தேர்தல் களம் 2021

தமிழ்நாடு

'கேப்டன் ஆபீஸ் வெறிச்'

Updated : பிப் 28, 2021 | Added : பிப் 27, 2021 | கருத்துகள் (23)
Share
Advertisement
'சீ ட்' கேட்க விரும்புவோர், கட்சி அலுவலகத்தில், விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என, தே.மு.தி.க., அறிவித்தது. பிரேமலதா அறிவிப்புக்கு, 'ரெஸ்பான்ஸ்' இருந்தது. ஆனால், மனு தாக்கல் ஆனது, விஜயகாந்த், பிரேமலதா, விஜயபிரபாகரன், சுதீஷ் என, குடும்ப உறுப்பினர்கள் பெயரில் மட்டும் தான். அவர்களே ஏற்பாடு செய்தது என்கின்றனர். ஒரே ஏமாற்றம். அதோடு முதல் நாள் முடிந்தது. இரண்டாவது
'கேப்டன் ஆபீஸ் வெறிச்'

'சீ ட்' கேட்க விரும்புவோர், கட்சி அலுவலகத்தில், விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என, தே.மு.தி.க., அறிவித்தது. பிரேமலதா அறிவிப்புக்கு, 'ரெஸ்பான்ஸ்' இருந்தது. ஆனால், மனு தாக்கல் ஆனது, விஜயகாந்த், பிரேமலதா, விஜயபிரபாகரன், சுதீஷ் என, குடும்ப உறுப்பினர்கள் பெயரில் மட்டும் தான். அவர்களே ஏற்பாடு செய்தது என்கின்றனர்.


ஒரே ஏமாற்றம்.


அதோடு முதல் நாள் முடிந்தது. இரண்டாவது நாளில் ஒருத்தரையும் காணோம். மேஜையும், நாற்காலியும் போட்டு, மனு வாங்க காத்திருந்த நிர்வாகிகளுக்கு ஒரே ஏமாற்றம். தலைமைக்கோ அதிர்ச்சி.ஒரு காலத்தில், நம் கட்சியில் சீட் வாங்க அலை மோதிய கூட்டம், எங்கே போனது என, தலைமைக்கு புரியவில்லை. அப்போதெல்லாம், தொகுதிக்கு, 10 பேராவது பணம் கட்டுவர். ஆட்களை திரட்டி வந்து, பலத்தை காட்டுவர். கோயம்பேடு நுாறடிச்சாலையே வாகன நெரிசலில் திணறும். கடந்த, 2011 தேர்தலுடன், அதெல்லாம் மலையேறி விட்டது. அதிலும், 2016 ல், நாலு தலைவர்கள் சேர்ந்து, ம.ந.கூ., என சொல்லி, 'முதல்வர் ஆக்குகிறோம் வாங்க' என, விஜயகாந்தை இழுத்துச் சென்று, இந்த கதிக்கு ஆளாக்கி விட்டனர். அதற்கு பிறகு, சீண்ட மறுக்கின்றன, பெரிய கட்சிகள்.

இப்போது, கூட்டணியை முடிவு செய்ய முடியாத நிலை. ஆனாலும், 234 தொகுதிகளிலும் போட்டியிட, விருப்ப மனு அளிக்கலாம் என, அறிவித்தது. பொது தொகுதிக்கு, 15 ஆயிரம் ரூபாய், தனித் தொகுதிக்கு, 10 ஆயிரம் ரூபாய் என கட்டணம் நிர்ணயித்தது. முதல் நாளான, 25ம் தேதி, 50 பேர் வந்தனர். இரண்டாவது நாளான நேற்று, ஒருத்தரும் எட்டிப் பார்க்கவில்லை.
வந்த ஓரிருவர் கூட, மனு விற்பனை எப்படி நடக்கிறது என்று பார்க்க வந்ததாக கூற, வாடிப் போனதாம் நிர்வாகிகள் கூடாரம்.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raja - chennai,இந்தியா
28-பிப்-202116:39:11 IST Report Abuse
Raja இந்த நிலைக்கு பெரும் காரணம் வைகோ அவர்கள். இதே நிலை ஸ்டாலின் அவர்களுக்கும் நேரும் போல தெரிகிறது.
Rate this:
Cancel
Ayyasamy.G - TN.sivagiri.thengasi,இந்தியா
28-பிப்-202115:00:08 IST Report Abuse
Ayyasamy.G மனித நேயமிக்கவர் விஜயகாந்த் ...... ,பசிக்கும் மனிதனுக்கு உணவு அளிக்கும் தமிழனின் பாரம்பரியத்தை நிலைநாட்டியவர் விஜயகாந்த் .. வெற்றியோ தோல்வியோ அரசியலில் விஜயகாந்த் முதன்மையானவர் தான் முதல்வர் தான் வாழ்க விஜயகாந்த் புகழ் .
Rate this:
Cancel
Ramu - Birmingham,யுனைடெட் கிங்டம்
28-பிப்-202111:02:01 IST Report Abuse
Ramu கேப்டன் வீட்டில் வேறு யாரும் இல்லையா மிச்ச தொகிதிகளில் போட்டிபோட?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X