பொது செய்தி

இந்தியா

'லக்கேஜ்' இல்லையா? விமான கட்டணத்தில் சலுகை!

Updated : பிப் 27, 2021 | Added : பிப் 27, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
புதுடில்லி: 'செக் இன் லக்கேஜ்' எனப்படும், கூடுதல் பயணப் பைகள் எடுத்து வராத பயணியருக்கு, விமான கட்டணத்தில் சலுகை வழங்க, விமான சேவை நிறுவனங்களுக்கு, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.பயணியர் விமான சேவை கட்டணங்களை உயர்த்தி, விமான போக்குவரத்து அமைச்சகம், சமீபத்தில் உத்தரவிட்டது. விமான பயணத்தின் போது, பயணியருக்கான இலவச சேவைகள், கட்டண சேவைகளில் சில மாற்றங்களைக்

புதுடில்லி: 'செக் இன் லக்கேஜ்' எனப்படும், கூடுதல் பயணப் பைகள் எடுத்து வராத பயணியருக்கு, விமான கட்டணத்தில் சலுகை வழங்க, விமான சேவை நிறுவனங்களுக்கு, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.latest tamil news


பயணியர் விமான சேவை கட்டணங்களை உயர்த்தி, விமான போக்குவரத்து அமைச்சகம், சமீபத்தில் உத்தரவிட்டது. விமான பயணத்தின் போது, பயணியருக்கான இலவச சேவைகள், கட்டண சேவைகளில் சில மாற்றங்களைக் கொண்டு வர, மத்திய அரசு திட்டமிட்டது.இது குறித்து, பயணியரிடமே கருத்துக்கள் கேட்கப்பட்டன.

அதன் அடிப்படையில், விமான போக்குவரத்து இயக்குனரகம் நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அதன் விபரம்:விமான பயணத்தின் போது, பயணியர் கையில் சுமக்கும் பைகளை தவிர, கூடுதலாக எடுத்து வரும் பைகள், செக் இன் லக்கேஜ் என, அழைக்கப்படுகின்றன.இந்த செக் இன் லக்கேஜ் இன்றி, வெறும் கைப்பையுடன் பயணிக்கும் பயணியருக்கு, விமான கட்டணத்தில் சலுகைகள் அளிக்க அனுமதி வழங்கப்படுகிறது.


latest tamil news


பயண சீட்டு முன்பதிவின் போதே, இது குறித்து தெரிவிக்க வேண்டும். அது, பயணச் சீட்டில் குறிப்பிடப்படும். பயணத்தின் போது, கூடுதல் பைகள் எடுத்து வராமல் இருந்தால் மட்டுமே, இந்த சலுகை பொருந்தும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
27-பிப்-202117:59:52 IST Report Abuse
J.V. Iyer அருமை. அருமை. உடனே செயல்படுத்துங்கள்.
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
27-பிப்-202112:57:14 IST Report Abuse
Ramesh Sargam அப்படி ஒன்றும் பெரிசா சலுகை கொடுத்துவிட மாட்டார்கள் இந்த விமான சேவை நிறுவனங்கள். மிஞ்சி போனா ஒரு நூறோ அல்லது இருநூரோ, அவ்வளவுதான். அப்படி ஒரு வேலை அதிகம் கொடுத்தாலும், அதை சரிக்கட்ட வேறு எங்காவது மறைமுகமாக கட்டணத்தை ஏற்றுவார்கள். ( - Conditions apply)
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
27-பிப்-202114:00:02 IST Report Abuse
Visu Iyerஇதன் நோக்கம் வேற... அவர்கள் கைப் பையுடன் வந்தால் மற்ற செலவுகள் அதிகமாக இருக்கும்.. அப்படி அதிகமாக உள்ள செலவுக்கு ஜிஎஸ்டி வரி உண்டு.. ஆக இதனால் அரசுக்கு தான் வருமானம் கூடும்.. விமான கட்டனத்தினால் வரும் ஜிஎச்டியை விட இந்த செலவுக்கு ஆகும் ஜிஎஸ்டி வசூல் அதிகம்.. .எல்லாம் ஒரு கணக்கு தானுங்க.. இப்படி சொல்லி மக்களிடம் இருந்து அப்படி வசூல் செய்வது.. இது ஒரு வியாபார தந்திரம்....
Rate this:
Cancel
Venkatesh - Chennai,இந்தியா
27-பிப்-202112:51:05 IST Report Abuse
Venkatesh hHpe the airlines will play the game with this to increase the air fares
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X