இன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்'

Updated : பிப் 27, 2021 | Added : பிப் 27, 2021
Share
Advertisement
இந்திய நிகழ்வுகள் வெடிபொருள் கடத்திய பெண்கோழிக்கோடு: சென்னையில் இருந்து மங்களூரு சென்ற ரயிலில், திருவண்ணாமலையைச் சேர்ந்த ரமணி, கேரளாவின் கண்ணுார் மாவட்டம் தலசேரிக்கு சென்று கொண்டிருந்தார். கோழிக்கோடு ரயில் நிலையத்தில், ரயில்வே போலீசார் நடத்திய சோதனையில், அவரிடம் இருந்து, 177, 'ஜெலட்டின்' குச்சிகள், 350 'டெட்டனேட்டர்கள்' கைப்பற்றப்பட்டன. வெடிபொருட்களை
today crime, round up, இன்றைய கிரைம், ரவுண்ட் அப்


இந்திய நிகழ்வுகள்வெடிபொருள் கடத்திய பெண்

கோழிக்கோடு: சென்னையில் இருந்து மங்களூரு சென்ற ரயிலில், திருவண்ணாமலையைச் சேர்ந்த ரமணி, கேரளாவின் கண்ணுார் மாவட்டம் தலசேரிக்கு சென்று கொண்டிருந்தார். கோழிக்கோடு ரயில் நிலையத்தில், ரயில்வே போலீசார் நடத்திய சோதனையில், அவரிடம் இருந்து, 177, 'ஜெலட்டின்' குச்சிகள், 350 'டெட்டனேட்டர்கள்' கைப்பற்றப்பட்டன. வெடிபொருட்களை பறிமுதல் செய்த போலீசார், ரமணியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

பாக்., 'ஏஜென்ட்' மீது குற்றப்பத்திரிகை

புதுடில்லி: நம் நாட்டில், பாகிஸ்தானின், ஐ.எஸ்.ஐ., உளவுத்துறை, 'ஏஜென்டாக' செயல்பட்ட, குஜராதின் ராஜக்பாய் கும்பர், கடந்த ஆண்டு தேசிய புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டார். இவரது சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பாக, சிறப்பு நீதிமன்றத்தில் கூடுதல் குற்றப்பத்திரிகையை, தேசிய புலனாய்வு பிரிவினர், நேற்று முன்தினம் தாக்கல் செய்துள்ளனர்
.தாக்குதலில் இளைஞர் பலி

காசிஹில்ஸ்: மேகாலயாவின் தென்மேற்கு காசி ஹில்ஸ் மாவட்டத்தில், பள்ளி மாணவியர் விடுதியில் கட்டுமான பணிகளில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது, சமீபத்தில் முகமூடி அணிந்த, 20 பேர், சரமாரி தாக்குதல் நடத்தினர். இதில், அசாமைச் சேர்ந்த ராஜு மொண்டால், 20, பலியான நிலையில், ஏழு பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெறுகின்றனர். மர்ம நபர்களில் மூவர், போலீசாரிடம் சிக்கியுள்ளனர்.


தமிழக நிகழ்வுகள்

வேலியே பயிரை மேய்ந்தது: 22 சவரன் 'அபேஸ்

ஊத்துக்கோட்டை : வீட்டை பார்த்துக் கொள்ள வந்த நபர், வீட்டில் இருந்த, 22 சவரன் நகையை திருடியது தெரிந்து, கைது செய்யப்பட்டார்.

ஊத்துக்கோட்டை அடுத்த, தாமரைப்பாக்கம் கிராமம், அம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் சசிகுமார். இவரது மனைவி மீனா. இவர்களின் மகன் சந்தோஷ்.சந்தோஷிற்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு, சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மகனுக்கு உதவியாக, பெற்றோர், அங்கேயே தங்கி உள்ளனர். வீட்டில், மீனாவின் பெற்றோர் மற்றும் ஆரம்பாக்கத்தில் உள்ள உறவினர் கார்த்திக், 24, இருந்தனர்.

இந்நிலையில், மருத்துவ சிகிச்சைக்கு பணம் தேவைப்பட்டதால், வீட்டிற்கு வந்த மீனா, தன் பீரோவை திறந்தார்.அதில் கம்மல், செயின் உள்ளிட்ட, 22 சவரன் நகைகள் காணவில்லை. இவற்றின் மதிப்பு, 5.62 லட்சம். இது குறித்து, மீனா அளித்த புகாரையடுத்து, வெங்கல் போலீசார் விசாரித்து வந்தனர்.விசாரணையில், வீட்டில் இருந்த கார்த்திக், நகைகளை திருடியது தெரிந்தது. மேலும், 7 சவரன் நகை, உறவினர் சாந்தி என்பவர் மூலம், வங்கியில் அடமானம் வைத்ததும், மீதமுள்ள நகை, வீட்டருகே, பள்ளம் தோண்டி புதைத்ததும் தெரிந்தது. இதையடுத்து, நகைகளை பறிமுதல் செய்த போலீசார், கார்த்திக், 24, சாந்தி, 47, ஆகியோரை, கைது செய்தனர்.

கண்காணிப்பு குறைவால் பட்டாசு விபத்து'

விருதுநகர்:''பட்டாசு ஆலைகளில் விதிமீறல்கள் நடக்கிறதா என்பதை கண்காணிக்க, போதுமான அதிகாரிகள் இல்லாதது ஆய்வில் தெரியவந்துள்ளது,'' என, தேசிய பசுமை தீர்ப்பாயக்குழு தலைவர் கண்ணன் கூறினார்.

பைக் விபத்து: மனைவியுடன் எஸ்.ஐ., பலி

ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துார் அருகே குன்னுாரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், 53; சத்தீஸ்கரில் சி.ஆர்.பி.எப்., - எஸ்.ஐ., ஆக பணியாற்றினார்.

உறவினர் திருமணத்துக்காக, பிப்., 24ல் ஊருக்கு வந்தார். நேற்று காலை, 10:45 மணிக்கு ராஜேந்திரன், மனைவி கற்பகம், 50, ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்துாரில் உள்ள, உறவினர் வீட்டுக்கு, 'பேஷன் புரோ' பைக்கில், 'ஹெல்மெட்' அணியாமல் சென்றனர்.கிருஷ்ணன் கோவில் தனியார் கல்லுாரி அருகே, எதிரே வந்த கார் மோதி, இருவரும் துாக்கி வீசப் பட்டு இறந்தனர். பைக் தீப்பிடித்து எரிந்தது.


latest tamil news


மஞ்சு விரட்டில் மாடு முட்டி 4 பேர் பலி

சிங்கம்புணரி:சிங்கம்புணரி அருகே, அரளிப்பாறையில் நடந்த மஞ்சு விரட்டில், மாடுகள் முட்டியதில் நான்கு பேர் பலியாயினர்.

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேஅரளிப்பாறையில், ஐந்து நிலை நாட்டார்கள் சார்பில், மாசி மகத்தையொட்டி, நேற்று மஞ்சு விரட்டு நடத்தப்பட்டது.காலை, 10:30 மணி முதல் வயல்வெளிகளில் கட்டு மாடுகள் அவிழ்க்கப்பட்டன. மதியம், 1:00 மணிஅளவில் தொழு மாடுகள் அவிழ்க்கப்பட்டன.

நாட்டார்கள் ஊர்வலமாக துணி எடுத்துவந்து, மலை உச்சியில் உள்ள பால தண்டாயுதபாணியை வணங்கி,மஞ்சுவிரட்டை துவக்கி வைத்தனர்.மஞ்சுவிரட்டில் மாடுகள் முட்டியதில், 22 - 45 வயதுடைய நான்கு ஆண்கள் உயிரிழந்தனர். 90க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

சிவகங்கை கலெக்டர்மதுசூதனன் ரெட்டிதலைமையில் அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். 100க்கும் மேற்பட்ட போலீசார், பாதுகாப்பு பணியில்ஈடுபட்டனர்.


latest tamil news


கசிவால் தீவிபத்து: 3 பேர் பலி

திருப்பூர்:திருப்பூர், அருகே வீட்டில் 'காஸ்' கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் பலியாகினர்.
திருப்பூர் - பி.என்., ரோடு பூலுவப்பட்டி அம்மன் நகரை சேர்ந்தவர் சரவணன், 42; பனியன் தொழிலாளி. கடந்த, 21ம் மதியம் வீட்டில் மீன் வறுக்க காஸ் அடுப்பை பற்ற வைக்க முயன்றுள்ளார். ஏற்கனவே, காஸ் கசிவு காரணமாக அந்த அறை முழுவதும் காஸ் பரவி இருந்துள்ளது.இதை அறியாத அவர் அடுப்பை பற்ற வைக்க தீப்பிடித்தது.

தீ விபத்தில், சரவணன், உறவினர் விஜயா, 38, அவரது குழந்தைகள் அஸ்வின்,19, தரணிகா, 18, பக்கத்து வீட்டை சேர்ந்த கோகிலா, 39, ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.அனைவரும், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில், விஜயா நேற்று முன்தினம் இறந்தார். சரவணன், கோகிலா ஆகியோர் நேற்று இறந்தனர். திருமுருகன்பூண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

30ஆயிரம் பணம் திருட்டு

கும்மிடிப்பூண்டி : அரசூர் அருகே, தோப்புக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர், பார்த்தசாரதி, 33. விவசாயி. கடந்த, 23ம் தேதி, வீட்டை பூட்டி கொண்டு, குடும்பத்தினருடன் வேலுாரில் நடைபெற்ற உறவினர் திருமணத்திற்கு சென்று இருந்தார்.நேற்று, மதியம் வீடு திரும்பினார். இடைப்பட்ட நாட்களில், வீட்டின் மொட்டை மாடி கதவை உடைத்து, மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்தனர்.பீரோவில் வைத்திருந்த இரண்டு சவரன் நகை, 30 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடி சென்றனர்.

மகள் கர்ப்பம்: காமுக தந்தை கைது

ஆரணி:மகளை கர்ப்பமாக்கிய தந்தையை, போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த அகஸ்தியம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர், 47 வயது கூலி தொழிலாளி. இவரது, 14 வயது மகள், அரசு பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.மாணவியின் உடல்நிலை மாற்றத்தில், சந்தேகமடைந்த பள்ளி ஆசிரியர்கள், காமக்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, நேற்று முன்தினம் அனுப்பி வைத்தனர்.

பரிசோதனையில், மாணவி எட்டு மாத கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. சமூக நலத்துறை அதிகாரிகள் விசாரணையில், அவரது தந்தையே, அவரை, பலாத்காரம் செய்து, கர்ப்பமாக்கியது தெரிந்தது. ஆரணி அனைத்து மகளிர் போலீசார், அவரை கைது செய்தனர்.

அ.தி.மு.க., அலுவலகத்திலிருந்து புடவைகள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல்

கூடலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூரில், அ.தி.மு.க., ( மாநில வர்த்தக அணி தலைவர் சஜிவன் ) அலுவலகத்திலிருந்து, 2.8 லட்சம் ரூபாய் மதிப்பிலான 1228 புடவைகள் , 3500 துணி பைகளை வருவாய் துறை அதிகாரிகள் இன்று, இரவு பறிமுதல் செய்தனர்.
உலக நிகழ்வுகள்

இந்திய வம்சாவளிக்கு சிறை

சிங்கப்பூர்: தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. லண்டனில் இருந்து, அகதா மகேஷ் எயமலை, 39, என்ற இந்திய வம்சாவளிப் பெண், பிரிட்டனைச் சேர்ந்த, தன் கணவர் நைஜல் ஸ்கியா, 52, என்பவருடன், சிங்கப்பூர் வந்துள்ளார். இரண்டு பேரும் இங்கு தனித்தனியே தனிமைப்படுத்தப்பட்டனர். எனினும், விதிகளை மீறி, அவர்கள் இருவரும், ஓட்டலில் சந்தித்துள்ளனர். இதையடுத்து, கைது செய்யப்பட்ட அவர்கள் இருவருக்கும், இரண்டு வார சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், 55 ஆயிரம் ரூபாய், அபராதம் விதிக்கப்பட்டது

300 மாணவியர் கடத்தல்

லாகோஸ்: ஆப்ரிக்க நாடான நைஜீரியாவின் ஜாம்பாரா மாகாணத்தில் உள்ள அரசுப் பள்ளியில், ஆயுதம் ஏந்திய மர்ம நபர் ஒருவர், நேற்று புகுந்தார். உள்ளே சென்ற அந்த நபர், துப்பாக்கி முனையில் வைத்து மிரட்டி, 300க்கும் மேற்பட்ட மாணவியரை, அங்கிருந்து கடத்திச் சென்றார். பள்ளிக்கு வரும் வழியில், அருகில் இருந்த ராணுவ முகாம் மற்றும் சோதனைச் சாவடியில், அந்த நபர் துப்பாக்கியால் சுட்டதும் தெரியவந்துள்ளது. எனினும், இதில் உயிரிழப்புகள் நேர்ந்ததா என்பது தெரியவரவில்லை. மாயமான மாணவியரை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X