போட்டியிட மறுக்கும் எம்.எல்.ஏ., : திரிணாமுல் காங்கிரசில் பரபரப்பு

Updated : பிப் 27, 2021 | Added : பிப் 27, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
கோல்கட்டா: திரிணமுல் காங்., முக்கிய தலைவர்களில் ஒருவரும், எம்.எல்.ஏ.,வுமான சித்திக்குல்லா சவுத்ரி, வரும் சட்டசபை தேர்தலில், சொந்த தொகுதியில் வெற்றி பெற முடியாத சூழல் காரணமாக, போட்டியிட மறுத்துஉள்ளார்.மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. வேடிக்கைஇங்கு, விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதில், 'மோங்கோல்கோட்

கோல்கட்டா: திரிணமுல் காங்., முக்கிய தலைவர்களில் ஒருவரும், எம்.எல்.ஏ.,வுமான சித்திக்குல்லா சவுத்ரி, வரும் சட்டசபை தேர்தலில், சொந்த தொகுதியில் வெற்றி பெற முடியாத சூழல் காரணமாக, போட்டியிட மறுத்துஉள்ளார்.



latest tamil news


மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. வேடிக்கைஇங்கு, விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதில், 'மோங்கோல்கோட் சட்டசபை தொகுதியில் மீண்டும் போட்டியிடப் போவதில்லை' என, திரிணமுல் காங்., சட்டசபை உறுப்பினர் சித்திக்குல்லா சவுத்ரி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:கிழக்கு புர்த்வான் மாவட்ட மண்ணின் மைந்தன் நான். கடந்த தேர்தலில், மோங்கோல் கோட் தொகுதியில், 12 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றேன். ஆனால், கட்சியின் மாவட்ட தலைமை ஒத்துழைக்காததால், தொகுதிக்கு உருப்படியாக எதையும் செய்ய முடியவில்லை. என் தொகுதி, வளர்ச்சியில் பின்தங்கியிருப்பதை என்னால் வேடிக்கை பார்க்க முடியாது. அதனால், வரும் தேர்தலில் மீண்டும் இதே தொகுதியில் போட்டியிடப் போவதில்லை என, கட்சித் தலைமைக்கு தெரிவித்து விட்டேன்.இவ்வாறு, அவர் பேசினார்.


latest tamil news



தலைவலி

நந்திகிராம் போராட்டத்தில், மம்தாவின் வலது கரமாக விளங்கியவர், சித்திக்குல்லா சவுத்ரி. இவர், மேற்கு வங்க அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். திரிணமுல் காங்.,கில் இருந்து சமீபத்தில் பல முக்கிய தலைவர்கள் வெளியேறியுள்ளனர்.இந்நிலையில், சித்திக்குல்லா சவுத்ரியின் முடிவு, மம்தாவுக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
COW URINE SANGI - tamilnadu,இந்தியா
27-பிப்-202117:21:54 IST Report Abuse
COW  URINE  SANGI ஒருகாலத்தில் மாமேதையில் ஆடுபவர்கள் இப்போது காணாமல் போவார்கள் என்றால் இப்போது மமதையில் ஆடுபவர்கழும் எதிர்காலத்தில் காணாமல் போவார்கள் தானே ,
Rate this:
Cancel
ராஜவேலு ஏழுமலை (ஜாதி மத அரசியலை எதிர்ப்போம்.) துரோகிகளை வேரறுத்து, விசுவாசிகளை இனங்கண்டு சீட்டு கொடுக்கவும்.
Rate this:
Cancel
vnatarajan - chennai,இந்தியா
27-பிப்-202116:14:58 IST Report Abuse
vnatarajan இன்னும் எத்தனை எம்மெல்லேக்கள் விளக்கப்போறாங்கனு தெரியல எட்டு கட்ட வாக்குப்பதிவுகளில் ஒவ்வொரு கட்டத்திற்கு முந்தி ஒவ்வொரு எம்மெல்லேயாக விலகி கடைசியில் இவரை தனிமைப்படுத்திவிடுவார்கள்போல் தெரிகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X