்கள் எல்லாம் எங்கே சென்று சேருகின்றன என்பது சம்பந்தப்பட்டவர்களுக்கே வெளிச்சம். தனி ஒரு மனிதனின் நேர்மையான REPEAT. - நேர்மையான வரி செலுத்தும் கடமையை அரசு அலுவலர்களை தவிர வேறு எவரும் மனசாட்சியோடு செய்வதில்லை. கணக்கற்ற மிராசுதார்கள் மிக தெளிவாக வருமானத்தை குறைத்துக்காட்டி வரி ஏய்ப்பு செய்து வருகிறார்கள். இவற்றை பரிசோதிக்கும் சரியான அரசு எந்திரம் இதுவரை இல்லவே இல்லை. அல்லது கண்டுகொள்ளவே இல்லை. பொது மக்கள் மத்திய மாநில அரசுகளின் பகடைகளாகவே அக்கறை இல்லாமல் வாழ்ந்து வருகிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X