காசோலை மோசடி வழக்குகள் விசாரிக்க தனி கோர்ட் அமைப்பு?

Updated : பிப் 27, 2021 | Added : பிப் 27, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி: 'காசோலை மோசடி வழக்கு விசாரணைகளை விரைவாக நடத்தி முடிக்க, கூடுதலாக தனி நீதிமன்றங்களை ஏன் அமைக்க கூடாது' என, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.கடந்த ஆண்டு ஜனவரி நிலவரப்படி, நாடு முழுதும், 2.31 கோடி குற்ற வழக்குகள், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. மீண்டும் விசாரணைஇதில், காசோலை மோசடி வழக்குகள் மட்டும், 35.16 லட்சம். நிலுவையில் உள்ள மொத்த
check, fraud, special court, supreme court, காசோலை, மோசடி, தனி கோர்ட், உச்ச நீதிமன்றம்

புதுடில்லி: 'காசோலை மோசடி வழக்கு விசாரணைகளை விரைவாக நடத்தி முடிக்க, கூடுதலாக தனி நீதிமன்றங்களை ஏன் அமைக்க கூடாது' என, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

கடந்த ஆண்டு ஜனவரி நிலவரப்படி, நாடு முழுதும், 2.31 கோடி குற்ற வழக்குகள், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.


மீண்டும் விசாரணை


இதில், காசோலை மோசடி வழக்குகள் மட்டும், 35.16 லட்சம். நிலுவையில் உள்ள மொத்த வழக்குகளில், இது, 15 சதவீதமாக உள்ளது.இதையடுத்து, நிலுவையில் உள்ள காசோலை மோடி வழக்குகளை விரைவாக முடிப்பது குறித்து, உச்ச நீதிமன்றம் தானாக முன் வந்து வழக்கறிஞர்கள், சித்தார்த் லுத்ரா மற்றும் கே.பரமேஸ்வர் ஆகியோரை, இவ்வழக்கில் நீதிமன்றத்துக்கு ஆலோசனை வழங்கி உதவுவதற்கான அதிகாரிகளாக, உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு, அக்.,ல், நியமித்தது.


latest tamil newsஇவ்வழக்கு தொடர்பாக, பல்வேறு ஆலோசனைகளை, மூத்த வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.இந்நிலையில், இவ்வழக்கு, தலைமை நீதிபதி, எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் தெரிவித்ததாவது: நாட்டில், நீதி நிர்வாகத்தை சிறப்பாக நடத்த, கூடுதல் நீதிமன்றங்களை அமைக்கும் உரிமையை, சட்டப்பிரிவு, 247 பார்லிமென்ட்டுக்கு அளிக்கிறது.


கால அவகாசம்


இதை பயன்படுத்தி, பல ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் காசோலை மோசடி வழக்குகளை விரைவாக விசாரித்து முடிக்க, கூடுதல் தனி நீதிமன்றங்களை மத்திய அரசு ஏன் உருவாக்க கூடாது.இவ்வாறு, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இது தொடர்பாக முடிவெடுக்க, மத்திய அரசுக்கு கால அவகாசம் அளிக்கும்படி, அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் விக்ரம்ஜீத் பானர்ஜி கூறினார். இதையடுத்து, அடுத்த மாதம், 3ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
suresh kumar - Salmiyah,குவைத்
27-பிப்-202120:36:54 IST Report Abuse
suresh kumar இங்கே காசோலை, எந்த காரணத்திற்க்காக திரும்பி வந்தாலும், போலீசில் கம்பளைண்ட் செய்தவுடன் காசோலை கொடுத்தவரை சிறையில் அடைத்துவிடுவார்கள். பிறகுதான் விசாரணை எல்லாம்.
Rate this:
RajanRajan - kerala,இந்தியா
28-பிப்-202110:09:44 IST Report Abuse
RajanRajanஆம் சரியான நிலைப்பாடு. இது போன்ற சட்டங்கள் நம் ஜனநாயகத்திற்கு தேவை. இங்கே போலீஸ் காம்ப்ளின்ட் பண்ணினதுமே இங்கத்தை போலீஸ் குற்றவாளியை கூப்பிட்டு உடனே தலைமறைவாயிடுன்னு உபதேசம் பண்ணி துட்டு பார்த்துடுவானுங்க. எப்படி சும்மாவா.??...
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
27-பிப்-202110:55:06 IST Report Abuse
RajanRajan காசோலை எப்போ பணமில்லை என்று வங்கியால் திருப்பி அனுப்பப்பட்டது அப்பவே குற்றத்தை ஊர்ஜிதம் செய்து ரேமண்ட் பண்ணி தண்டனையை கொடுக்கிறமாதி சட்டம் வகை செய்ய வேண்டும். இங்கே வாய்தாவிலே துவங்கி வாரண்ட் பிறப்பித்து குற்றவாளி தலைமறைவாகி அவனை போலீசை விட்டு தேடுறது வரை லஞ்சம் ஊழல்னு கதைகதையாம் முந்திரிகாய்ன்னு ஓட்டுவானுங்க. அப்பறம் கேஸ் எப்படி முடியும்.??
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
27-பிப்-202109:49:58 IST Report Abuse
RajanRajan உங்க கோர்ட் ப்ரோஸெட்டிங்ஸ் ஐ மாற்றி அமையுங்கள். நமது சட்ட அமைப்புகள் குற்றங்களின் தரத்தை மட்டுமே தேடி அலைகின்ற ஒரு நிலைப்பாடு இருக்கும் வரை குற்றவாளிகள் குற்றங்கள் பெருகுவதை தடுக்கவே முடியாது. அதாவது உண்மையை சட்டம் தேடி பிடிப்பதற்குள் பொய்மைகள் உண்மைகளாக மாற்றப்பட்டு விடுகிறது. சட்டமும் ஆழ்ந்த நித்திரைக்கு போய்விடுகிறது. குற்றவாளிகள் நேர்மையாளர்களாக சித்தரிக்க பட்டு ஆர்ப்பாட்டம் போராட்டம்னு ஜனநாயகம் ஓடுது. என்று விடிவுகாலம்.??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X