பொது செய்தி

தமிழ்நாடு

சுரப்பா மீதான விசாரணை அறிக்கை மீது இறுதி முடிவெடுக்க ஐகோர்ட் தடை

Updated : பிப் 27, 2021 | Added : பிப் 27, 2021 | கருத்துகள் (21)
Share
Advertisement
சென்னை: அண்ணா பல்கலை துணைவேந்தர் சுரப்பாவுக்கு எதிரான விசாரணை ஆணையத்தின் அறிக்கை மீது எந்த இறுதி முடிவும் எடுக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.அண்ணா பல்கலை துணை வேந்தர் சுரப்பாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிக்க, ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம், விசாரணை நடத்தி

சென்னை: அண்ணா பல்கலை துணைவேந்தர் சுரப்பாவுக்கு எதிரான விசாரணை ஆணையத்தின் அறிக்கை மீது எந்த இறுதி முடிவும் எடுக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.



latest tamil news



அண்ணா பல்கலை துணை வேந்தர் சுரப்பாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிக்க, ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம், விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில், துணை வேந்தர் சுரப்பா தாக்கல் செய்த மனு:அண்ணா பல்கலையில் பல மாற்றங்களை ஏற்படுத்தி, சுதந்திரமான அந்தஸ்துடன் இயங்க, நடவடிக்கைகள் எடுத்தேன். அரசியல் எஜமானர்களுக்கு, நான் சரிப்பட்டு வராததால், விசாரணை ஆணையம் அமைத்து, உயர் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.புகாரை விசாரிப்பதற்காக, ஆணையம் அமைக்கவில்லை; என்னை துன்புறுத்துவதற்காக, எனக்கு எதிராக எந்த புகாரையாவது கண்டுபிடிக்க முடியுமா என்பதற்காக தான், ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. பழிவாங்கும் விதத்தில், களங்கப்படுத்தும் விதத்தில், ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.பல்கலை வேந்தரான கவர்னரால், நான் நியமிக்கப்பட்டேன். கவர்னரின் அறிவுரை இன்றி, விசாரணை குழு அமைக்கப்பட்டு உள்ளது.எந்த ஆதாரமும் இன்றி, ஆரம்ப முகாந்திரம் இன்றி, விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.எனவே, விசாரணை ஆணையத்தின் நடவடிக்கைகளுக்கு, தடை விதிக்க வேண்டும். விசாரணை ஆணையம் நியமித்து, உயர் கல்வித்துறை பிறப்பித்த உத்தரவை, ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறியுள்ளார்.


latest tamil news




இந்த வழக்கு நீதிபதி முன் விசாரணைக்கு வந்த போது சுரப்பா சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கடந்த 2018 ம் ஆண்டு துணை வேந்தராக நியமிக்கப்பட்ட போதும், 2020ம் ஆண்டு வரை சுரப்பாவிற்கு எந்த சிக்கலும் ஏற்படவில்லை. அரியர் தேர்வு ரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்ததாலும், அண்ணா பல்கலைகழகத்தை சீர்மிகு உயர்கல்வி நிறுவனமாக மாற்ற முயற்சித்ததாலும் இட ஒதுக்கீடு கொள்கைக்கு பாதிப்பு ஏற்படும் என்ற தவறான கருத்து காரணமாகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. துணைவேந்தரை நியமிக்க அதிகாரம் கொண்ட கவர்னருக்கு தான், அவரை நீக்கும் அதிகாரம் உள்ளது. கர்நாடகாவை சேர்ந்தவர் என்பதாலும், அரசுக்கு அடிபணிய மறுத்ததாலும் உள்நோக்கத்துடன் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு உள்ளது. ஏப்ரல் மாதம் சுரப்பாவின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில் அவருக்கு எதிரான விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம் மே மாதம் வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. பணிக்காலம் முடிந்த பின் எப்படி நீக்க முடியும். விசாரணை ஆணையம் ஆயிரம் ஆவணங்கள், 100 சாட்சிகள் விசாரணைக்கு அழைக்கப்பட உள்ளது. இது சுரப்பாவின் நற்பெயருக்கு களங்கள் விளைவிக்கும் என்பதால், தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என தெரிவித்தார்.

தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜய் நாராயண், மனுதாரர் கூறுவது போல், அரியர் தேர்வு ரத்துக்கு எதிர்ப்பு, சீர்மிகு கல்வி நிறுவனமாக அறிவிக்க முயற்சித்ததற்காக அவர் மீது விசாரணை நடத்த உத்தரவிடவில்லை. விசாரணையை சந்திக்க அவர் ஏன் அச்சம் கொள்ள வண்டும். விசாரணை ஆணையம் அமைக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது. ஏற்கனவே முன்னாள் துணைவேந்தர்கள் ஊழல் வழக்குகளில் தண்டிக்கப்பட்டுள்ளன. விசாரணை ஆணையம் அறிக்கை அளித்தாலும் அதன் மீது அரசு எந்த உத்தரவும் பிறப்பிக்க போவதில்லை. இந்த விவகாரத்தில் கவர்னர் தான் இறுதி முடிவெடுக்க வேண்டும். மனுவுக்கு பதிலளிக்க இரண்டு வாரம் அவகாசம் வழங்க வேண்டும் எனக்கூறினார்.

கவர்னர் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், துணைவேந்தருக்கு எதிரான விசாரணை ஆணையம் அமைத்த குறித்து கவர்னர் வேதனை அடைந்துள்ளதாக தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து நீதிபதி வைத்தியநாதன், கல்வி நிறுவனத்தின் நற்பெயரை கருத்தில் கொண்டு, சுமூக தீர்வு காண அறிவுறுத்தி, விசாரணை அறிக்கை மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பித்ததுடன், மனுவுக்கு மார்ச் 15ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை அன்றைய தினத்திற்கு ஒத்திவைத்தார்.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
C.SRIRAM - CHENNAI,இந்தியா
27-பிப்-202121:02:57 IST Report Abuse
C.SRIRAM இந்த விசாரணையே தேவையில்லாமல் அவரை டென்ஷன் செய்யவேண்டும் என்பதற்கே . வெட்கம் கேட்ட அரசியல் வாதம். த்ரவிஷர்களின் ஊழலுக்கு ஒத்துழைக்க மறுத்ததின் விளைவு .
Rate this:
Cancel
vnatarajan - chennai,இந்தியா
27-பிப்-202117:08:13 IST Report Abuse
vnatarajan சூரப்பவின் அட்மிஷன் ஆர்டரில் கையெழுத்திட்டிருப்பது கவர்னர். அப்படியிருக்க தன்னிச்சையாக அவர்மேல் விசாரணை ஆணையம் அமைப்பது சரியல்லவே. சூரப்பாவின் துணிச்சலான செயலை நாம் பாராட்டவேண்டும் நேர்மைக்கு எப்போதும் வெற்றி கிடைக்கும்
Rate this:
Cancel
234 லட்சியம் 200 வெற்றி நிட்சயம் - DMK வெற்றிக்கு பாடுபடுவோம் ,வாலிஸ் புட்டுனா
27-பிப்-202112:19:41 IST Report Abuse
234 லட்சியம்  200 வெற்றி நிட்சயம் உண்மையில் ஐவரும் வீரன் தான் போல இவ்வளவு நாள் காத்திருந்து எலேச்டின் தேதி அறிவித்த பிறகு வழக்கு தொடருகிறார் பாருங்கள் இவர் மாவீரன் தான
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X