பொது செய்தி

தமிழ்நாடு

பஸ் ஊழியர்கள் ஸ்டிரைக் இன்று முடிவுக்கு வரும்?

Updated : பிப் 27, 2021 | Added : பிப் 27, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
சென்னை: அரசு பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம், இன்று தொடர்கிறது.அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கான, புதிய ஊதிய ஒப்பந்தம் போடப்படாததால், இரண்டு நாட்களாக, பஸ்களை நிறுத்தி, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால், பணிக்குச் செல்வோர், மாணவர்கள், நோயாளிகள் என, பல தரப்பினரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். அரசு பஸ்கள் மட்டுமே இயங்கும் மாவட்டங்களில், மக்கள் பெரும்
bus, drivers, conductors, strike, end, பஸ், ஊழியர்கள், வேலை நிறுத்தம், முடிவு

சென்னை: அரசு பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம், இன்று தொடர்கிறது.அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கான, புதிய ஊதிய ஒப்பந்தம் போடப்படாததால், இரண்டு நாட்களாக, பஸ்களை நிறுத்தி, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால், பணிக்குச் செல்வோர், மாணவர்கள், நோயாளிகள் என, பல தரப்பினரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். அரசு பஸ்கள் மட்டுமே இயங்கும் மாவட்டங்களில், மக்கள் பெரும் அவதிப்பட்டனர்.இந்நிலையில், நேற்று, அரசு நடவடிக்கை எடுக்கும் என, எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்காலிக ஓட்டுனர், நடத்துனர் தேர்வு, ஆளுங்கட்சி தொழிற்சங்கத்தினரை பயன்படுத்துவது போன்ற நடவடிக்கைகளில், அதிகாரிகள் ஈடுபட்டனர். அதனால், இன்றும் வேலை நிறுத்தத்தை தொடர, போக்குவரத்து தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன.


latest tamil news


இந்நிலையில், சென்னை, தேனாம்பேட்டை, டி.எம்.எஸ்., வளாகத்தில் உள்ள, தொழிலாளர் கமிஷனர் அலுவலகத்தில், இன்று மாலை முத்தரப்பு பேச்சு நடக்கிறது. இதில் உடன்பாடு எட்டப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.ஊதிய ஒப்பந்தம் முடியும் வரை, இந்த மாதம் முதல், 1,000 ரூபாய் இடைக்கால நிவாரணம் வழங்கும்படி, போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர்களுக்கு, போக்குவரத்து துறை செயலர் சமயமூர்த்தி, நேற்று உத்தரவிட்டுள்ளார். அதனால் ஏற்படும் கூடுதல் செலவை, அந்தந்த கழகங்களே ஏற்க வேண்டும் எனவும் தெளிவுபடுத்தி உள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kalidas - Theni,இந்தியா
27-பிப்-202113:17:41 IST Report Abuse
Kalidas அந்த கடன் தள்ளுபடி இந்த கடன் தள்ளுபடி என தேர்தலை மனதில் வைத்து செயல்படும் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் களுக்கு கொடுப்பதற்கு மட்டும் பணம் இல்லை.. கேட்டால் நஷ்டத்தில் இயங்குகிறது என்று சாக்கு சொல்வது.அநேகமாக இவர்களின் கோரிக்கை ஏற்கப்படும் ஏனெனில் தேர்தல் நெருங்குகிறது
Rate this:
Cancel
Adiyamon V Shankar - Chennai,இந்தியா
27-பிப்-202109:48:05 IST Report Abuse
Adiyamon  V Shankar முதலில் அனைத்து பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தி பயணிகளை ஏற்றி போக்குவரத்து கழகங்களுக்கு லாபத்தை ஈட்டித்தரும் செயலை இவர்கள் செய்ய வேண்டும். மாதம் பிறந்தால் சம்பளம் கைக்கு வந்துவிடுகிறது என்ற எண்ணத்தில் பேருந்தை இயக்குபவர்கள் இவர்கள் தனியார் பேருந்தில் வரும் லாபம் அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் வருவதில்லை அதற்கு காரணம் நடத்துனரும் ஓட்டுனரும் தான் வேறு எவரும் கிடையாது. முதலில் இவருடைய பணியை இவர்கள் செவ்வனே செய்து விட்டு பின்பு ஊதிய உயர்வு கோரிக்கை வைப்பது நல்லது.
Rate this:
Cancel
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
27-பிப்-202108:07:07 IST Report Abuse
VENKATASUBRAMANIAN இவர்களுக்கு சம்பளம் கொடுப்பதே மேல். தனியார் மயம் ஆக்கிவிடலாம். கட்டணம் மட்டும் அரசு நிர்ணயம் செய்ய வேண்டும். நன்றாக இருக்கும். திருச்சி சேலம் கோவை தஞ்சாவூர் போன்ற நகரங்களில் மிக சிறப்பாக தனியார் பேருந்துகள் இயக்க படுகின்றன.
Rate this:
தமிழ்வேள் - THIRUVALLUR,இந்தியா
27-பிப்-202110:07:42 IST Report Abuse
தமிழ்வேள்தனியார் பேருந்துகள் நகரத்துக்குளேயே அதிக வேகத்தில் இயக்கி விபத்தை ஏற்படுத்துகின்றனவே ? அதற்கு யார் பொறுப்பு ? வசூல் வெறியில் ஆடுமாடுகள் போல பயணிகளை திணிப்பது யார் கட்டுப்பாட்டில் உள்ளது ? தனியார் செய்யும் அநியாயங்களுக்கு கடிவாளம் போடுவது யார் ?...
Rate this:
Adiyamon V Shankar - Chennai,இந்தியா
27-பிப்-202113:55:29 IST Report Abuse
Adiyamon  V Shankarசரியான கேள்வி இதற்கு முழு பொறுப்பு அரசு பேருந்துதான் இவர்கள் முறையாக பயணியரை ஏற்றி சென்றால் எப்படி தனியார் பேருந்துக்கு வாய்ப்பு கிடைக்கும். தனியார் பேருந்து முதலாளியிடம் பணத்தை பெற்று கொண்டு அவர்கள் வண்டிக்கு பின்னால் நேரத்தை மாற்றி இவர்கள் வண்டியை இயக்குவதுதான் காரணம். மேலும் புறவழி சாலை வழியாக பேருந்தை இயக்குவது புறவழி சாலையில் கூட பேருந்தை நிறுத்தாமல் செல்வது....
Rate this:
தமிழ்வேள் - THIRUVALLUR,இந்தியா
27-பிப்-202114:16:20 IST Report Abuse
தமிழ்வேள்ஓட்டுநர் நடத்துனருக்கு இதில் பொறுப்பு இல்லை ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X